புதன், 20 ஜனவரி, 2010

தமிழ்மணம் விருது 2009..வெற்றிப் பதக்கங்கள் இரண்டு..மகிழ்வும் நெகிழ்வும்..!

இரண்டு விருதுகள்! இரண்டு பதங்கங்கள்! இரட்டை சந்தோஷம்!

சமூக விமர்சனங்கள் பிரிவில் முதல் பரிசாக தங்கப் பதக்கம்
‘இவர்களும் நண்பர்களே..’ பதிவுக்கு!


காட்சிப் படைப்புகள் பிரிவில் இரண்டாம் பரிசாக வெள்ளிப் பதக்கம்‘LAND MARK - July PiT மெகா போட்டிக்கு..’ பதிவுக்கு!



நன்றி தமிழ்மணம்! நன்றி நண்பர்களே!

ம் படைப்புகளை உலகம் அறியத் திரட்டித் தருவதோடு நின்று விடாமல் வருட முடிவில் போட்டியும் நடத்தி விருதுகள் வழங்கி வரும் தமிழ்மணத்தின் மகத்தான சேவைக்கு வணக்கங்கள்! இந்த வருடமும் திருவிழா போல நடந்து முடிந்த போட்டியின் முடிவுகள் இங்கே!

வாக்களித்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

ஏனைய பிரிவுகளில் பரிசு பெற்ற மற்றவருக்கும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

மூகம் பிரிவில் நான் பெற்றிருக்கும் முதல் இடம் சற்றும் எதிரே பாராதது. அப்பதிவில் சொல்லப்பட்டவை பலரையும் சென்றடைய ஒரு வாய்ப்பாக இருக்கட்டும் என்றே போட்டிக்குப் பரிந்துரைத்திருந்தேன்.

ஒருவர் எழுதியதை வாசிக்கையில் அது சம்பந்தமாக மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர் பதிய.. இன்னும் பலர் தொடர.. என்பது வலையுலகில் நிலவும் ஆரோக்கியமான சூழல். தொடர் பதிவுகளின் நோக்கமும் கூட அதுவேதான், அழைப்பாக வருகையில் பலவற்றை என் வரையில் பகிர்ந்திட குறிப்பாக எதுவுமில்லாத பட்சத்தில் அன்புடன் நான் மறுத்து விட்டிருந்தாலும்.

சர்வேசனின் ‘உதவும் கரங்கள்-ஒரு விசிட்’ பதிவினைத் தொடர்ந்து நான் வெளிப்படுத்த விளைந்த எண்ணங்களே இப்பதிவு. அவருக்கு என் நன்றிகள். அவரது பதிவையும், என்னைத் தொடர்ந்து ஜீவன், ரம்யா ஆகியோர் எழுதிய பதிவுகளையும் நான் அங்கே தந்திருந்த சுட்டிகளின் மூலமாகப் பலரும் வாசிக்க வாய்த்திருக்குமேயானால் அதுவே மிகுந்த மனநிறைவு!

ஹி..! பெரிய வல்லுநராக இல்லாவிட்டாலும் ஆர்வத்துடனும் சிரத்தையுடனும் தொடர்ந்து செய்யும் செயல்கள் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் ஈட்டித் தரும் அங்கீகாரம் என்பதற்கான அத்தாட்சி காட்சிப் படைப்பில் கிடைத்திருக்கும் வெற்றி. இந்த விருதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! PiT குழுவினருக்கே இதை சமர்ப்பிக்கிறேன்.

பதிவுலகம் நுழைந்ததில் இருந்து ஒரு மாதம் கூடத் தவறாமல் PiT போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன் இதுவரையில். நான்கு முறை முதல் சுற்றுக்குள் வந்துள்ளேன். பரிசு மட்டுமே இலக்கு என்றில்லாமல் ‘பங்களிப்பே சிறப்பு’ எனும் மனோபாவத்துடன் முடிந்தவரை எல்லாப் போட்டிகளிலும் எல்லோரும் கலந்து கொள்வோம். நிச்சயம் அது நம் திறமைகளை வெளிக் கொண்டு வரும்.

PiT குழு மாதாமாதம் விதம்விதமாய் தலைப்பைக் கொடுத்து, புகைப்படத் துறையின் மீதான நம் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து போட்டிகளை நடந்தி வருகிறது. வல்லுநரோ கத்துக்குட்டியோ எவராயினும் அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள பொறுமையாக அறிவுரைகளும் வழங்குகிறது. வாழ்க அவர்களது சேவை!

'Land Mark' தலைப்பைக் கொடுத்த நபர் குழுவிலே யாருங்க? உங்களுக்கு தனியாக ஒரு சிறப்பு நன்றி:)!

என்ன, ஒரு சின்ன மனக்குறை. முன்னரெல்லாம் போட்டித் தலைப்பு வெளியான சில நாளில் தமிழ்மணமெங்கும் PiT பதிவுகளாகவே இருக்கும். முடிவுத் தேதி நெருங்க நெருங்க திருவிழாதான். ஆனால் இப்போது படங்களை நேரடியாக சமர்ப்பித்திடும் வசதி வந்த பின் இதற்கெனப் பதிவிடுபவர்கள் எண்ணிக்கை வெகுவாகு குறைந்து விட்டது.நண்பர் கிரி, ‘நீங்கள் ஒருவர்தான் இத்தனை ஆர்வத்துடன் பதிவிடுகிறீர்கள்’ என்பார். ஆனால் முன் எப்போதையும் விட கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை 50 முதல் 70 வரை என இப்போது அதிகரித்தே இருக்கிறது. அதுவும் கடைசி மணி நேரத்தில் 30 பேர் படங்களை வந்து இணைப்பது அட்டகாசமாக இருக்கும். இவர்கள் எல்லோரிடத்திலும் நான் வைக்கும் வேண்டுகோள் பதிவாகவும் படங்களைத் தாருங்கள் என்பதே. இது பார்க்கும் இன்னும் பல பேரை ஆர்வத்துடன் கேமிராவைத் தூக்க வைக்கும்.

டந்த நான்கு நாட்களாக குமரகத்தின் தாஜ் ரிசார்ட்டில் ஓய்வுக்காக சென்றிருந்த இடத்தில், அறிவிப்பு வெளியான அன்று வலைப்பதிவுகள் திறக்கவேயில்லை. வெற்றி பெற்றிருந்த அந்தந்த எனது பதிவுகளில் நண்பர்கள் வாழ்த்தி இட்டிருந்த பின்னூட்டங்கள் வாயிலாகவே விருதுகள் கிடைத்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தாங்களே பரிசு பெற்ற சந்தோஷத்துடன் மனம் நிறைந்த வாழ்த்துக்களாகவும், மூத்த பதிவர்களின் ஆசிகளுடனும் வந்து குவிந்த தனி மடல்களும் குறுஞ்செய்திகளும் நெகிழ வைத்தன. ‘ஹைய்யா.., ராமலக்ஷ்மி மேடம் ஜெயிச்சிட்டாங்க..’ போன்றதான பின்னூட்டங்கள் இன்னும் நெகிழ்வு.

சில மாதங்களுக்கு முன்னர் செய்து கொண்ட அறுவை சிகிச்சைகள், ஏற்பட்ட சில பக்கவிளைவுகளால் உடல்நலக் குறைவு, இன்னும் தொடரும் மருந்துகள் என மனதும் உடலும் சற்றே சோர்ந்திருந்த வேளையில் சமீபகாலமாகத் தொடர்ந்து கிடைத்து வரும் சில அங்கீகாரங்கள் நிஜமாகவே என்னை உற்சாகப் படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

அதிலும் தமிழ்மணம் விருதென்பது வருடம் முழுவதும் கூடவே வந்த தோழமைகள் சுற்றிச் சூழ நின்று கைதட்ட, தாயின் பரிவோடு திறமையைத் தட்டிக் கொடுக்கும் தலைமையாசிரியரிடமிருந்து பரிசு வாங்குவது போன்றதான சின்ன வயது சந்தோஷம். குழந்தையின் குதூகலம். பதிவருக்கே உரித்தான பரவசம்:)!

ப்போதுமே அதிக எண்ணிக்கையில் பதிவதில்லை என்பது ஒருபுறமிருக்க, கடந்த சில மாதங்களாக அதிகம் எழுதவுமில்லை. வழக்கமாக செல்லும் வலைப்பூக்கள் பலவற்றிற்கு தொடர்ந்து செல்லவும் இயலவில்லை. இப்போது தேறி தெம்பாகி வரும் வேளையில் ‘எழுது இன்னும்’ என இழுத்துப் பிடித்து தந்துள்ளீர்கள் ஒன்றிற்கு இரண்டாகப் பதக்கங்கள்!

தனிமடலில் வாழ்த்தும் போதே ‘போக வேண்டிய பயணம் இன்னும் இருக்கிறது’ என அக்கறையுடன் நினைவுறுத்தும் உங்கள் போன்ற நட்புகள் கூடவே வருகையில்.. என்ன சொல்ல.. எப்படி சொல்ல? எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் நன்றி!

138 கருத்துகள்:

  1. நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் !

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி! :-) தூள் கிளப்புங்க!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் ராமலஷ்மி! மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது..தங்க இடுகை இன்னும் நெகிழ்ச்சியை தருகிறது! :-) தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. மனமார்ந்த வாழ்த்துக்கள்....ராமல்ட்சுமி மேடம்....

    பதிலளிநீக்கு
  5. ஸ்கூல் குழந்தைக்கு வாழ்த்துகள்

    :)

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் ராமலஷ்மி

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் ராமலஷ்மி.
    புதுத் தெம்போடும் வலுவோடும் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. இரட்டை வாழ்த்துகள்.

    பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் தோழி. மிக்க மகிழ்ச்சி. மனதுக்கு நிறையத் தெம்பு கிடைத்திருக்கிறது இப்போ, உடம்பு தெம்பானதும் நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  10. congrats

    ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெருமையாகவ்ம் இருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. :-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  13. அன்பு ராமலக்ஷ்மி, இந்த இரட்டிப்பு மகிழ்ச்சி போல் இன்னும் வெற்றிகள்
    நிறைய வரவேண்டும்,. மனம் நிறைந்த வாழ்த்துகள். உடல் நலத்தையும் பேணிக்காக்கவும்.

    பதிலளிநீக்கு
  14. சகோதரிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். மென்மேலும் சாதிக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. உடல்நிலை பாருங்க சீக்கிரமா தேறிடும்.. தொடர்ந்து கலக்குங்க.. வாழ்த்துக்கள்..

    நீங்க சொன்னமாதிரி நேரடியா இணைப்பதில் ஒரு விழாக்கோலாகலம் இல்லாத மாதிரி தான் குறை ..சரியாச் சொன்னீங்க..:)

    பதிலளிநீக்கு
  16. இரண்டு விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்...

    சீக்கிரமே முழுமையாக குணமடைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்கள்!

    தொடர்க தங்கள் அரும்பணி..

    பதிலளிநீக்கு
  18. இரட்டிப்பு மகிழ்ச்சி ராமலஷ்மி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  19. மனமார்ந்த வாழ்த்துகள். (second time)...

    //மூத்த பதிவர்களின் ஆசிகளுடனும் வந்து குவிந்த தனி மடல்களும்//

    யாருங்க அது? சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்கறோம். :)))

    பதிலளிநீக்கு
  20. இரண்டுமே நல்ல இடுகைகள்... எனது வாழ்த்துக்களையும் இந்த முத்துச்சரத்தில் கோர்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. இரட்டிப்பு வாழ்த்துக்கள்...இவை பன்மடங்கு பெருக ஆசிகள்

    பதிலளிநீக்கு
  22. குமரகம்
    கேரளத்தை புகைப்படமாக்கியிருப்பீர்கள்.காண ஆவல்

    பதிலளிநீக்கு
  23. நல்வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம் .

    மேன்மேலும் பதக்கங்கள் பெற வாழ்த்துக்கள் .

    ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது .

    பதிலளிநீக்கு
  24. வாழ்த்துக்கள் & வாழ்த்துக்கள் ராம் மேடம்

    பதிலளிநீக்கு
  25. நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

    தங்களின் உடல்நலம் முழுவதுமாக குணமடைந்திட வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  26. மனம் நிறைஞ்ச இனிய பாராட்டுகள்.

    ஜமாய் ராணி!!!

    பதிலளிநீக்கு
  27. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. வாழ்த்துகள் & வாழ்த்துகளுக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு
  29. நான் கலந்துக்கலைன்னானுல் ரொம்ம ஆசையா அவசர அவசரமா கவிதையில் தேடினேன். ரொம்ப டென்ஷன். "அய்யோஓஓஓஓஓஓ நம்ம முத்துக்கு கிடைச்சாச்சு, நம்ம குசும்பனுக்கும் வந்துடுச்சுன்னு என் மனைவி சொல்ல சொல்ல நான் தேடிகிட்டே இருந்தேன்.... வாவ் ஒன்னு இல்லை இரண்டு... எங்கள் அன்பான வாழ்த்துக்கள்!!!

    அன்புடன்
    அபிஅப்பா

    பதிலளிநீக்கு
  30. வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம். இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  31. இரட்டிப்பு சந்தோசம் சகா.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  32. வாழ்த்துகள் மேடம். மென்மேலும் பல விருதுகளைப்பெற வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  33. பூங்கொத்துக்களுடன் வாழ்த்துகள் ராமலஷ்மி! மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.உடல் நிலையையும் கவனித்துக் கொள்ளுங்கள்,

    பதிலளிநீக்கு
  34. உப்பு, மிளகாய் வச்சு சுத்திப்போடுங்க,....[கண்ணு பட்டிருக்கும்ல ] சரி ..பார்ட்டி எப்போ வைக்கிறீங்க?

    பதிலளிநீக்கு
  35. மேலும்,மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. வாழ்த்துக்கள் ராமலஷ்மி!

    ரெண்டு கையிலயும் ரெண்டு அவார்டு ஏந்தி ரஹ்மான் மாதிரி ஜய்ஹோ சொல்லுங்க :)

    பதிலளிநீக்கு
  37. வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி!

    உடல்நிலையையும் கவனிச்சு பார்த்துக்கோங்க!

    பதிலளிநீக்கு
  38. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  39. வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !!

    உங்களது ஆர்வத்திற்கும், அழகிய படைப்புக்களுக்கும் இரண்டு என்பது மிகச் சொற்பமே. வெற்றிகள் மேலும் குவித்து, உடல் வேதனை மறந்து, வழக்கம் போல் கருத்தாழமிக்க பதிவுகள் தொடர்ந்து பதிய மீண்டும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  40. வாழ்த்துகள்


    ட்ரீட் டைமேய்.....

    பதிலளிநீக்கு
  41. ‘ஹைய்யா.., ராமலக்ஷ்மி அக்கா ஜெயிச்சிட்டாங்க.

    பதிலளிநீக்கு
  42. இன்னும் நல்ல உடல் நலத்தோடு நிறைய நிறைய எழுத எங்களது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  43. வாழ்த்துக்கள் ராமலஷ்மி. உடம்பை பாத்துக்குங்க. சரியாகி வந்து மறுபடி கலக்கலாம்

    பதிலளிநீக்கு
  44. கலக்கல். வாழ்த்துக்கள். :)

    get well soon.

    குமரகம் ஃபோட்டோஸ் போடலியா?

    பதிலளிநீக்கு
  45. நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ! அக்கா

    பதிலளிநீக்கு
  46. இரட்டிப்பு சந்தோஷமும், இருநூறு வாழ்த்துக்களும் ராமலக்ஷ்மியக்கா!

    உடல்நிலை சீராகி, உற்சாகமாய் இன்னும் பல பதிவுகள் எழுத வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
  47. பூரண நலமுடன் இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள் ராம லெக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  48. மிக்க மகிழ்ச்சி மேடம் மேலும் பல வெற்றி பெற வாழ்த்துகள்....

    PiT போட்டியில் கலந்து கொள்வது எப்படின்னு ஒரு போஸ்ட் போடுங்க மேடம் தெரியாதவங்க நிறைய பேர் இருப்பாங்க..

    பதிலளிநீக்கு
  49. முதலில் இரண்டு வெற்றிப் பதக்கங்கள்
    பெற்றதற்கு வாழ்த்துக்கள்.


    பூரண உடல் நலம் பெற்று முன்னிலும் அதிகமாக நல்ல பதிவுகளை வழங்க வாழ்த்துகிறேன்.

    வாழ்க வளமுடன்,ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  50. ஓட்டு போட்டவங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் எதுவுமில்லையா??

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  51. // பெரிய வல்லுநராக இல்லாவிட்டாலும் ஆர்வத்துடனும் சிரத்தையுடனும் தொடர்ந்து செய்யும் செயல்கள் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் ஈட்டித் தரும் அங்கீகாரம் என்பதற்கான அத்தாட்சி காட்சிப் படைப்பில் கிடைத்திருக்கும் வெற்றி. இந்த விருதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! PiT குழுவினருக்கே இதை சமர்ப்பிக்கிறேன்.//

    ஆஹா சரியாச்சொன்னீங்க.
    கண்டிப்பா இந்தவருசம் நம்ம பிட்லையும் முதல் பரிசுவாங்குவீங்க
    பாருங்க.

    // ஒரு சின்ன மனக்குறை. முன்னரெல்லாம் போட்டித் தலைப்பு வெளியான சில நாளில் தமிழ்மணமெங்கும் PiT பதிவுகளாகவே இருக்கும். முடிவுத் தேதி நெருங்க நெருங்க திருவிழாதான்.//

    எனக்கும் தான்கா
    இதுக்காகாவாவது ஒரு பதிவு போடுவேன் இப்போ அதுவும் இல்லாம போச்சு :-))

    பதிலளிநீக்கு
  52. ரஹ்மானின் ஆஸ்கார் போல இரண்டு விருதை அள்ளி விட்டீர்கள்

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

    தங்கள் உடல்நலம் மேம்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவான் கண்டிப்பாக

    விஜய்

    பதிலளிநீக்கு
  53. வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழி...

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    பதிலளிநீக்கு
  54. ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெருமையாகவ்ம் இருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  55. வாழ்த்துக்கள் ராமல்ஷ்மி. உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி. உங்களின் தன்னலமற்ற நல்ல சிந்தனைகளுக்கு கிடைத்திருக்கும் அங்கீகரிப்பு. மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  56. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

    அப்படி எல்லாம் நீங்கள் சொல்லபிடாது, சும்மா எழுதி எழுதி தூள் கிளப்புங்க!

    இன்னும் நிறைய விருது வாங்க வேண்டி இருக்கிறது நீங்கள் :-).

    பதிலளிநீக்கு
  57. கோவி.கண்ணன் said...

    // நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ! //

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோவி.கண்ணன்!

    பதிலளிநீக்கு
  58. கிரி said...

    //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி! :-) தூள் கிளப்புங்க!//

    கிளப்பியாச்சு:), நன்றி கிரி!!

    பதிலளிநீக்கு
  59. சந்தனமுல்லை said...

    //வாழ்த்துகள் ராமலஷ்மி! மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது..தங்க இடுகை இன்னும் நெகிழ்ச்சியை தருகிறது! :-) தொடர்ந்து எழுதுங்கள்.//

    நன்றி முல்லை. சமூகம் பிரிவில் என் கூடவே வந்தது நீங்கள் என அறிய வந்த போது, உங்கள் எழுத்தை எப்போதும் வியந்து ரசிக்கும் வாசகியான நான் பெருமகிழ்ச்சி கொண்டேன். உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  60. kannaki said...

    // மனமார்ந்த வாழ்த்துக்கள்....ராமல்ட்சுமி மேடம்..//

    நன்றி கண்ணகி!

    பதிலளிநீக்கு
  61. வடுவூர் குமார் said...

    // நல்வாழ்த்துகள் //

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  62. எம்.எம்.அப்துல்லா said...

    // ஸ்கூல் குழந்தைக்கு வாழ்த்துகள்

    :)//

    நன்றி:)))!

    பதிலளிநீக்கு
  63. சின்ன அம்மிணி said...

    // வாழ்த்துக்கள் ராமலஷ்மி//

    நன்றி அம்மிணி.

    பதிலளிநீக்கு
  64. கண்மணி said...

    //வாழ்த்துக்கள் ராமலஷ்மி.
    புதுத் தெம்போடும் வலுவோடும் தொடருங்கள்//

    உங்கள் வாழ்த்துக்களே அத்தகு தெம்பைத் தருகின்றன. நன்றி கண்மணி!

    பதிலளிநீக்கு
  65. நட்புடன் ஜமால் said...

    //இரட்டை வாழ்த்துகள்.

    பாராட்டுகளும்.//

    நன்றி நன்றி ஜமால!

    பதிலளிநீக்கு
  66. ஜெஸ்வந்தி said...

    //வாழ்த்துக்கள் தோழி. மிக்க மகிழ்ச்சி. மனதுக்கு நிறையத் தெம்பு கிடைத்திருக்கிறது இப்போ, உடம்பு தெம்பானதும் நிறைய எழுதுங்கள்.//

    உண்மைதான் ஜெஸ்வந்தி. தொடர்வேன் உங்கள் வாழ்த்துக்களுடன்.

    பதிலளிநீக்கு
  67. புதுகைத் தென்றல் said...

    //congrats

    ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெருமையாகவ்ம் இருக்கு வாழ்த்துக்கள்//

    நன்றி தென்றல் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளும் அன்புக்கும் வளர்ச்சியில் அடையும் பெருமிதத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  68. " உழவன் " " Uzhavan " said...

    // :-))))))))))))))))))))))))))))//

    சரிதான் இத்தனை சந்தோஷமா:))? நன்றி உழவன்:)!

    பதிலளிநீக்கு
  69. அமுதா said...

    //வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி//

    அன்புக்கு நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  70. வல்லிசிம்ஹன் said...

    //அன்பு ராமலக்ஷ்மி, இந்த இரட்டிப்பு மகிழ்ச்சி போல் இன்னும் வெற்றிகள்
    நிறைய வரவேண்டும்,. மனம் நிறைந்த வாழ்த்துகள். உடல் நலத்தையும் பேணிக்காக்கவும்.//

    உங்கள் நல்லாசிகளுக்கும் அக்கறைக்கும் நன்றி வல்லிம்மா. உங்கள் வாழ்த்துக்கள் என்னை வழிநடத்திச் செல்லும்.

    பதிலளிநீக்கு
  71. மாதவராஜ் said...

    //வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  72. எம்.ரிஷான் ஷெரீப் said...

    //சகோதரிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். மென்மேலும் சாதிக்க வாழ்த்துகிறேன்.//

    மிக்க நன்றி ரிஷான்.

    பதிலளிநீக்கு
  73. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    //உடல்நிலை பாருங்க சீக்கிரமா தேறிடும்.. தொடர்ந்து கலக்குங்க.. வாழ்த்துக்கள்..//

    அன்புக்கு நன்றி முத்துலெட்சுமி.

    //நீங்க சொன்னமாதிரி நேரடியா இணைப்பதில் ஒரு விழாக்கோலாகலம் இல்லாத மாதிரி தான் குறை ..சரியாச் சொன்னீங்க..:)//

    நீங்களும் அதைக் கவனித்ததில் சந்தோஷம்:)! மறுபடி கோலகலமானால் அது ஒரு தனி உற்சாகம் பார்ப்பதற்கே.

    பதிலளிநீக்கு
  74. ஸ்ரீராம். said...

    //இரண்டு விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்...

    சீக்கிரமே முழுமையாக குணமடைய வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  75. முனைவர்.இரா.குணசீலன் said...

    //வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்கள்!

    தொடர்க தங்கள் அரும்பணி..//

    வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள் முனைவரே. அடிக்கடி வாருங்கள்!

    பதிலளிநீக்கு
  76. ஷைலஜா said...

    //இரட்டிப்பு மகிழ்ச்சி ராமலஷ்மி வாழ்த்துகள்!//

    மிகவும் நன்றி ஷைலஜா!

    பதிலளிநீக்கு
  77. மதுரையம்பதி said...

    //வாழ்த்துக்கள் மேடம்.//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மதுரையம்பதி!

    பதிலளிநீக்கு
  78. ambi said...

    //மனமார்ந்த வாழ்த்துகள். (second time)...//

    இரண்டாவது முறையாக நானும் சொல்லிக கொள்கிறேன் நன்றியை:)!

    **/ //மூத்த பதிவர்களின் ஆசிகளுடனும் வந்து குவிந்த தனி மடல்களும்//

    யாருங்க அது? சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்கறோம். :)))/**

    அன்புடன் ஆசிமடல் வழங்கிய வல்லிம்மா, சீனா சார், கோமா மற்றும் முந்தைய பதிவில் வந்து வாழ்த்திய நானானி, சுப்பு ரத்தினம் சார், கோமதி அரசு இவங்க எல்லாரும்தான். போதுமா:)?

    பதிலளிநீக்கு
  79. க.பாலாசி said...

    //இரண்டுமே நல்ல இடுகைகள்... எனது வாழ்த்துக்களையும் இந்த முத்துச்சரத்தில் கோர்க்கிறேன்.//

    வாங்க பாலாசி. பாராட்டுக்கும் கோர்த்த வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  80. goma said...

    //இரட்டிப்பு வாழ்த்துக்கள்...இவை பன்மடங்கு பெருக ஆசிகள்//

    வாழ்த்துக்களாகவும் ஆசிகளாகவும் தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு நன்றிகள் கோமா.

    பதிலளிநீக்கு
  81. goma said...

    //குமரகம்
    கேரளத்தை புகைப்படமாக்கியிருப்பீர்கள்.காண ஆவல்//

    ஆமாமாம்:)! மெதுவா ரிலீஸாகும். பொறுத்திருங்கள். இயற்கை அன்னை தாராளமாய் எடுத்துக்கோ எடுத்துக்கோ என அள்ளித் தந்து விட்டாள்:)!

    பதிலளிநீக்கு
  82. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    //நல்வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம் .

    மேன்மேலும் பதக்கங்கள் பெற வாழ்த்துக்கள் .

    ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது .//

    தங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி ஸ்டார்ஜன்!

    பதிலளிநீக்கு
  83. அமிர்தவர்ஷினி அம்மா said...

    //வாழ்த்துக்கள் & வாழ்த்துக்கள் ராம் மேடம்//

    என் அன்பான நன்றிகள் அமித்து அம்மா:)!

    பதிலளிநீக்கு
  84. வெ.இராதாகிருஷ்ணன் said...

    //நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

    தங்களின் உடல்நலம் முழுவதுமாக குணமடைந்திட வேண்டுகிறேன்.//

    வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றி இராதாகிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு
  85. துளசி கோபால் said...

    // மனம் நிறைஞ்ச இனிய பாராட்டுகள்.

    ஜமாய் ராணி!!!//

    ரொம்ப நன்றி மேடம்:)!

    பதிலளிநீக்கு
  86. மாதேவி said...

    //மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  87. இளவஞ்சி said...

    //வாழ்த்துகள் & வாழ்த்துகளுக்கு நன்றி! :)//

    நன்றி இளவஞ்சி. புகைப்படப் பிரிவில் நாம் பகிர்ந்து கொண்டுள்ளேன் பதக்கத்தை என்பதில் எனக்கு மகிழ்ச்சி:)! அற்புதமான படங்கள் உங்களது.

    பதிலளிநீக்கு
  88. Priya said...

    //வாழ்த்துக்கள் Mam!//

    மிக்க நன்றி பிரியா!

    பதிலளிநீக்கு
  89. அபி அப்பா said...

    //நான் கலந்துக்கலைன்னானுல் ரொம்ம ஆசையா அவசர அவசரமா கவிதையில் தேடினேன். ரொம்ப டென்ஷன். "அய்யோஓஓஓஓஓஓ நம்ம முத்துக்கு கிடைச்சாச்சு, நம்ம குசும்பனுக்கும் வந்துடுச்சுன்னு என் மனைவி சொல்ல சொல்ல நான் தேடிகிட்டே இருந்தேன்.... வாவ் ஒன்னு இல்லை இரண்டு... எங்கள் அன்பான வாழ்த்துக்கள்!!!//

    நீங்கள் கலந்து கொண்டிருக்கலாமே அபி அப்பா. ஆர்வமாய் என் பெயரைத் தேடிய உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  90. அமைதிச்சாரல் said...

    //வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம். இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.//

    என் மகிழ்ச்சியில் பங்கெடுக்கும் உங்கள் அன்புக்கு என் நன்றிகள் அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  91. பா.ராஜாராம் said...

    //இரட்டிப்பு சந்தோசம் சகா.வாழ்த்துக்கள்!//

    வாங்க பா ரா. நன்றி. தமிழ்மணம் விருதுக்கு உங்களுக்கும் என் வாழ்த்துக்களை மறுபடி சொல்லிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  92. அக்பர் said...

    // வாழ்த்துகள் மேடம். மென்மேலும் பல விருதுகளைப்பெற வாழ்த்துகிறேன்.//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்பர்!

    பதிலளிநீக்கு
  93. அன்புடன் அருணா said...

    // பூங்கொத்துக்களுடன் வாழ்த்துகள் ராமலஷ்மி! மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.உடல் நிலையையும் கவனித்துக் கொள்ளுங்கள்,//

    பூங்கொத்தும் அன்புக்கும் நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  94. ஜெரி ஈசானந்தா. said...

    // உப்பு, மிளகாய் வச்சு சுத்திப்போடுங்க,....[கண்ணு பட்டிருக்கும்ல ]//

    :))! வருகைக்கும் அக்கறைக்கும் நன்றிங்க!

    //சரி ..பார்ட்டி எப்போ வைக்கிறீங்க?//

    நிறைய பேர் கேட்டாச்சு, கொடுத்துட்டா போச்சு!

    பதிலளிநீக்கு
  95. வினவு said...

    //வாழ்த்துக்கள் ராமலஷ்மி!//


    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வினவு.

    இரண்டு தமிழ்மணம் விருதுகளை வென்றிருக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  96. தென்றல் said...

    //வாழ்த்துக்கள்!//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தென்றல்!

    பதிலளிநீக்கு
  97. malarvizhi said...

    // மேலும்,மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி மலர்விழி!

    பதிலளிநீக்கு
  98. PPattian : புபட்டியன் said...

    //வாழ்த்துக்கள் ராமலஷ்மி!

    ரெண்டு கையிலயும் ரெண்டு அவார்டு ஏந்தி ரஹ்மான் மாதிரி ஜய்ஹோ சொல்லுங்க :)//

    ஆமாமாம்! ரஹமானின் வெற்றியைப் பாராட்டி ‘ஜெய்ஹோ’ எனக் கவிதை இட்ட எனக்கு இது தோன்றவில்லையே, நல்ல ஐடியா புபட்டியன்:)! வாழ்த்துக்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  99. நசரேயன் said...

    //வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் நசரேயன்.

    பதிலளிநீக்கு
  100. வருண் said...

    // வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி!

    உடல்நிலையையும் கவனிச்சு பார்த்துக்கோங்க! //

    வாழ்த்துக்களுக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி வருண்!

    பதிலளிநீக்கு
  101. சுசி said...

    //மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா.//

    என் அன்பான நன்றிகள் சுசி!

    பதிலளிநீக்கு
  102. Dr.Rudhran said...

    //congratulations. keep writing//

    மிக்க நன்றி டாக்டர். பெண்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற தங்கள் பதிவினை நினைவில் வைத்திருந்து தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
  103. சதங்கா (Sathanga) said...

    //வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !!

    உங்களது ஆர்வத்திற்கும், அழகிய படைப்புக்களுக்கும் இரண்டு என்பது மிகச் சொற்பமே. வெற்றிகள் மேலும் குவித்து, உடல் வேதனை மறந்து, வழக்கம் போல் கருத்தாழமிக்க பதிவுகள் தொடர்ந்து பதிய மீண்டும் வாழ்த்துக்கள்.//

    நன்றி சதங்கா நன்றி!

    தொடரும் உங்கள் ஊக்கம் மேலும் என்னை எழுத வைக்குமென நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  104. Jeeves said...

    //வாழ்த்துகள்


    ட்ரீட் டைமேய்.....//

    கண்டிப்பா கொடுக்கிறேன்:)! வாழ்த்துக்களுக்கு நன்றி ஜீவ்ஸ்!

    பதிலளிநீக்கு
  105. தமிழ் பிரியன் said...

    //‘ஹைய்யா.., ராமலக்ஷ்மி அக்கா ஜெயிச்சிட்டாங்க.//

    உங்களுக்கும் குதூகலமே எனத் தெரியும் தமிழ் பிரியன்:)!

    //Congrats, Winning two prize in Thamizmanam...Wow!//

    வாகக்ளித்த அத்தனை பேருக்கும் மறுபடி நன்றி!

    //இன்னும் நல்ல உடல் நலத்தோடு நிறைய நிறைய எழுத எங்களது பிரார்த்தனைகள்.//

    அன்புக்கும் நன்றி தமிழ் பிரியன்!

    பதிலளிநீக்கு
  106. மோகன் குமார் said...

    //வாழ்த்துக்கள் ராமலஷ்மி. உடம்பை பாத்துக்குங்க. சரியாகி வந்து மறுபடி கலக்கலாம்//

    நன்றிகள் மோகன் குமார், அக்கறையான விசாரிப்புக்கும்.

    பதிலளிநீக்கு
  107. SurveySan said...

    //கலக்கல். வாழ்த்துக்கள். :)

    get well soon.//

    எல்லாவற்றிற்கும் என் நன்றிகள்:)!

    //குமரகம் ஃபோட்டோஸ் போடலியா?//

    போடாமல் இருந்து விடுவேனா? மெதுவா ரிலீஸ் ஆகும்:)!

    பதிலளிநீக்கு
  108. பாத்திமா ஜொஹ்ரா said...

    // நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ! அக்கா//

    வாழ்த்துக்களுக்கும் தொடருபவராக இணைந்தமைக்கும் நன்றி பாத்திமா!

    பதிலளிநீக்கு
  109. சுந்தரா said...

    //இரட்டிப்பு சந்தோஷமும், இருநூறு வாழ்த்துக்களும் ராமலக்ஷ்மியக்கா!//

    மிக மிக நன்றி சுந்தரா!

    //உடல்நிலை சீராகி, உற்சாகமாய் இன்னும் பல பதிவுகள் எழுத வேண்டுகிறேன்!//

    அக்கறைக்கும் 150-ஆவது நபராகத் தொடரும் அன்புக்கும் சேர்த்து என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  110. thenammailakshmanan said...

    //பூரண நலமுடன் இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள் ராம லெக்ஷ்மி//

    அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  111. பிரியமுடன்...வசந்த் said...

    //மிக்க மகிழ்ச்சி மேடம் மேலும் பல வெற்றி பெற வாழ்த்துகள்....//

    உங்கள் மகிழ்ச்சியை போட்டி முடிவு வந்ததுமே இட்டிருந்த பின்னூட்டத்தில் தெரிந்து கொண்டேன் வசந்த்:). மிக்க நன்றி!

    //PiT போட்டியில் கலந்து கொள்வது எப்படின்னு ஒரு போஸ்ட் போடுங்க மேடம் தெரியாதவங்க நிறைய பேர் இருப்பாங்க..//

    சிறந்த யோசனைதான். முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  112. கோமதி அரசு said...

    //முதலில் இரண்டு வெற்றிப் பதக்கங்கள்
    பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றிங்க.

    // பூரண உடல் நலம் பெற்று முன்னிலும் அதிகமாக நல்ல பதிவுகளை வழங்க வாழ்த்துகிறேன்.

    வாழ்க வளமுடன்,ராமலக்ஷ்மி..//

    உங்கள் வாழ்த்துக்களுடனும் ஆசிகளுடன் தொடர்கிறேன்மா!

    பதிலளிநீக்கு
  113. வித்யா said...

    //ஓட்டு போட்டவங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் எதுவுமில்லையா??

    வாழ்த்துகள்...//

    எப்போ பெங்களூர் வர்றீங்க:)?

    நன்றி வித்யா!

    பதிலளிநீக்கு
  114. கார்த்திக் said...

    //ஆஹா சரியாச்சொன்னீங்க.
    கண்டிப்பா இந்தவருசம் நம்ம பிட்லையும் முதல் பரிசுவாங்குவீங்க
    பாருங்க.//

    அங்கே கிடைக்கிற அனுபவங்களே பரிசுதான் கார்த்திக்.

    ***/ //தமிழ்மணமெங்கும் PiT பதிவுகளாகவே இருக்கும்.//

    எனக்கும் தான்கா
    இதுக்காகாவாவது ஒரு பதிவு போடுவேன் இப்போ அதுவும் இல்லாம போச்சு :-)) /***

    இனியாவது தொடரப் பாருங்கள் கார்த்திக்! வ்ருகைக்கும் நல்வாக்குக்கும் நன்றி:)!

    பதிலளிநீக்கு
  115. விஜய் said...

    //ரஹ்மானின் ஆஸ்கார் போல இரண்டு விருதை அள்ளி விட்டீர்கள்//

    :)!

    //நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

    தங்கள் உடல்நலம் மேம்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவான் கண்டிப்பாக//

    தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி விஜய்!

    பதிலளிநீக்கு
  116. ஆ.ஞானசேகரன் said...

    //வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழி...//

    மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  117. கடையம் ஆனந்த் said...

    // ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெருமையாகவ்ம் இருக்கு வாழ்த்துக்கள்//

    உங்கள் வாழ்த்துக்களுக்காகக் காத்திருந்தேன். நன்றி ஆனந்த்!

    பதிலளிநீக்கு
  118. Shakthiprabha said...

    //வாழ்த்துக்கள் ராமல்ஷ்மி. உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி. உங்களின் தன்னலமற்ற நல்ல சிந்தனைகளுக்கு கிடைத்திருக்கும் அங்கீகரிப்பு. மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள்.//

    வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி சக்தி!

    பதிலளிநீக்கு
  119. புலவன் புலிகேசி said...

    //வாழ்த்துக்கள் ராமலெஷ்மி//

    விடுமுறை முடிந்ததும் விரைந்து வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் புலிகேசி:)!

    பதிலளிநீக்கு
  120. சிங்கக்குட்டி said...

    // வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

    அப்படி எல்லாம் நீங்கள் சொல்லபிடாது, சும்மா எழுதி எழுதி தூள் கிளப்புங்க!

    இன்னும் நிறைய விருது வாங்க வேண்டி இருக்கிறது நீங்கள் :-).//

    ஆகா சிங்கக்குட்டி! அன்புக்கு நன்றி! அப்படியே ஆகட்டும்:)!

    பதிலளிநீக்கு
  121. இரண்டு தமிழ்மணம் விருதுகளை வென்றிருக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  122. தமிழ்மணம் விருதிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  123. @ அம்பிகா,

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்பிகா. முத்துச்சரத்தை தொடர்வதற்கும்!

    பதிலளிநீக்கு
  124. @ செ.சரவணக்குமார்

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சரவணக்குமார்.

    பதிலளிநீக்கு
  125. லேட்டா வந்தாலும்......!?
    உச்சி குளிந்ததடி
    உள்ளம் மகிழ்ந்ததடி
    ரெட்டை வெற்றியடி
    பட்டையை கிளப்படி
    ஹூம் இது எப்படி?

    பதிலளிநீக்கு
  126. @ நானானி,

    //இது எப்படி?//

    கேட்கணுமா:)? எப்போதும் போலவே அருமை. நன்றி நானானி தொடரும் தங்கள் ஆசிகளுக்கு.

    பதிலளிநீக்கு
  127. நன்றி அன்புச் சகோதரி,
    நீங்களும் இதில் :-)

    நன்றி மாதவராஜ், கலைமகள் ஷைலஜா, கலைமகன் பைரூஸ், யாழ்தேவி மற்றும் தினக்குரல் http://rishanshareef.blogspot.com/2010/02/blog-post_09.html

    பதிலளிநீக்கு
  128. எம்.ரிஷான் ஷெரீப் said...

    //நன்றி அன்புச் சகோதரி,
    நீங்களும் இதில் :-)//

    பார்த்தேன் ரிஷான்! என்னுடைய இந்தப் பதிவில் நான் மகிழ்ந்து நெகிழ்ந்தது போலவே தங்கள் பதிவும்:)! மேலும் உங்கள் சாதனைகள் தொடரவும், சிகரத்தைத் தொடவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin