ஞாயிறு, 25 நவம்பர், 2018

திருக்கார்த்திகை தீபங்களும்.. பண்டிகை நினைவுகளும்..

#1
ஓம் அருணாச்சலேஸ்வராய நமக!

வ்வொரு பண்டிகைக்குப் பின்னும் புராணக் கதைகளும், காரணங்களும்  கால காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கலாச்சார வழக்கங்களும், மரபுகளும் உள்ளன. முந்தைய தலைமுறையினரை போல அவற்றை மிகச் சரியாக இன்று நாம் பின்பற்ற முடிவதில்லைதான். ஆனாலும் ஒவ்வொருவரும் அவரவர் வாழும் இடங்களில் முடிந்தவரை சிலவற்றையாவது பின் பற்றி வருவது ஆறுதலான ஒன்றே.

#a
ஒரு திருகார்த்திகை அன்று.. 
வீட்டு ‘மணவட’ முன்பு..
ல்லாப் பண்டிகைகளும் சிறுவயது நினைவுகள் இல்லாமல் கடந்து போவதில்லை. திருக்கார்த்திகைக்கு ஓரிரு நாட்கள் இருக்கும் போதே

ஞாயிறு, 11 நவம்பர், 2018

பெரிதினும் பெரிது கேள்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 41
பறவை பார்ப்போம் - பாகம்: 32

#1
"நேசிக்கப்பட வேண்டிய தேவையுடன்  பிறக்கிற குழந்தை, 
அதனிலிருந்து மட்டும் வளர்ந்து வெளிவர முடிவதேயில்லை!"
_ஃப்ராங்க் A. க்ளார்க்


#2
"எல்லாவற்றுக்கும் மேலாக 
உங்களுக்கு நீங்கள் உண்மையாய் இருங்கள், 
அப்படி உங்களை உங்கள் இதயத்திற்குக் கொடுக்க முடியாவிட்டால் உங்களை அதனிடமிருந்து வெளியே எடுத்து விடுங்கள்."

திங்கள், 5 நவம்பர், 2018

கல்கி தீபாவளி மலரில்.. - கரையும் அலையும்



248 பக்கங்களில் சிறுகதைகள், கவிதைகள், பேட்டிகள், ஓவியங்களுடன்
  பயண, ஆன்மீக மற்றும் பொதுக் கட்டுரைகளுமாக மலர்ந்திருக்கும் 
2018 கல்கி தீபாவளி மலரில் 
9 ஒளிப்படக் கலைஞர்களின் பங்களிப்பும்.. 

அதில்..
பக்கம் 70_ல்..
எனது ஒளிப்படம்..

ஞாயிறு, 4 நவம்பர், 2018

வெற்றிக் கனி

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 41
#1
“நீங்கள் செய்வதெல்லாம் தனித்துவமானதென நடித்திடுங்கள். 
அவை தனித்துவம் பெற்றிடும்." 
_ William James

#2
“இந்த வாழ்வின் பெரும்பாலான நிழல்களுக்குக் காரணம் 
ஒருவர் தனது சொந்தக் கதிரொளியில் நின்றிருப்பதே..!”
_Ralph Waldo Emerson

#3
“யாரோ ஒருவர் மலர்களைக் கொண்டு தரக் காத்திராமல்

வியாழன், 1 நவம்பர், 2018

சர்வதேச பிரமிட் வேலி, பெங்களூரு

#1
ர்வதேச பிரமிட் பள்ளத்தாக்கு (International Pyramid Valley) பெங்களூரிலிருந்து 30 கிமீ, நான் வசிக்குமிடத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது. பெங்களூரின் தெற்கே கனகபுரா தாலுக்காவைச் சேர்ந்த ராம்நகரில் பல ஏக்கர் அளவில் பசுமையும் எழிலும் வாய்ந்த இடத்தினுள் எழுப்பப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப் பெரிய தியான பிரமிட் என்கிறார்கள்.

தன்னை உணரும் அனுபவத்துக்கான தேடலில் ஒரு கருவியாக இது மக்களுக்கும் அமைப்புகளுக்கும் உதவ 2003_ஆம் ஆண்டு பிரம்ம ரிஷி பத்ரிஜி இது உருவாக்கப்பட்டுள்ளது.  முதலில் மைத்ரேய புத்த விஸ்வாலயம் என்று அழைக்கப்பட்ட இந்த ஆன்மீக தியான ஸ்தலம்  இந்தியாவில் உள்ள ‘பிரமிட் ஸ்பிரிச்சுவல் ட்ரஸ்ட்’ என்கிற அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் வந்தபிறகு பிரமிடு வேலி (பள்ளத்தாக்கு) என்று பெயரில் அழைக்கப் படலாயிற்று.

#2

இந்த ஆன்மீக மையத்தின் பிரதான நோக்கம் தியானம் என்ற அம்சத்தில் உள்ள அறிவியல் ரீதியான உண்மைகளை பரப்ப வேண்டும் என்பதாக இருக்கிறது.  தியானத்திற்கான பிரத்யேக இடமாக, பிரமிடு தியான இயக்கத்தின் கேந்திரமாக உள்ளது.

ளாகத்தின் பிரதான ஈர்ப்பாக பிரமிட் இருந்தாலும் நுழைவிடத்திலிருந்து அங்கு செல்லும் வழியெங்கும் இருக்கும் பாறைகள், மூங்கில் மரங்கள், அழகிய நீர் நிலைகள், அழகாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஜென் தோட்டங்கள் ஆகியன மனதுக்கு இரம்மியமான சூழலை அளிக்கின்றன:

 #3

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin