* தின மலர் ‘பட்டம்’ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
* தின மலர் ‘பட்டம்’ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

தூறல்: 33 - தினமலர் ‘பட்டம்’ (12-15), வல்லமை, ஆல்பம்


தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில் (பாகங்கள்: 12 - 15) :
பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தினமலர் பட்டத்தில் எனது படங்களுடன் வெளியான தகவல் பக்கங்கள்..

# 28 பிப்ரவரி 2018


#19 பிப்ரவரி 2018



#14 பிப்ரவரி 2018

செவ்வாய், 18 ஜூலை, 2017

தூறல்: 30 - அஞ்சலி



சிறந்த ஒளிப்படக் கலைஞரும், இயற்கை ஆர்வலரும், பறவை நேசரும், எழுத்தாளருமான திரு கல்பட்டு நடராஜன் நரசிம்மன் அவர்கள் 11 ஜூலை 2017 அன்று தனது 88 ஆவது வயதில் இருதய அறுவை சிகிச்சையின் போது இறைவனடி சேர்ந்தார்.  இவர் அரசுப் பணிகளில் பல பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர். பிறந்த ஊரை தன் பெயரோடு இணைத்துக்கொண்டவர்.

#
ஒளிப்பட மேதை
புகைப்படக் கலையில், 45 வருடங்களுக்கு முன்னர் இருந்த “கோடக் பேபி ப்ரௌனி’ கேமராவை உபயோகித்த அனுபவங்கள் பல கொண்டவர். ராயல் ஃபோட்டோக்ராஃபிக் சொஸைட்டி அமைப்பு இவரது புகைப்படத் திறனுக்காக அளித்த பட்டச் சான்றிதழ், அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி கையால் குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டிருக்கிறது. இவரது 13 படங்கள் தேசிய அளவிலான கண்காட்சிகளில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றிருக்கின்றன. திருச்சியில் வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தொடங்கி அதற்காக உழைத்தும் இருக்கிறார்.

அவரது புகைப்பட அனுபவங்களை PIT - தமிழில் புகைப்படக்கலை தளத்தில் “Legend Talks" எனும் கெளரவத்துடன் தொடராக, பாடப் பதிவுகளாக வெளி வந்தன. அவற்றை வாசிக்க கடைசிப் பாகமான இந்தப் பதிவுக்குச் சென்று அங்கிருந்தே முந்தைய பதிவுகளுக்குச் செல்லலாம்:

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்” என்ற தலைப்பின் கீழ் அவர் எழுதிய பல பதிவுகள் உட்பட அனைத்தையும் வாசிக்க அவரது தளத்திற்கு செல்லலாம்:

 இயற்கை மற்றும் பறவைகள் குறித்து இவர் எழுதியுள்ள தகவல்கள் யாவும் அனுபவப் பூர்வமானவை. அதை சுவாரஸ்யமாக அவர் சொல்லும் பாணி தனித்துவமானது!


சென்னையிலிருந்து பெங்களூரில் அப்போது கோரமங்களாவில் இருந்த அவரது மகளின் இல்லத்துக்கு வருகை தந்த சமயங்களில் பதிவுலக நண்பர்கள் ஷைலஜா நாராயணன், (ஜீவ்ஸ்) ஐயப்பன் கிருஷ்ணன், அண்ணா கண்ணன், பிரஸாத் வேணுகோபால் ஆகியோருடன் 3 முறைகள் சந்தித்திருக்கிறேன்.  இவரை நேர்காணல் செய்து எழுதிய கட்டுரை தினகரன் வசந்தம் வார இதழில் 2012 ஆம் ஆண்டு, 19 ஆகஸ்ட் உலக ஒளிப்பட தினத்தன்று வெளியானது:

                       http://tamilamudam.blogspot.in/2012/08/blog-post_19.html 

இதைத் தொடர்ந்து நேர்காணலை வாசித்த தூர்தர்ஷன் இயக்குநர் திரு ஸ்ரீனிவாசன் அவரைப் பொதிகை தொலைக்காட்சியின் ‘பொன்னான முதுமை’ நிகழ்ச்சிக்காகப் பேட்டி காணமுடிவு செய்து , பத்திரிகையின் மூலமாக என்னைத் தொடர்பு கொண்டு திரு. நடராஜன் அவர்களின் அலைபேசி எண்களை வாங்கி பேட்டி எடுக்கப்பட்டு அது இரண்டு பாகங்களாக பொதிகை தொலைக்காட்சியில் அதே வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியாயின. அது குறித்த எனது பகிர்வு இங்கே:

பொன்னான முதுமை’ என்பதற்கான ஒரு இலக்கணமாகவே வாழ்ந்தவர் திரு கல்பட்டார். கடந்த மாதம் வரைக்கும் சுறுசுறுப்பாக மின் குழுமங்களிலும், இணையப் பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வந்தார். அவரது நண்பர் திரு. டி.என்.ஏ. பெருமாள் குறித்த கட்டுரை மார்ச்-ஏப்ரல் “காடு” இதழில் வெளியாயிருக்கும் தகவலை சில வாரங்களுக்கு முன் நான் அவருக்குச் சொன்னதைத் தொடர்ந்து, மகிழ்ச்சியுடன் மடல் செய்ததோடு அலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசினார். தற்போது நான் பகிர்ந்து வரும் பறவைகள் குறித்த பதிவுகளைப் பாராட்டினார். அவரது பதிவுகளும் எனக்கு அவற்றை அடையாளம் காண உதவியாக இருப்பதைக் குறிப்பிட்டேன். வீட்டுக்கு வரும் பறவைகள் என்னென்ன என்பதை விசாரித்தார்.   அவற்றை நான் பட்டியலிட்ட போது Red wattled lapwing (ஆள்காட்டிப் பறவை) வருமா? அது கூவும் போது எப்படி இருக்கும் தெரியுமா? “டிட் யு டு இட்? Did you do it? என்றே கூவும்” என அதே போல உற்சாகமாகக் குரல் கொடுத்துக் காண்பித்தார். அந்த வயதிற்கு அத்தனை சக்தியோடும், சுறுசுறுப்பாகவும், நிறைந்த நினைவாற்றலோடும் இருக்கும் அவரைப் பாராட்ட வார்த்தைகள் இருக்கவில்லை. வணங்கினேன். (ஆச்சரியமாக, அடுத்த வாரத்தில் அந்தப் பறவையை தோட்டத்தில் கண்டேன். படமெடுக்கும் முன்னர் கிடுகிடுவென நடைபோட்டு எம்பிப் பறந்து விட்டது). மங்களூரில் மகள் வீட்டில் இருப்பதாகச் சொன்னவர் அடுத்த இரு தினங்களில் மகளுக்கு பெங்களூருக்கே மாற்றலாகி விட்டதென்றும், வந்ததும் தெரிவிப்பதாகவும், நண்பர்கள் யாவரும் சந்திக்கலாம் என்றும் சொல்லியிருந்தார். ஆனால் அவர் மறைந்த செய்தியே கிடைத்தது :( .

திருமதி. சாந்தா நடராஜன் அவர்களோடு இன்று பேசினேன். பெங்களூர் வந்த சில நாட்களில் இதய வலி அதிகமாகவும் இதயத்தில் செயற்கை வால்வு பொருத்த அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடானதாகவும், மிகத் தைரியமாக இருந்தார் என்றும், எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனளிக்காது போயிற்று என்றும் வருத்தினார். அவருக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள். திரு கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு அஞ்சலிகள்! அவரது படங்களும் அனுபவங்களும் வரும் சந்ததிகளுக்குப் பாடமாகும். அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

*****
 தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (11):

ன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஃப்ளிக்கர் தளத்தில் படங்கள் பதிய ஆரம்பித்த புதிதில், பெயர் தெரியாத பறவைகளை “Cute Bird" "Little Bird" என்றெல்லாம் பதிந்து வந்திருக்கிறேன். அது போலவே பூக்களையும். திரு. கல்பட்டு நடராஜன் அவர்களை முதன் முறை நான் சந்திக்கச் சென்ற போது, நான் போகும் முன்னரே என் ஃப்ளிக்கர் பக்கம் முழுவதையும் பார்த்து விட்டு கருத்து சொல்லத் தயாராகக் காத்திருந்தார். முதலில் பாராட்டுகளைத் தெரிவித்து விட்டு, பின்னர் “இது போலப் பொத்தாம் பொதுவாகப் பூக்களையும், பறவைகளைக் குறிப்பிடக் கூடாது. அவற்றின் பெயர் என்ன, முடிந்தால் அவற்றைப் பற்றிய தகவல்களையும் சேகரித்துக் கூடவே பதிய வேண்டும்” என அன்போடு வலியுறுத்தினார். அப்போதிலிருந்தே கூடுமானவரை பூக்களின் பறவைகளின் பெயர்களை சரியாக அறிந்து பதிந்து வந்தேன். பின்னர் அதுவே “தெரிஞ்சுக்கலாம் வாங்க” எனும் பகுப்பின் கீழ் விரிவான தனிப்பதிவுகளாக மாறின. இன்று தினமலரின் மாணவர் பதிப்பான பட்டம் இதழிலும் வெளியாகி வருகின்றன. ஆர்வத்தை சரியான பாதையில் செலுத்த ஆலோசனை வழங்கிய அவருக்கு என் நன்றி.

 அந்த வரிசையில் முத்துச்சரத்தில் முன்னர் நான் பகிர்ந்த இரட்டைவால் குருவி பற்றி, 22 ஜூன் 2017 தினமலர் பட்டத்தில் வெளியான எனது பதினோராவது கட்டுரை:



நன்றி தினமலர் பட்டம்!

****
படத்துளிகள்:

இந்த தூறலின் படத்துளிகளாக திரு. கல்பட்டு நடராஜன் அவர்கள் எடுத்த கருப்பு வெள்ளைப் படங்கள் சில, உங்கள் பார்வைக்கு:

#
Did you do it? ஆள்காட்டிப் பறவை

#
பூநாரை பஞ்சுப் பொதிபோன்ற குஞ்சுகளுடன்..

#
தினகரன் வசந்தம் பேட்டியில் குறிப்பிட்டிருக்கும்
எட்டுவார முயற்சியில் படம் எடுத்த ஆந்தை!

கிராமப்புறக் காட்சிகள்
#

#

#
*****

வியாழன், 15 ஜூன், 2017

கருவேப்பிலை - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (10)

கருவேப்பிலை (அ) கறிவேப்பிலை 
#1
நான்கு முதல் எட்டு மீட்டர் உயரத்திற்கு வளரக் கூடிய சிறிய மரம்..
Murraya koenigii

14 ஜூன் 2017, தினமலர் “பட்டம்” இதழின் பக்கம் நான்கில்..

#2

வியாழன், 9 பிப்ரவரி, 2017

செங்குதச் சின்னான் (Red Vented Bulbul) - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (9)

 செங்குதச் சின்னான்
உயரம்: 20 செ.மீ
ஆயுள்:  9-10 ஆண்டுகள்

6 பிப்ரவரி 2017 தினமலர் “பட்டம்” இதழின்.. 

பக்கம் நான்கில்.. 


படத்துடன் சேகரித்த தகவல்கள்..

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

தீச்சுவாலைக் கொடி - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (8)

தீச்சுவாலைக் கொடி
#1

3 பிப்ரவரி 2017 தினமலர் “பட்டம்” இதழின் அட்டையிலும்..
“நம்மைச் சுற்றி.. நம்மைப் பற்றி..” பக்கம் நான்கிலும்..
படத்துடன், சேகரித்த தகவல்கள்..

மேலும் படங்கள்..

புதன், 4 ஜனவரி, 2017

சல்லடைக் கூடு கட்டும் புள்ளிச் சில்லை - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (7)

2 ஜனவரி 2017 தினமலர் “பட்டம்” இதழின் அட்டையிலும்..
நம்மைச் சுற்றி.. நம்மைப் பற்றி.. பக்கத்திலும்..
படத்துடன், சேகரித்த தகவல்கள்..

சல்லடைக் கூடு அமைக்கும் சில்லைப் பறவை 

ஆங்கிலப் பெயர்:  SPOTTED MUNIA
வேறு பெயர்கள்:

வியாழன், 22 டிசம்பர், 2016

பாடும் பறவை.. புல்புல்.. - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (6)

கொண்டைக்குருவி புல்புல்..
#

12 டிசம்பர் தினமலர் பட்டம் இதழின் அட்டையிலும்..
#

“நம்மைச் சுற்றி - நம்மைப் பற்றி” பக்கத்திலும்... 

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

தூறல்: 28 -பட்டம், வல்லமை, சாரல்

தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (5)

22 நவம்பர் 2016 இதழில்..

சூப்பர் நிலாக்களைப் படமாக்கிப் பகிர்ந்த போது சேகரித்த தகவல்கள்...

அருகில் வந்த அழகு நிலா..

சென்ற மாதம் எடுத்த சூப்பர் மூன் இங்கே.  வெறொரு அபெச்சர் அளவில் (f/9) எடுத்த படம் பார்வைக்கு:

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

கறுப்பு அங்கி உடுத்திய விலங்கு - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (4)

21 நவம்பர் இதழில்..

...வெகு தொலைவுக்கு கேட்கும் வகையில், வெவ்வேறு சூழல்களில், 25 விதமான ஒலிகளை எழுப்பக் கூடியவை. தண்ணீரில் விளையாடவும் நீச்சலடிக்கவும் விரும்பும். ...


 கறுப்பு அங்கி உடுத்திய விலங்கு

செவ்வாய், 22 நவம்பர், 2016

பிறந்த உடனே எழுந்து ஓடும் விலங்கினம் - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (3)


தினமலரின் 14 நவம்பர் 2016, மாணவர் பதிப்பான பட்டம் இதழில்..


மைசூர் விலங்கியல் பூங்காவில் முன்னர் எடுத்த படங்களுக்காக இங்கே நான் சேகரித்த தகவல்கள்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin