ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

செயல் திட்டம்

 #1

“நன்றியுடையவர்களாக இருங்கள், 
மேலும் நன்றியுடையவராகிடும் சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.”

#2
“திட்டம் வெற்றி பெறவில்லையெனில்,  
இலக்கினை அல்ல, திட்டத்தை மாற்றிப் பாருங்கள்.”

#3.
“வாழ்க்கையில் முன்னேற்றம் 
வாய்ப்புகளால் அல்ல, மாற்றங்களால் ஏற்படுகிறது.”


#4.
“மலர்கள் நண்பர்களைப் போன்றவை. 
உங்கள் உலகிற்குள் 
வண்ணங்களைக் கொண்டு வருபவை.”

[30 ஜூலை, உலக நண்பர்கள் தினத்தன்று ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த படம்.]

#5.
“மலர்கள் நினைவூட்டட்டும், 
மழை ஏன் மிக அவசியம் என்பதை.”


#6.
“நாம் எளிதாக வாழ்ந்திடுவோம் 
புத்தம்புதிய இன்றைய கணத்தின் மலர்ச்சியில்,
 பரிசுத்தமான மனதின் தெளிவில்.”
_  Matthieu Ricard.

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 147

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

6 கருத்துகள்:

  1. அருமையான படங்கள். அந்த பிங்க் செம்பருத்தி அழகு. முதல் படமும் ...

    பொன்மொழிகளும் சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மலர்கள் எல்லாம் அழகு.
    தோட்டத்து மலர்கள் அருமையான வாழ்வியல் சிந்தனைகளை தருகிறது.

    பதிலளிநீக்கு
  3. கறுப்புப் பின்னணியில் சிவப்பு மலர் அழகு.  வெண்ரோஜாவும் அழகு.  வரிகள் வழக்கம் போல அழகு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin