ஞாயிறு, 16 அக்டோபர், 2022

கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே.. - பொம்மைத் திருவிழா 2022 (பாகம் 1)

கடந்த சில வருடங்களாக நவராத்திரி கொலு விஜயங்களையும் அங்கு எடுக்கும் படங்களையும் பகிர்ந்து வந்துள்ளேன். குறிப்பாகத் தங்கை வீட்டுக் கொலு. அந்த வரிசையில் இந்த வருடக் கொலுவில் அவர் தேடி வாங்கி சேர்த்தப் புது பொம்மைகள் உங்கள் பார்வைக்கு. 

கொலு வைக்க ஆரம்பித்ததில் முக்கியமாக வைக்க வேண்டியவற்றை மட்டும் முதல் வருடம் வாங்கி விட்டுப் பின் ஒவ்வொரு வருடமும் அவர் நிதானமாகப் பொம்மைகளை சேர்த்து வருவது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. நேர்த்தியான தேர்வாக அவை இருப்பது கூடுதல் சிறப்பு.

கீழ்வரும் பொம்மைகளில் சில பெங்களூர் ஜெயநகரிலும், சில சென்னை பூம்புகாரிலும்,  சில ஆர்டர் கொடுத்து செய்தும் வாங்கப்பட்டவை.

#1
“ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப...”

#2
“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.”

#3
“வேலுண்டு வினையில்லை 
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே.”


#4
ஸ்ரீதேவி-பூதேவி சமேத திருமால்

#5
 ஸ்ரீ பாமா ருக்மணி தாயார் சமேத 
ஸ்ரீ கிருஷ்ணர்

#6
பசுதேவி காமேதேனு

#6
சமயக்குரவர் நால்வர்


#8
“கடமையைச் செய், 
பலனை எதிர்பார்க்காதே..”
#9

விஸ்வரூப தரிசனம்
**

* கைப்பேசியில் பதிவைப் படிப்பவர்கள் படங்களை க்ளிக் செய்து பெரிதுபடுத்திக் கொண்டால் தெளிவாகப் பார்த்து ரசிக்கலாம். 


*மொத்த கொலுவையும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

***



12 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் - பொம்மைகள் யாவும் - அருமை.  காமதேனுவுக்கு குந்தவை சாயல் அடிக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.

      //குந்தவை சாயல்// ஊரெங்கும் பொ.செ 1 காய்ச்சல் :)!

      நீக்கு
  2. கொலு படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. பொம்மைகள் மிக அழகு. காமதேனு அருமை! சமயக்குரவர் நால்வரும் புதியதாய் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.


      நால்வர் பொம்மைகள் தொன்றுதொட்டு கொலுவில் இடம் பெறுபவையே. எனது இந்தப் பதிவில் https://tamilamudam.blogspot.com/2017/09/blog-post.html இருக்கும், சிறுவயது காலத்து கருப்புவெள்ளைப் படத் தொகுப்பில் 3 படங்களில் கொலுவின் மேற்படியில் உயரமான நால்வர் பொம்மைகள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

      நீக்கு
  4. ஒவ்வொரு படமும் மின்னுகிறது ....ஆஹா

    பதிலளிநீக்கு
  5. பொம்மைகள் எல்லாம் அழகு.
    பொம்மை திருவிழாவை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. அடுத்த பாகமும் இதோ வெளியாகி விட்டது:).

      நீக்கு
  6. பொம்மைகள் அனைத்தும் அழகு! அதுவும் முதல் பொம்மை அட்டகாசம்! உங்கள் தங்கையின் ரசனையைத்தான் பாராட்டத்தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுகளைத் தங்கைக்குத் தெரிவிக்கிறேன். நன்றி மனோம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin