தொடர்ந்து பயணிக்க வைக்கும் எண்கள்: சென்ற மாதம் எனது Flickr புகைப்பட ஓடையின் மொத்த பக்கப் பார்வைகள் (8 மில்லியன்) 80 லட்சத்தைக் கடந்து விட்டுள்ளன. சிறிய மைல்கல் தான், ஆனால் அர்த்தமுள்ள ஒன்றாகக் கருதுகிறேன்.
வியாழன், 2 ஜூலை, 2026
சிறிய மைல்கல் – ஃப்ளிக்கர்: 80 லட்சம் பார்வைகள்
தொடர்ந்து பயணிக்க வைக்கும் எண்கள்: சென்ற மாதம் எனது Flickr புகைப்பட ஓடையின் மொத்த பக்கப் பார்வைகள் (8 மில்லியன்) 80 லட்சத்தைக் கடந்து விட்டுள்ளன. சிறிய மைல்கல் தான், ஆனால் அர்த்தமுள்ள ஒன்றாகக் கருதுகிறேன்.
புதன், 31 டிசம்பர், 2025
குறிப்பேடு 2025 - தூறல்: 48
#
எனது ஃப்ளிக்கர் பட ஓடை (My Flickr Photostream) :
ஃப்ளிக்கர் தளத்தில் டிசம்பர் 30 வரையிலும் 435 படங்கள் பதிவேற்றம் ஆகி, அன்றன்றையப் படங்களுடன், பழைய படங்களுக்கும் ஆல்பங்களுக்குமான வருகைகளும் சேர்க்கப்பட்டு 2025_ல் 921995 பக்கப் பார்வைகளைப் பெற்றுள்ளதாகக் காட்டுகிறது ஃப்ளிக்கர் புள்ளி விவரம்.
2025_ஆம் ஆண்டுப் படங்கள் தொகுக்கப்பட்ட தனி ஆல்பத்தின் இணைப்பு இங்கே: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/albums/72177720322899258/
17 ஆண்டு ஃப்ளிக்கர் பயணத்தில், இந்த ஆண்டின் இறுதியில் எழுபத்து எட்டு இலட்சத்து இருபதாயிரம் பக்கப் பார்வைகளுடன், 5510 படங்கள் நிறைவு செய்துள்ளேன்.
சென்ற வருடத்தைய புள்ளி விவரம் இங்கே.தொழில் நுட்பப் பிரச்சனையால் ஏப்ரல் தவிர்த்து மாதாமாதம் ஃப்ளிக்கர் தளம் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த புள்ளி விவரங்கள் எனது சேமிப்புக்காகவும் இங்கே:
#ஜனவரி
#மார்ச்
#மே
#ஜூன்
#அக்டோபர்
#நவம்பர்
#டிசம்பர்
இரண்டு கேலரிகளில் "Cover Photo"_வாக கெளரவிக்கப்பட்ட படங்கள்:
மார்ச் மாதத்தில், எழுத்தாளரும், ‘நமது மண்வாசம்’ மாத இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 60_ஆவது நூலின் முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்.. இங்கே.
இடைவெளியின்றி, ஆர்வம் குன்றாமல் இப்பயணம் தொடர்வது மனதுக்கு நிறைவாகவே உள்ளது.
இந்தப் பயணத்துக்கு உறுதுணையாக மற்றுமோர் கருவி புதிதாக உடன் இணைகிறது. எப்போதும் இரு கேமராக்கள் தேவைப்படுகிற சூழலில் 2010_ல் வாங்கிய Nikon D5000 (cropped sensor) கேமரா 14 ஆண்டு காலம் திறம்பட உழைத்த பின், சென்ற வருடம் தன் சேவையை நிறுத்திக் கொண்டது. இடையே 2017_ல் வாங்கிய Nikon D750 (Full frame) கேமராவுடன் தற்போது புதிதாக இணைகிறது Nikon Z5 II Mirrorless Full frame கேமரா. மிரர்லெஸ் தொழில்நுட்பத்தையும் அறிந்து ஆராய்ந்து அனுபவிக்க வேண்டும் இல்லையா:)? அதில் எடுக்கும் படங்களுடனும் 2026_ன் ஒளிப்பட பயணம் தொடரும்.
முத்துச்சரம்:
2025_ஆம் ஆண்டில் மாதம் சராசரியாக 5 பதிவுகள் தர முடிந்திருப்பதே ஆச்சரியம் :). சமீப வருடங்களாக அதிக அளவில் தந்து கொண்டிருந்த ஞாயிறு-வாழ்வியல் சிந்தனைகள் படத் தொகுப்பு இந்த முறை 13 பதிவுகளே. ஹைதராபாத், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் மைசூர் பயணப் பதிவுகள், உயிரியல் பூங்காவில் படமாக்கிய விலங்குகள்-பறவைகளின் படங்கள் தகவல்களுடன், சென்னையில் கோயில்கள் மற்றும் போர்ட்ரெயிட் படத் தொகுப்புகள் சில, தகவல்களுடனான ‘பறவை பார்ப்போம்’ பதிவுகள் ஆகியனவும் வரிசையில் சேருகின்றன.
'சொல்வனம்' இதழில் மொழிபெயர்ப்புப் பதிவுகள் - 3
கவிதைகள்: 'கீற்று' (1); 'நவீன விருட்சம்' (2); 'புன்னகை' (1) ;
'பண்புடன்' இதழில் கவிதைகள் (3), குறுங்கவிதை தொகுப்புகள் (3)
அதிகமாக பதிவுகள் தராத நிலையிலும் இந்த வருடம் வழக்கமான பதிவுகளை விடவும் பழைய பதிவுகளுக்கு அதிகமான பக்கப் பார்வைகள் இருந்தன. முத்துச்சரம் பத்து இலட்சம் பக்கப் பார்வைகளைக் கடந்ததும் இந்த வருடமே. ஒரு கணக்குக்காக இந்த வருட இறுதியின் புள்ளி விவரத்தையும் சேமிக்கிறேன்:
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***
வியாழன், 6 மார்ச், 2025
ஒளிப்பட சவால்.. கடைசி வாரம்; எனது நூல்கள் குறித்து.. - தூறல்: 47
"சென்ற பதிவின்" தொடர்ச்சியாக, தனது இருபத்தியோராவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக ஃப்ளிக்கர் தளம் அறிவித்த 21 நாள் ஒளிப்பட சவாலின் கடைசி வாரத் தலைப்புகளும் நான் சமர்ப்பித்தப் படங்களும் தொகுப்பாக இங்கே:
#நாள் 15: மகிழ்ச்சி
#நாள் 16: விசித்திரம்
#நாள் 17: குடும்பம்
#நாள் 18: உத்வேகம்
#நாள் 19: அன்பு
#நாள் 20: சமூகம்
#நாள் 21: பிரமிப்பு
இந்த சவாலில் உற்சாகமாகப் பல ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டிருந்தனர். வாழ்த்துகள் ஃப்ளிக்கர்!
***
ஃப்ளிக்கர் தளத்தில் ஜனவரி மாதத்தில் எனது பதிவுகளுக்கான புள்ளி விவரங்கள்: சேமிப்பிற்காக இங்கே:
நன்றி ஃப்ளிக்கர்!
***
மகளிர் சிறப்பிதழாக மலர்ந்துள்ள இந்த மாத மண்வாசனை இதழில் கவிதை ஒன்றுக்கு பயன்படுத்தப்பட்டிருந்த, 2011_ஆம் ஆண்டில் நான் எடுத்த படம்:
வயதான காலத்தில் சுயமாக நிற்க விரும்பி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்த மூதாட்டியின் படம் முன்னர் தினமலர், குமுதம் பெண்கள் மலர், குங்குமம் தோழி ஆகிய இதழ்களிலும் இடம் பெற்றிருந்தன.
***
எனது நூல்கள் குறித்து எழுத்தாளரும், கவிஞருமான திருமதி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய விமர்சனங்கள் “இங்கும்” , “இங்கும்” உள்ளன. தனது யுடியூப் சேனலிலும் இந்நூல்கள் குறித்துத் தன் கருத்துகளைப் பதிந்துள்ளார்.
#அடைமழை
#இலைகள் பழுக்காத உலகம்
இலைகள் பழுக்காத உலகம் l ராமலெக்ஷ்மிராஜன் l தேனம்மைலெக்ஷ்மணன்
அன்பும் நன்றியும் தேனம்மை!
***
கவித்துளியாக ஒரு படத்துளி:
***
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025
ஃப்ளிக்கர் - 21_ஆவது பிறந்தநாள் - 21 நாள் ஒளிப்பட சவால்!
10 பிப்ரவரி 2025 தொடங்கி 3 மார்ச் 2025 வரையிலுமாக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தலைப்பை அறிவித்து குறிப்பிட்ட பக்கத்தில் படங்களை சமர்ப்பிக்கக் கேட்டுக் கொண்டது. புதிதாக எடுத்த படங்களாக இருக்க வேண்டியதில்லை. நாம் ஏற்கனவே எடுத்த படங்களில் பொருத்தமானதை குறிப்பிட்ட தலைப்பு மற்றும் #flickr21challenge என tag செய்து அவர்கள் இதற்கென உருவாக்கியிருக்கும் “21 Day Flickr Birthday Photo Challenge” குழுவில் சேர்ந்து விட வேண்டும்.
பரிசுகளைத் தாண்டி பங்களிப்பு முக்கியம் என்பது நான் மற்றும் நம்மில் பலர் “PIT - தமிழில் புகைப்படக்கலை” தளப் போட்டிகள் காலத்திலிருந்து கடைப்பிடித்து வருவது. அதிலும் ஃப்ளிக்கரின் 21 வருடப் பயணத்தில் 17 வருடங்களாகக் கூடவே பயணித்து வரும் நான் பங்கு பெறாவிட்டால் எப்படி:)?
21 தலைப்புகளில் முதல் இரண்டு வாரங்கள் சமர்ப்பித்த படங்கள் உங்கள் பார்வைக்கு..! இவற்றில் 3 மற்றும் 4_ஆம் நாட்களுக்கு மட்டும் இதற்கென்றே எடுத்த படங்கள். மற்ற படங்களின் கீழ் அவை எடுக்கப்பட்ட வருடத்தைக் குறிப்பிட்டுள்ளேன்.
# நாள் 1: துணிவு
# நாள் 2: புள்ளிகள்
புதன், 1 ஜனவரி, 2025
ஃப்ளிக்கர் 5000 - 2024 குறிப்பேடு - தூறல்: 45
இந்த வருடம் சராசரியாக வாரம் ஒரு பதிவு..
வாழ்வியல் சிந்தனைகளுடனான ஞாயிறு படத் தொகுப்புகள் 30; மொழிபெயர்ப்பு கவிதைகள் 5; நூல் மதிப்புரை 1; பயணங்கள் குறித்த பதிவுகள்.. என.
2008_ல் ஆரம்பித்த ஃப்ளிக்கர் தளத்தின் பட ஓடை (photostream) 5000 படங்களைக் கடந்தது இவ்வருடம் நவம்பர் மாதத்தில்..
5000 படங்களைக் கடந்து விட்டதை சில தினங்கள் கழித்தே கவனித்தேன். பலரின் பாராட்டுகளைப் பெற்றுத் தந்த திருமலை நாயக்கர் மகாலின் இந்தப் படமே அந்த இடத்தைப் பிடித்திருந்தது.
டிசம்பர் முதல் வாரத்தில் “எனது ஃப்ளிக்கர் வருடம் 2024” என ஃப்ளிக்கர் தளம் அனுப்பி வைத்தத் தகவல் குறிப்பு:
ஞாயிறு, 31 டிசம்பர், 2023
2023 குறிப்பேடு - தூறல் 44
2023 குறிப்பேட்டினைப் புரட்டிப் பார்க்கும் நேரம்:)!
தினமொரு படமெனத் தொடரும் எனது ஃப்ளிக்கர் பயணத்தில் 365 நாளும் என்பது எளிதல்ல என்பதை வருடாந்திர ஆல்பம் தொகுக்கத் தொடங்கியக் கடந்த இரு வருடங்கள் எனக்குப் புரிய வைத்தன. கடந்த இரு வருடங்களிலும் எண்ணிக்கை 262 மற்றும் 251 ஆக இருக்க, இவ்வருடத்தில் 300_யை தாண்ட வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆயினும் அதற்காகப் பிரத்தியேகமாக மெனக்கிடவில்லை. ஆனால் இன்று சரியாக எண்ணிக்கை 300-யைத் தொட்டிருப்பது இனிய ஆச்சரியம் :).
இயற்கையின் ஆசிர்வாதத்தில் பறவைகள், பூக்கள் மற்றும் மனிதர்கள், குழந்தைகள், டேபிள் டாப் படங்கள் (கொலு மற்றும் கார்த்திகை தீப series அடங்கிய 2023 ஆல்பத்தின் இணைப்பு: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/albums/72177720305009769/ .
ஞாயிறு, 16 ஜூலை, 2023
எல்லாம் நலம் - ஃப்ளிக்கர் 60 இலட்சம்
#1
வியாழன், 16 பிப்ரவரி, 2023
‘வகவம்’ இலங்கை காலாண்டிதழ் ; என் ஃப்ளிக்கர் ஆண்டு 2022 - தூறல்: 44
இலங்கையில் வசிக்கும் எழுத்தாளரும் கவிஞருமான மேமன் கவி (அவர் குறித்து இங்கே அறியலாம்: விக்கிப்பீடியா) சென்ற ஆண்டு தொடங்கியுள்ள புதிய காலாண்டிதழ் வகவம்.
பாப்லோ நெருடா பற்றி நான் எழுதி சொல்வனத்தில் வெளியான கட்டுரை மற்றும் கவிதைகளின் தமிழாக்கத்தை வாசித்து விட்டு,
வியாழன், 5 ஜனவரி, 2023
யாவும் நலமே - தூறல்: 43
அனைவருக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வெள்ளி, 31 டிசம்பர், 2021
2021 - தூறல்: 41
வேகமாக விடை பெற்ற 2021_யைத் திரும்பிப் பார்க்கிறேன்.
எனது ஃப்ளிக்கர் பக்கத்தில் “ Uploads of 2021 ” எனத் தனி ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருந்ததால், அது 365 நாட்களில் 261 நாட்கள் நான் படங்கள் பதிந்து வந்திருக்கிறேன் எனக் கணக்குக் காட்டுகிறது :)!
#
வழக்கமான இயற்கை மற்றும் பறவைகள் படங்களோடு, கொலுப் பொம்மைத் தொடரும், கார்த்திகை தீபத் தொடரும் நான் ரசித்துப் பதிந்தவை.
பிப்ரவரி மாதத்தில் ஃப்ளிக்கர் பக்கம் 50 இலட்சம் பக்கப் பார்வைகளைக் கடந்தது ஒரு மைல் கல்.
புதன், 26 மே, 2021
ஃப்ளிக்கர் நாலாயிரம்.. சூரிய ஒளிவட்டம்.. - தூறல்: 40
இடைவிடாது ஒன்றில் குறையாத ஆர்வத்துடன் ஈடுபடுவதும், அதைத் தொடர முடிவதும் கொடுப்பினை. நாலாயிரம் என்பது ஒரு இலக்கம், அவ்வளவே. நிச்சயமாக எண்ணிக்கை என்றும் இலக்கு அல்ல. 2008_ஆம் ஆண்டு ஆரம்பித்த ஃப்ளிக்கர் கணக்கின் ஒளிப்பட ஓடையில் 51,75,000++ பக்கப் பார்வைகளைப் பெற்று 4000 படங்களைப் பதிந்து முடித்துக் கடந்து கொண்டிருக்கிறேன். சுற்றியுள்ள உலகம் பெரும் சோர்வைத் தந்திருக்கும் இவ்வேளையில் மனதிற்கு சிறு வெளிச்சம் தருகின்றது கடந்து வந்த இப்பாதை.
நாலாயிரமாவது படமாகப் பதிந்த சூரிய ஒளிவட்டம். நேற்று முன் தினம் 24 மே அன்று,
செவ்வாய், 9 பிப்ரவரி, 2021
ஃப்ளிக்கர் - ஐம்பது இலட்சம்
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/
இப்போதுதான் கவனிக்கிறேன். "ஐம்பது லட்சம்" பக்கப் பார்வைகளைத் தாண்டி எனது ஃப்ளிக்கர் ஒளிப்பட ஓடை. 2008_ஆம் ஆண்டு தொடங்கிய பயணம். தவம் போல் தொடருகிறேன். நான் நேசிக்கும்

.jpg)





.jpg)

%20-%20A.jpg)


.jpg)






















.jpg)
