ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

ஓடி விளையாடு பாப்பா

#1
 ஓடி விளையாடு பாப்பா

#2
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

#3
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ 
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

#4
தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு 
தீங்கு வர மாட்டாது பாப்பா

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

பெங்களூரு காடு மல்லேஸ்வரர் ஆலயமும்.. நாக தேவர்களும்..

#1

#2
பெங்களூரில் மிகப் பழமை வாய்ந்ததும் முக்கியமான பகுதியும் ஆகும் மல்லேஸ்வரம்.

#3 கோபுரமும் கொடி மரமும்...

இங்கே புராதான காலத்துக்குக் கோவில்களோடு புதிய பல கோவில்களும் எழுந்தபடியே உள்ளன. சம்பங்கி சாலையின் பின்புறம், கோவில் தெரு என்றே அழைக்கப்படும் 15ஆம் குறுக்குத் தெருவில் பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட நந்தி தீர்த்த ஆலயம் குறித்து இங்கே பகிர்ந்திருந்தேன். அதே தெருவில் அதற்கு நேர் எதிரே உள்ளது காடு மல்லேஸ்வரர் ஆலயம்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

உயிரோட்டம்

#1  குறுநகை
மாற்றங்கள் வரவேற்புக்குரியவை. காலத்திற்கேற்ப ‘PiT - தமிழில் புகைப்படக் கலை’ தளத்தின் அடுத்தக் கட்ட நகர்வு:

புகைப்படக் கலையில் தமிழ் நண்பர்கள் திறனையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற ஒரே நோக்கத்துடன் பாடங்கள், அனுபவக் குறிப்புகளோடு எட்டரை ஆண்டுகளாக இயங்கி வருகிறது PiT தமிழில் புகைப்படக்கலை தளம் என்பதை அறிவீர்கள். இடைவிடாமல் வேறுவேறு தலைப்புகளில் நடத்தப்பட்டு வந்த மாதாந்திரப் போட்டிகள், இனி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த Facebook https://www.facebook.com/groups/488597597986621/  குழுவின் மூலமாக தொடர முடிவாகி, இம்மாதப் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#2 வெள்ளந்திச் சிரிப்பு

ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கணக்கை உருவாக்கிக் கொள்வது அவசியம். இணையம் பயன்படுத்தும் யாவரும் பதிவுலகில் இருப்பதில்லை. ஆனால் ஃபேஸ்புக் கணக்கு இல்லாதவர்கள் அபூர்வமே. போட்டி ஆல்பத்தில் படங்களைச் சேர்ப்பதை எளிமைப் படுத்தவே பிட் ஃபேஸ்புக் நோக்கி நகர்ந்து, இம்மாதம் இப்புதிய குழுவை ஆரம்பித்துள்ளது. இதுவரையில் 300+ பேர்கள் ஆர்வத்துடன் இணைந்திருக்கிறார்கள். ஆனால் முன்னரே பிட் தளத்தில் பகிரப் படும் பதிவுகளை உடனுக்குடன் அறிந்திட https://www.facebook.com/photography.in.tamil/ எனும் ஃபேஸ்புக் பக்கம் இரு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு அதை 3300+ வாசகர்கள் தொடர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் இப்பக்கத்தை ‘லைக்’ செய்து பதிவுகளைத் தொடரலாம்.

#3 புன்முறுவல்
Living things - உயிருள்ளவை ” என்பதே 2016 பிப்ரவரி போட்டிக்கு நடுவர் நவ்ஃபல் அறிவித்திருக்கும்  தலைப்பு. மனிதர்களாகவோ பிறஜீவராசிகளாகவோ இருக்கலாம். உயிரோட்டத்துடன் படங்கள் இருக்கவேண்டும் என்பது அவர் சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டிய விதி. மற்ற பொது விதிமுறைகள் இங்கே.  இப்போது சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

#4 யாரை நம்பி நான் பொறந்தேன்..

புதன், 17 பிப்ரவரி, 2016

“இயற்கையைப் படமாக்குவது தியானம்..” நேர்காணல்.. தமிழ் யுவர்ஸ்டோரி.காமில்..

இன்று 17 பிப்ரவரி 2016, தமிழ் யுவர் ஸ்டோரி.காமில் எனது நேர்காணல்.

நன்றி யெஸ். பாலபாரதி !

ணையம் பயன்படுத்தும் தமிழ்வாசகர்களிடம் மிகவும் அறிமுகமான பெயர் ராமலக்ஷ்மி. இவர் ஒரு பன்முகத்திறன் கொண்ட எழுத்தாளர். எழுத்தாளராகவும், நல்ல வாசகியாகவும் இருப்பது அவரது மொழியாளுமையைக் காட்டுகிறது என்றால் ஒரு புகைப்படக் கலைஞராக அவர் உருவாக்கும் படைப்புகள் அவரது காட்சி சார்ந்த நுன்ணுர்வைக் காட்டுகிறது. தான் கடந்துவந்த பாதையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.


“..... இலக்கை நோக்கிய பயணமாக இல்லாமல் இயன்றவரை சிறப்பாகச் செய்யும் நோக்கத்துடன் பயணிக்கிறேன். ..." 

குழந்தைப்பருவம்

 “சிறுவயது அனுபவங்களால் கிடைக்கிற பக்குவம் வாழ்நாள் முழுவதும் துணை வருவதாக நம்புகிறேன். பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி சிந்துபூந்துறையில். உறவுகள் சூழ்ந்த கூட்டுக் குடும்பத்து நினைவுகள் அனைத்துமே பொக்கிஷங்கள். உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், தம்பி, இரண்டு தங்கைகள். எனக்கு ஒன்பது வயதாக இருக்கையில் அப்பா விபத்தில் காலமாகி விட தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தோம். நான் கல்லூரி நுழைந்த சமயம், தாத்தா காலமானார். அதே வருடம் அண்ணனும் தவறியது ஆறாத ரணம். அதிலிருந்து அம்மா மீண்டு வர அவரது பெற்றோர் வசித்த பகுதிக்கு, எங்கள் கல்லூரிக்கு சற்று அருகே குடி பெயர்ந்தோம். பெண் பிள்ளைகளுக்கு படிப்பு எதற்கு, அடுத்தடுத்து திருமணம் செய்து வைத்து விடலாமே என உறவினர்கள் பலர் சொன்னபோது, உறுதியாக இருந்து எங்கள் மூவரையும் முதுகலைப் பட்டம் வாங்க வைத்தார் அம்மா.

 “உறவுகள் சூழ்ந்த கூட்டுக் குடும்பத்து நினைவுகள் அனைத்துமே பொக்கிஷங்கள். ”
பொருளாதார ரீதியான பிரச்சனைகள் பெரிதாக இருக்கவில்லை என்றாலும் அப்பாவின் மறைவுக்குப் பிறகு, எதிலும் அதிக ஆசை கூடாதெனச் சொல்லி வளர்த்தார் அம்மா. அதன்படி நாங்கள் நடந்து கொண்டதே தனக்குப் பெரிய பலமாக அமைந்ததென்று இப்போது அடிக்கடி குறிப்பிடுவார். அதனாலேயே எந்த உயர்வுகளையும் இயல்பாக எடுத்துக் கொண்டு தற்போது நாங்கள் கடந்து செல்வதாகவும் சொல்வார். எந்த பிரச்சனையும் பாஸிட்டிவாக அணுகவும் அவரிடமே கற்றோம்.

கல்லூரி மற்றும் திருமணம்

வியாழன், 11 பிப்ரவரி, 2016

என் பூனைகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (10) - நவீன விருட்சத்தில்..

றிவேன். நான் அறிவேன்.
வரையறுக்கப்பட்ட அவைகளை,
அவற்றின் வேறுபட்ட தேவைகளை
மற்றும்  கவலைகளை.

ஆயினும் அவற்றைக் கவனித்து
அவற்றிடமிருந்து கற்றுக் கொள்கிறேன்.
சிறிதளவே அவை தெரிந்து வைத்திருப்பது
எனக்குப் பிடிக்கிறது,
அவை அறிந்தவை மிக ஆழமானவை.

புதன், 10 பிப்ரவரி, 2016

உள்ளம் உடைமை

#1
‘வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை அல்ல. உணர்ந்தறிய வேண்டிய உண்மை’ - Søren Kierkegaard. 

#2
மன உறுதி.. பெரும் சக்தி!


#3
'கனவுகளுக்குக் கிடையாது காலாவதித் தேதி. மூச்சை இழுத்து விட்டு முயன்றிடுங்கள் மீண்டும்.’ _ Kathy Witten.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin