ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

தெரிந்து தெளிதல்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (57) 
பறவை பார்ப்போம் - பாகம் (43)
#1
"உங்களிடம்தான் இருக்கிறது..
தினசரி வாழ்வின் அழகிய விஷயங்களை 
கண்டறிவது!"


#2
“கவிதை என்பது 
ஒரு உணர்வு தன் சிந்தனையைக் கண்டறிவதும்
சிந்தனை சொற்களைக் கண்டறிவதும்!” 
_ Robert Frost


#3
“இருவருக்கு இடையேயான மெளனம்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

வாழ்க்கைச் சக்கரம் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (6)

#1
சில வாரங்களுக்கு முன் ‘சக்கரங்களைக் கொண்ட எதுவும்’ என டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழ் அறிவித்திருந்த தலைப்புக்குத் தேர்வான  5 படங்களில் ஒன்றாக...

#2
வாழ்க்கை ஒரு கடினமான சவாரி..

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

அட்டைப்படமாக நான் எடுத்த ஒளிப்படம்

ஜூலை 2019, சென்ற மாத ‘கிழக்கு வாசல் உதயம்’ இதழின் அட்டைப் படமாக நான் எடுத்த ஒளிப்படம்.



“நல்ல காலம் பொறக்குமா?”

தம்மை வணங்குபவர்களுக்கு நல்ல காலம் பிறக்குமெனத் தலையாட்டும் பூம்பூம் மாட்டினை..

புதன், 7 ஆகஸ்ட், 2019

கருப்பட்டி மிட்டாய்

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் 
ஆனித் திருவிழா (பாகம் 2) 

[பாகம் 1 இங்கே.]

திரண்டு வரும் ஜனங்கள் மேல் நம்பிக்கை வைத்து சுடச் சுட அங்கேயே தயாராகிக் கொண்டிருந்தன பல கடைகளில் கருப்பட்டி மிட்டாய்.

#1

பலரும் ஏணி மிட்டாய் என்றே சொல்வதுண்டு. இவை சீனி மற்றும் வெல்லப்பாகிலும் கூட செய்யப் படுகின்றன. 

#2

ஆனால் நாங்கள் பார்த்த வரையில் அந்த சமயத்தில் அங்கேயே தயாராகிக் கொண்டிருந்த கடைகளில் கருப்பட்டிப் பாகிலேயே போட்டு எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

#3
தேகம் தளர்ந்தாலும் 
வேகம் குறையாமல்..

சனி, 3 ஆகஸ்ட், 2019

காலத்தின் பதிவுகள் - பொம்பூர் குமரேசனின் ‘அப்பாவின் வேட்டி’ - கீற்று மின்னிதழில்..

யற்கையாக மனதில் பொங்கி எழும் உணர்வுகளுக்கு அணைபோட முடியாது. செயற்கையான வார்த்தைகளால் அத்தகு உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. இயல்பான பிரவாகமாக அமைந்த பொம்பூர் குமரேசனின் கவிதைகள் கிராமத்து வாழ்வை, ஒரு விவசாயக் குடும்பத்தின் பின்னணியை, அவர்களின் கள்ளங்கபடமற்ற சந்தோஷங்கள், அதை உடனே பறித்துக் கொள்ளும் யதார்த்த வாழ்வின் சோகங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றைக் கண் முன் கொண்டு வருகின்றன. 

சங்கராபரணி நதியைப் போற்றும் கவிதையில் ஆரம்பித்து நதி அன்னைக்கு நாம் செய்யும் துரோகத்தில் முடிகிற இத்தொகுப்பு,  நதியைப் போலவே தெளிந்த நீரோட்டமாக, ஆரவாரம் இன்றி அதே நேரம் ஆழமான பாடுபொருட்களோடு சீராக ஓடுகிறது.

“...எங்கள் பிறப்பும்
சங்கராபரணிதான்
எங்கள் இறப்பும்
சங்கராபரணிதான்.

...எங்கள் 
செத்த வயல்களில்
பச்சை இரத்தம் 
பாய்ச்சியவள்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

தரையிறங்கிய வானில்.. - ‘தி இந்து’ காமதேனு இதழில்..

4 ஆகஸ்ட் 2019, ‘தி இந்து’ காமதேனு இதழில்.. 
பக்கம் 47, ‘நிழற்சாலை’ பகுதியில்..

தரையிறங்கிய வானில்..

வானம் தரையிறங்கியது ஓர் நாள்
பாரம் தாளாது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin