மொழிபெயர்ப்பு இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழிபெயர்ப்பு இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஜூலை, 2026

மாபெரும் தப்பிப்பு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (30) - பண்புடன் இணைய இதழில்..

 


மாபெரும் தப்பிப்பு

கேள்”, என்றான் அவன்,
“ஒரு வாளிக்குள் நண்டுகள் கொத்தாக இருப்பதை 
எப்போதேனும் பார்த்திருக்கிறாயா?”
“இல்லை,” என்றேன் நான்.

“சரி. அங்கு என்ன நடக்குமெனில்
அவ்வப்போது ஒரு நண்டு
மற்ற நண்டுகளின் மேல் ஏறி
வாளியின் விளிம்பை நோக்கி ஏறத் தொடங்கும்.
அது தப்பித்து வெளியேறப் போகும் தருணத்தில்

வெள்ளி, 10 ஜூலை, 2026

பிரார்த்தனை - லாரி லெவிஸ் கவிதை - சொல்வனம் இதழ்: 369

பிரார்த்தனை 

இந்த மாடி ஜன்னல் வழியாக 
வெளியே கவனிக்கும்போது
என் அம்மாவைக் காண்கிறேன் 
உண்மையில் இப்போது முதுமையினால் 
சற்றுத் தள்ளாடி நடக்கிறாள்
இரட்டைக் தூண்களைப் போல நிற்கும் 
மங்கிப் போன பனை ஓலைகளின் கீழ்
அவளது தூய வெண் கூந்தல்  
வீட்டில் செய்த ஒரு பாய்மரப் பாய் போல 
தோற்றமளிக்கிறது.

லேசான காற்றில் ஆடும் ஒரு படகைப் போல
சரளை பரப்பிய பாதையின் 
ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு
அவள் மெதுவாக அசைந்து செல்கிறாள்.

செவ்வாய், 30 ஜூன், 2026

இந்த விஷயங்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (29) - பண்புடன் இணைய இதழில்..

 

இந்த விஷயங்கள்

நாம் மிகவும் பற்றிக் கொள்ளும்
இந்த விஷயங்கள்
உயர்வான எதனுடனும் 
தொடர்புடையவை அல்ல.
சலிப்பினாலோ பயத்தினாலோ
பணத்தினாலோ அல்லது
முறிந்த அறிவினாலோ
நாம் இவற்றைச் செய்கிறோம்.
நமது வட்டமும்
நமது மெழுகுவர்த்தியின் ஒளியும் 
சிறியது, 
மிகச் சிறியது. 
அதைத் தாங்க முடியாதவராக

செவ்வாய், 9 ஜூன், 2026

நரிகளுக்காக - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (28) - பண்புடன் இணைய இதழில்..

னக்காக வருந்தாதீர்கள்.
நான் திறமையான,
திருப்தியான மனிதன்.

மற்றவர்களுக்காக வருந்துங்கள்
அமைதியின்றி நெளிபவர்கள்,
குறை சொல்பவர்கள்

தங்கள் வாழ்க்கையை
மேசை நாற்காலிகளை அடிக்கடி
இடம் மாற்றுவதைப் போல
மறுசீரமைத்தபடி இருப்பவர்கள்.

புதன், 27 மே, 2026

சிரிக்கும் இதயம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (27) - பண்புடன் இணைய இதழில்..

  

சிரிக்கும் இதயம்


உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-
இருண்ட அடிமைத்தனத்திற்குள்
அதை நசுங்க விடாதீர்கள்.

விழிப்புடன் இருங்கள்.
வெளியேற வழிகள் உள்ளன.
எங்கோ ஒரு ஒளி உள்ளது.
அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.
ஆயினும் அது
இருளை வென்று கொண்டேயிருக்கும்.

விழிப்புடன் இருங்கள்.

புதன், 20 மே, 2026

என்னவோர் எழுத்தாளர்! - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (26) - பண்புடன் இணைய இதழில்..

 

என்னவோர் எழுத்தாளர்!

இ. இ. கம்மிங்ஸிடம் 
எனக்குப் பிடித்தது என்னவென்றால்-
அவர் சொல்லின் புனிதத் திரையைக்
கிழிந்தெறிந்து,
தனது வசீகரத்தாலும் 
துணிச்சலான சாதுர்யத்தாலும்
அழுகிய போலித்தனத்தை
வெட்டிக் கடந்து செல்லும்
கட்டுக்கோப்பற்ற வரிகளை
நமக்கு அளித்தார்.

எவ்வளவு தேவையாக இருந்தது அது!
எவ்வளவு வாடிப் போயிருந்தோம் நாம்

வெள்ளி, 1 மே, 2026

கவிதை வாசிப்புகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (25) - பண்புடன் இணைய இதழில்..


விதை வாசிப்புகள்
எப்போதும் மிகவும் சோகமான சாபக்கேடான 
விஷயங்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

குலத்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்
ஆண்களும் பெண்களுமாக,
வாரம் தோறும், மாதம் தோறும், 
வருடம் வருடமாக, ஒன்றாக வயதாகி,
சிறு கூட்டங்களுக்கு முன் வாசித்துக் கொண்டு
தங்கள் மேதைமை என்றாவது ஒருநாள் 
கண்டுபிடிக்கப்படும் என்று நம்பிக் கொண்டு

புதன், 15 ஏப்ரல், 2026

போர் ரதங்களின் பாடல்; வெண்மதி இரவு - டு ஃபு சீனக் கவிதைகள் (7,8) - 'பண்புடன்' மொழிபெயர்ப்புச் சிறப்பிதழில்..

 போர் ரதங்களின் பாடல்


தங்கள் உருளுகின்றன, 
கடகடவென அதிர்கின்றன.
குதிரைகள் கனைக்கின்றன, 
சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.
படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டி 
அணிவகுத்துச் செல்கின்றனர்.
தந்தைமார், தாய்மார், 
மனைவியர் மற்றும் குழந்தைகள்
அவர்களை வழியனுப்ப ஓடி வருகின்றனர்.
அவர்களால் கிளம்பிய தூசியில்

திங்கள், 29 டிசம்பர், 2025

2025 பென் ஹீனி விருதை வென்ற டாம் பாலின் கவிதை - சொல்வனம் இதழ்: 356

டாம் பாலின் (தாமஸ் நீல்சன் பாலின் - ஜனவரி 25, 1949)  தனது கவிதைத் தொகுப்பான நாமன்லாக் (Namanlagh)_காக 2025_ஆம் ஆண்டின் பென் ஹீனி  (PEN Heaney) பரிசின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்த நூல் ஃபேபர் (Faber) வெளியீடாகும். 


(Belfast) பெல்ஃபாஸ்டில் வளர்ந்து, தற்போது ஆக்ஸ்ஃபோர்டில் வசிக்கும் டாம் பாலின் வட அயர்லாந்து கவிஞரும், விமர்சகருமாவார்.

திங்கள், 14 ஏப்ரல், 2025

கவிதைகள் மாதம் - கற்பனைத் தோட்டம் - சொல்வனம் இதழ்: 340


1 ஏப்ரல் செவ்வாய் கிழமை, கவிதைகள் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றது, அமெரிக்க தேசத்தில். புனித மாதமாக ஏப்ரல் மாதம் அனுசரிக்கப்பட ஆரம்பித்தது 1996_ஆம் ஆண்டில். அமெரிக்க கவிஞர்கள் கழகம்பதிப்பாளர்கள் மற்றும் கவிதை நேசர்களைக் ஒன்று கூட்டி இதை முன்னெடுத்தனர். அதன் துவக்கமாக அப்போது ஒரு இலட்சம் கவிதைப் புத்தகங்களை நூலகங்கள், பள்ளிகள் மற்றும் புத்தகக் கடைகளுக்கு வழங்கினார்கள்.

கவிதைகள் மாதத்தில், கவிதைகள் குறித்து கவிஞர்களும் எழுத்தாளர்களும் சொல்லிச் சென்றவை, நமக்கு கவிதை மேலான நேசத்தை மேலும் பலப்படுத்தும், கவிதைகள் ஒரு எழுத்து வகை என்பதைத் தாண்டி, கவிதைகள் ஒரு அனுபவம், ஒரு உணர்வு, மொழிகளைக் கடந்த ஒரு உண்மை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் எனக் கருதி, 27 கவிஞர்களின் கூற்றுகள்:

டி. எஸ். எலியட் [T.S. Eliot] :

உண்மையான கவிதை புரிந்து கொள்ளப்படும் முன்னரே சொல்ல வந்ததைச் சொல்லி விடும்.”

முதிர்ச்சியற்ற கவிஞர்கள் மற்றவர்களைப் பின்பற்றுவார்கள்; முதிர்ச்சியுள்ள கவிஞர்கள் நம்மைக் களவாடி விடுவார்கள்.”

உணர்ச்சிகளைத் தளர விடுவதன்று கவிதை, உணர்ச்சிகளிலிருந்து தப்பிப்பது; ஆளுமையின் வெளிப்பாடு அல்ல, ஆளுமையிடமிருந்து தப்பிப்பது.

திங்கள், 24 மார்ச், 2025

ஞானபீட விருதைப் பெறுவிருக்கும், வினோத்குமார் சுக்லா - 6 கவிதைகள் - சொல்வனம் இதழ்: 339

வினோத்குமார் சுக்லா கவிதைகள்

ஞானபீட விருதைப் பெறுவிருக்கும், வினோத்குமார் சுக்லா: 
2024_ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதினை தனது 88_ஆவது வயதில் பெறவிருக்கிறார் இந்தி எழுத்தாளரும், கவிஞரும், நாவலாசிரியருமான வினோத்குமார் சுக்லா (1 ஜனவரி 1937). யதார்த்தத்தில் இருந்து மாயத்தை வெளிக் கொண்டு வரும் நவீன பாணி எழுத்துக்காகப் பெயர் பெற்றவர். அன்றாட வாழ்வின் சிக்கல்களை துணிச்சலான குரலில் இணக்கமாகவும் நீடித்தும் பதிவு செய்து தனித்துவமாக விளங்கியவர். நேற்று, 22 மார்ச் 2025 அன்று, இவருக்கு 59_ஆவது ஞான பீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தி இலக்கியத்தில் இந்த கௌரவத்தை பெறும் 12_ஆவது எழுத்தாளர் இவர். 


பல இலக்கிய விருதுகளை பெற்ற இவர் ‘தீவார் மே ஏக் கிடுகீ ரஹதி தி’  (சுவரில் இருந்த ஒரு சன்னல்)  நாவலுக்காக, 1999_ஆண்டின் சிறந்த இந்தி படைப்பிற்கான சாகித்ய அகாடமி விருதை வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

சத்தீஸ்கரில் ராஜ்நந்த்கான் எனும் இடத்தில் பிறந்தவர். விவசாயத்தில் முதுகலைப் பட்டம் பெற்று வேளாண் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவரது எழுத்துகளில் பெரும்பாலும் கிராமப்புற வாழ்க்கை, சாதாரண மனிதர்களின் அனுபவங்கள், சமூகத்தைக் குறித்த அவதானிப்புகள் ஆகியன கருப் பொருளாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம். எளிய, நடுத்தர வர்க்க மக்களின் பிரச்சனைகளையும் உணர்வுகளையும் இவரது எழுத்துகள் உண்மையாகப் பிரதிபலிப்பதாகக் கொண்டாடப்பட்டு வந்தன. இதையே தற்போது பாரதீய ஞானபீட அமைப்பு செய்தியாளர்களுக்கான அறிவிப்பிலும் குறிப்பிட்டுள்ளது: ‘இவரது எழுத்துகள் அவற்றின் எளிமை, உணர்வுப்பூர்வம், தனித்துவம் ஆகியவற்றுக்காகப் பெயர் பெற்றவை. நவீன இந்தி இலக்கியத்தில் சோதனை ஆய்வுகளை மேற்கொண்டு, புகழ் பெற்றவை.”
**

1.

ஒருவர் தனது சொந்த வீட்டினை தொலைவிலிருந்து பார்க்க வேண்டும்

ஒருவர் தனது சொந்த வீட்டினை 
தொலைவிலிருந்து பார்க்க வேண்டும்.
ஒருவர் தனது வீட்டினைப் பார்ப்பதற்கு 
ஏழு கடல்களையும் தாண்ட வேண்டும்,
நிராதரவான நிலையிலும் 
கடக்க இயலாத தொலைவாயினும்

புதன், 23 அக்டோபர், 2024

அப்பா வீடு திரும்புகிறார் - திலீப் சித்ரே - சொல்வனம் இதழ்: 328


அப்பா வீடு திரும்புகிறார்

என் அப்பா பின்மாலைப் புகைவண்டியில் பயணிப்பார்
மஞ்சள் ஒளியில்  அமைதியான பயணிகளுக்கு நடுவே நின்றபடி
கவனிக்காத அவரது கண்களை புறநகர்கள் நழுவிக் கடந்து செல்லும் 
அவரது சட்டையும் கால்சட்டையும் நனைந்திருக்க 
அவரது கருப்பு மழை மேல்அங்கி சேறினால் கறை படிந்திருக்க

புதன், 24 ஏப்ரல், 2024

முழு நிலவு; காலை மழை; நான் தனித்து நிற்கிறேன் - டு ஃபு சீனக் கவிதைகள் (4,5,6) - உதிரிகள் கவிதைச் சிறப்பிதழில்..

டு ஃபு சீனக் கவிதைகள்

முழு நிலவு


கோபுரத்தின் மேல் -- தனித்த, இரு மடங்கிலான நிலவு.
குளிர்ந்த நதியின் மேல் இரவு நிரம்பிய இல்லங்களைக் கடந்து செல்கிறது.
அமைதியற்ற பொன்னிற அலைகளின் குறுக்கே ஒளியைச் சிதறுகிறது.

வியாழன், 14 மார்ச், 2024

ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள் - கனலி இதழ்: 35

 ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள்

1. இளமையில் இறக்கின்ற விளையாட்டு வீரனுக்கு

நீ உன் ஊருக்காகப் பந்தயத்தில் வென்ற வேளையில்
நாங்கள் உன்னை நாற்காலியில் ஏந்திச் சென்றிருக்கிறோம் சந்தை-வெளியில்  
மக்களும் சிறுவர்களும் வழிநெடுக நின்று ஆரவாரம் செய்தார்கள் 
தோளுக்கு மேல் உன்னைத் தூக்கி வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

இன்று, சாலையில் அனைத்து ஓட்டப் பந்தய வீரர்களும் வந்துள்ளனர்,

வியாழன், 8 பிப்ரவரி, 2024

புல்வெளியில் - சொல்வனம் இதழ்: 311

புல்வெளியில்

கண்களின் கவனத்திற்கு எளிதில் வராதவாறு,
வாலையும் பிடரி மயிரையும் காற்று அலைக்கழிக்க
குளிர்ந்த நிழலில் நிற்கின்றன மறைவாக;
அவற்றில் ஒன்று புல்லினை மேய்ந்தவாறு நகர்ந்திட
- மற்றது எங்கோ பார்த்தவாறு - மீண்டும் அனாமதேயமாக
நிற்பதைக் காண முடிகிறது.

இப்பொழுதிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அநேகமாக
இரு பனிரெண்டு தொலைவு வரிசை போதுமானதாயிருக்கிறது
அவற்றைப் பற்றிய பழங்கதைக்கு. கோப்பைகள், பந்தயப் பணம்

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

தேவாலயம் செல்லுதல் - சொல்வனம் இதழ் 309

 

தேவாலயம் செல்லுதல்

எதுவும் நடக்கவில்லை என நான் உறுதி செய்த பிறகு
கதவை ஓங்கி மூடிக் கொள்ள அனுமதித்து, உள்ளே நுழைந்தேன்.
மற்றுமோர் தேவாலயம்: தரைவிரிப்புகள், இருக்கைகள், மற்றும் பீடம்,
சில புத்தகங்கள்; பரந்து விரிந்து கிடந்த பூக்கள்; 
ஞாயிறுக்காகப் பறிக்கப்பட்டவை, இப்போது பழுப்பு நிறத்தில்;

புதன், 15 நவம்பர், 2023

அறுபத்து ஆறு வயதில் என் அம்மா - கமலா தாஸ் கவிதை (7) - உதிரிகள் இதழில்..


  அறுபத்து ஆறு வயதில் என் அம்மா

சென்ற வெள்ளிக்கிழமை காலையில்,
என் பெற்றோர் இல்லத்திலிருந்து
கொச்சினுக்கு வண்டியில் செல்கிறேன்.
எனதருகே அமர்ந்திருக்கும்,
அம்மாவை நான் பார்க்கிறேன்,
அரைத் தூக்கத்தில், வாய் திறந்து, 
அவளது முகம் சாம்பல் நிறத்தில் உயிரற்றதாக, 
வலியுடன் உணருகிறேன் 
எவ்வளவு வயதானவளாகத் தெரிகிறாளோ
அவ்வளவு வயதாகி விட்டது அவளுக்கு, ஆயின் விரைவில்
அந்த நினைப்பைத் தள்ளி வைக்கிறேன்,

புதன், 11 அக்டோபர், 2023

சொற்கள் - கமலா தாஸ் கவிதை (6) - உதிரிகள் இதழில்..

சொற்கள்

முழுதாக என்னைச் சுற்றிலும் சொற்கள், 
மற்றும் சொற்கள் மற்றும் சொற்கள்,
இலைகளைப் போல் என் மீது வளருகின்றன, 
அவை உள்ளிருந்து மெதுவாக வளர்வதை 
நிறுத்திக் கொள்வதாகத் தெரியவில்லை... ஆனால்
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன், 
சொற்கள் தொல்லையானவை,
அவற்றிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள், 
அவை பல விஷயங்களாக இருக்கலாம், 

வியாழன், 28 செப்டம்பர், 2023

ஓர் அறிமுகம் - கமலா தாஸ் கவிதை (5) - உதிரிகள் காலாண்டிதழில்..

ஓர் அறிமுகம்

எனக்கு அரசியல் தெரியாது ஆனால்
அதிகாரத்தில் இருப்பவர்களின் பெயர்கள் தெரியும், 
நேருவில் தொடங்கி அவற்றை ஒப்பிக்க முடியும் 
வாரத்தின் நாட்களை, அல்லது மாதங்களை ஒப்பிப்பது போல
நான் ஒரு இந்தியர், மிகப் பழுப்பு நிறத்தில், மலபாரில் பிறந்தவள்,
நான் பேசுவது மூன்று மொழிகளில், எழுதுவது இரண்டில்,
கனாக் காண்பது ஒன்றில்.
அவர்கள் சொன்னார்கள், ஆங்கிலத்தில் எழுதாதே, 
ஆங்கிலம் உனது தாய்மொழி இல்லை என்று.
ஏன் என்னைத் தனியாக விட மாட்டேன் என்கிறீர்கள்,

வியாழன், 27 ஜூலை, 2023

பத்து வயது ஆகையில் - சொல்வனம் இதழ்: 299

பத்து வயது ஆகையில்


அந்த முழு எண்ணமும் என்னை உணர வைக்கிறது
நான் ஏதோ ஒன்றுடன் இறங்கி வருவதைப் போன்று,
ஏதோ ஒன்று,
எப்படியான வயிற்றுவலியை விடவும் மோசமானது
அல்லது மோசமான வெளிச்சத்தில் நான்
வாசிக்கும் பொழுது வரும் தலைவலியைப் போன்றது--
ஒருவிதமான, ஆவியைப் போன்ற கொப்பளங்கள்,
மனநோயின் பொன்னுக்குவீங்கி,
ஆன்மாவை உருக்குலைக்கும் சின்னம்மை.

நீங்கள் சொல்கிறீர்கள் திரும்பிப் பார்ப்பதற்கு
இது வெகு சீக்கிரம் என,
அது ஏனெனில் நீங்கள் மறந்து விட்டீர்கள்
ஓரிலக்க வயதின் குற்றமற்ற எளிமையை
மற்றும் ஈரிலக்க வயதின் அழகான சிக்கலை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin