மோசமில்லை, அப்பா, மோசமில்லை
நான் நினைக்கிறேன் நீங்கள் நீங்களாக அதிகம் இருப்பது நீங்கள் நீச்சலடிக்கும் பொழுதுகளில்;
ஒவ்வொரு வீச்சுக்கும் நீரைத் துண்டமிட்டபடி,
உங்கள் வாய் ஒரு பக்கமாக வளைந்து கொள்வது.
நீங்கள் இங்கிருந்து அங்குவரை செல்வது
அருமையும் அல்ல பரிதாபத்துக்குரியதாகவும் அல்ல.
உங்களால் எந்தப் பதங்கங்களையும் வெல்ல முடியாது, அப்பா,
ஆனால் நீங்கள் மூழ்கி விட மாட்டீர்கள்.
நான் நினைக்கிறேன் எப்படி எல்லாமே வேறுமாதிரியாக இருந்திருக்கும்
என்னால் மட்டும் உங்கள் அன்பை மதிப்பிடத் தெரிந்திருந்தால்,
நீச்சலில் உங்களது பக்கவாட்டு வீச்சு, உங்களது பட்டாம்பூச்சி நுட்பம் மற்றும்
ஆஸ்திரேலிய தவழ்தலை மதிப்பிடத் தெரிந்திருந்தது போல.
ஆனால் நான் எப்போதும் நினைப்பேன்
நமக்கிடையே இருக்கும் அந்தப் பனிப் பெருங்கடலில் நான் மூழ்குவதாக,
நான் எப்போதும் நினைப்பேன் என்னைக் காப்பாற்ற நீங்கள் மிக மெதுவாக நகருவதாக,
உங்களால் முடிந்த வரையில் நீங்கள் வேகமாக நகருகையிலும்.
*
மூலம்:
"Not Bad, Dad, Not Bad"
By
Jan Heller Levi
*
ஜேன் ஹெல்லர்:
கவிஞர் ஜேன் ஹெல்லர் லெவி 1954_ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்து, மேரிலான்டில் உள்ள பால்டிமோர் நகரில் வளர்ந்தவர். சாரா லாரன்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். 1999_ல் வெளியான Once I Gazed at You in Wonder (ஆச்சரியத்தால் ஒருமுறை உன்னை உற்று நோக்கினேன்) எனும் இவரது கவிதைத் தொகுப்பு அமெரிக்கக் கவிஞர்கள் கழகத்தின் வால்ட் விட்மன் விருதைப் பெற்றது.
2005 மற்றும் 2019_ஆம் ஆண்டுகளில் முறையே Skyspeak, That’s the Way to Travel ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இவரது கவிதைகள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்த, பெண்களின் வாழ்க்கையைக் குறித்த பார்வையாக அமைந்துள்ளன.
நியூயார்க் நகரில் உள்ள ஹன்டர் கல்லூரியில் நுண்கலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். எழுத்தாளர் கிரிஸ்டோஃப் கெல்லர் இவரது கணவர். நியூயார்க் நகரிலும் சுவிட்சர்லாந்திலுமாக மாறி மாறி வசித்து வருகிறார்.
*
படங்கள்: நன்றியுடன்.. இணையத்திலிருந்து..
*
கடந்த இருபதிவுகளில் வெளியான கவிதைகளோடு இந்த கவிதையும் சேர்த்து சொல்வனம் இதழ்: 275_ல் "இங்கே.."
நன்றி சொல்வனம்!
விருது கொடுக்கும் அளவு அவர்களுக்கு வித்தியாசமாய் ஏதோ தெரிந்திருக்கிறது!
பதிலளிநீக்குகவிதையையும் விவரத்தையும் ரசித்தேன்.
நன்றி ஸ்ரீராம்.
நீக்குரசனையான கவிதை. அவரைப் பற்றிய விவரங்களையும் அறிகிறேன்
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குகவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
சொல்வனத்தில் இடபெற்றதற்கு வாழ்த்துகள்.
நன்றி கோமதிம்மா.
நீக்குநீச்சலை மதிப்பீடு செய்வது போலத் தந்தையின் உள் மனதில் இருக்கும் அன்பை உணர்வது என்பது இளமைக் காலத்தில் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. வாழ்த்துக்கள். நன்றி.
பதிலளிநீக்குஉண்மைதான். தங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
பதிலளிநீக்கு