விஜயதசமி வாழ்த்துகளுடன், இந்த நாளுக்குப் பொருத்தமாக, கொல்கத்தா தொடரின் இறுதிப் பதிவாக, காளிகாட் கோயில் குறித்த பதிவு 10 படங்களுடன்:
#1
கோவில் கோபுரம்
51சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காளிகாட் காளி கோயில் கொல்கத்தாவின் டாலிகஞ்ச் எனும் பகுதியில் பாகீரதி (ஹூக்ளி) நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா என்ற பெயர் காளிகட்டா (காளிகாட்) என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்கள்.
#2
தோரணவாயில்
காட் என்பது தீர்த்தக் கட்டம் எனப்படும் நதியின் படித்துறையாகும்.
தொழிலதிபர் பிர்லாவின் குடும்பத்தினரால் நாட்டின் பல இடங்களில் கட்டப்பட்ட இந்துக் கோவில்களில் ஒன்று கொல்கத்தாவிலும் உள்ளது. பளிங்கினால் கட்டப்பட்ட இக்கோவில் அசுதோஷ் செளத்ரி அவென்யூவில் இருக்கிறது.
#2
இக்கோவிலைக் கட்டி முடிக்க 26 வருடங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.
தாஜ்மஹாலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ‘மக்ரனா’ எனும் உயர் வகை சலவைக் கற்களைக் கொண்டே விக்டோரியா நினைவிடமும் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மேல் மாடங்களும், இன்னும் பிற கட்டமைப்புகளுக் கூட தாஜ் மஹாலைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். #2
தற்போது அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத் தளமாகவும் அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிற விக்டோரியா நினைவிடத்தில் மகாராணியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பிரிட்டிஷ் கால ஓவியங்கள் மற்றும் காட்சிப் பொருட்களாக ஆயுதங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், நிலவரைபடங்கள், காசுகள், அஞ்சல் தலைகள், கைவினைபொருட்கள், உடைகள் போன்றவை உள்ளன. விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர் ஆகியோரின் நேர்த்தியான சில உருவப்பட ஓவியங்கள் பலவும் உள்ளன. அதில் மிகவும் குறிப்படத்தக்க ஓவியமாக போற்றப் படுகிறது,
அறுபத்து நான்கு ஏக்கர்கள் பரப்பளவில், பரந்து விரிந்த மலர்த் தோட்டங்களுடன் கூடிய விக்டோரியா நினைவிடம் (Victoria Memorial), மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஜவஹர்லால் நேரு சாலை அருகே, ஹூக்ளி நதிக்கரையோரத்தில் உள்ளது.
#2
1819–1901 வரை வாழ்ந்த விக்டோரியா மகாராணியின் நினைவாக உருவாக்கப்பட்ட பிரமாண்டமான இந்த பளிங்கு மாளிகை, 1906-1921 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 'வேல்ஸ் இளவரசர்' ஐந்தாம் ஜார்ஜினால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்நினைவிடம் பிரிட்டிஷ் அரசின் வெற்றிக்கான அடையாளமாகக் கருதப்பட்டது. விக்டோரியா மகராணி இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.