'விகடனில் நானும்' என பதிவிட்டிருந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து யூத்ஃபுல் விகடனில் என் படைப்புகள் இடம் பெற்று வருகின்றன. இன்று எனது குறள் கதை வெளியாகியுள்ளது. நன்றி இளமை விகடன்!
அடுத்த மகிழ்ச்சி
'டாப் டென்னில் நானும்...!'
நமது வலைப்பூக்களாகிய செடிகளில் மொட்டு விடும் பதிவுகள் ஒவ்வொன்றும் மலருகையில் அதன் மணத்தைப் பரப்பி வரும் தோட்டம் இப்போது
விருது விழா 2008 என்கிற மலர்க் கண்காட்சியை நடத்தி முடித்திருக்கிறது!
நன்றி தமிழ்மணம்!
வெற்றி பெற்ற யாவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
முதல் சுற்றில் 'கலாச்சாரம்' பிரிவில் எனது
"திண்ணை நினைவுகள்:கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்" மூன்றாவது இடத்தில்.
முத்துலெட்சுமி எழுதிய
திண்ணை பதிவினால் ஈர்க்கப்பட்டு அவருக்கு வரையும் மடலாகவே நான் ரசித்து ரசித்து நினைவுகளில் மூழ்கி மூழ்கி எடுத்த முத்து.
'காட்சிப் படைப்பு' பிரிவில் "
எம்மதமும் எமக்கு...[PiT- இறுதிச் சுற்று-'கட்டமைப்பு'க்கு]"
நாலாவது இடத்தில்.
மாதாமாதம் விதவிதமான தலைப்புகள் தந்து நமக்கு புகைப்பட போட்டிகள் நடத்தும் PiT குழுவினரால் எழும்பிய ஆர்வம். அவர்களுக்கு நன்றி ஏற்கனவே நவின்றாகி விட்டது எனது
ஜனவரி மாத பிட் பதிவில்.டெக்னிக்கலாக அதிகம் தெரியா விட்டாலும் புகைப்படங்களை நான் கவிதையுடனும், ஒரு மெசேஜ் அல்லது கான்செப்டுடன் அளிக்கும் விதத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக இதை எடுத்துக் கொள்கிறேன். இப்பதிவு வரிசையில் முந்தும் என என்னை விட ஆர்வத்துடன் ஆருடம் சொன்ன
திகழ்மிளிருக்கும் நன்றி:)!
படைப்பிலக்கியப் பிரிவில் "
'புகை'ச்சல்" கவிதை பதினைந்தாவது இடத்தில். ‘புகையைக் கை விடுங்களேன்’ என்று இதில் நான் வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கும் செய்தி மனதுக்குத் தருகிறது மகத்தான திருப்தி.
ஆக.. என் பதிவுகள் இவ்விடங்களுக்கு வரக் காரணமாய்
வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்!
இந்த நேரத்தில் "
For the coolest Blog I ever Know" எனும் மேலிருக்கும் பட்டாம்பூச்சி விருதை வரிசையாக எனக்கு வழங்கிய
கடையம் ஆனந்த் [
என் பதிவுகளுக்கிடையே இடைவெளி அதிகமாகையில் 'எப்போது அடுத்தது' என எழுப்பிடுவார் கேள்வி],
என் சிறுகதைகளையும் செய்தி சார்ந்த கவிதைகளையும் பாராட்டி வழங்கிய
பாசமலர்,
டைமிங்காகக் கவிதைகள் போடுவதாய் சிலாகித்து, செல்லமாக ‘வலையுலகக் கவிக்குயில்’ என அழைப்பதில் மகிழும்
புதுகைத் தென்றல், '
புகைப்படம், எனது கருத்து, தொடர்ந்த முயற்சிகளைப் பாராட்டி' வழங்கிய
மதுமிதாவுக்கும் என் நன்றிகள்.
கூடவே, வழங்க விரும்புவதாகப் பதிவிட்ட
அமுதா, சந்தனமுல்லை, தர விரும்புவதாக தனி மடல் அனுப்பிய
ரிஷான் ஷெரீஃப் இவர்களுக்கும்
என் நன்றி! எங்கு திரும்பினும் திறமைகளாய் கொட்டிக் கிடக்கும் பதிவுலகில் எந்த மூவரை எனத் தேர்ந்தெடுப்பீர்களென அவருக்கு
பெற்ற விருதினை அத்தனை பேருக்கும் பிரித்துக் கொடுக்குமாறுஅவருக்கு வழங்கிய ஆலோசனையை நானும் கடைப்பிடிக்கிறேன் இப்போது.
உத்வேகம் தந்தவர்கள்:
நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள் மூவர். முதலாவதாக
நெல்லை சிவா.தமிழில் வலைப்பூ என்பதை இவரது மின்மினி மூலமே அறிந்தேன். அப்போது பதிவுலகினுற்குள் வராத காலமாகையால் பின்னூட்டங்கள் அதிகம் இட்டதில்லை. இருப்பினும் பல பதிவுகளை ரசித்துப் படித்திருக்கிறேன்.
அடுத்து நைன்வெஸ்ட்
நானானி. இவரது பதிவுகளால் ஈர்க்கப் பட்டு இட ஆரம்பித்த பின்னூட்டங்களே என் பதிவுலகப் பிரவேசம்,தொடர்ந்து என் ஒவ்வொரு பதிவையும் உற்சாகப் படுத்தி வருபவர்.
வள்ளுவம்
கோமா. நண்பர் வட்டம் இலக்கியப் பத்திரிகை, திண்ணை இணைய இதழ் ஆகியவற்றில் வந்த என் எழுத்துக்கள் அத்தனையும் அறிந்தவர், அப்போதே ஊக்கம் தந்தவர், வலையிலும் வரவேற்பு கூறி என் முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்டவர்.
இவர்களைப் போல நேரடியாக அன்றி, தன் எழுத்துக்களால் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தந்தவர் இன்னும் தந்து கொண்டிருப்பவர் ஒருவர், சர்வேசன். எனது சமீபகால கவிதைகள் பலவற்றிற்கான பொறியினை இவரது பதிவுகளிலிருந்து பெற்றேன் என்றால் அது மிகையாகாது.
சர்வேசன்-ஆக்கியவன் அல்ல அளப்பவன் என்கிற இவரது வலைப்பூ "surveys about anything and everything in Tamil for the Tamil" என்றே சொல்கிறது.
சமூகத்தைப் பற்றி சகலதையும் அலசும் இவரது எழுத்துக்களில் காணப்படும் வீச்சும், பேச்சு வழக்கிலே எழுதும் ஸ்டைலும் பிடிக்கிறது எனக்கு. முத்துச்சரத்தின் ப்ரொஃபைல் படம் இவர் எடுத்ததே. நன்றாயிருக்கிறது என்றதுமே தந்து விட்டார் என் வலைப்பூவுக்கு. எதற்கு நன்றி சொன்னாலும் ‘தன்யனானேன்’ என்றிடுவார் தன்னடக்கத்துடன். ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகரல்லவா:)?
துளசி தளம் எல்லோருக்கும் கற்றிட பாடங்கள் கொண்ட நூலகம். பள்ளி நினைவுகள், வாழ்க்கையில் கடந்த வந்த பாதைகள் ['அக்கா’ தொடர்] ஆகியவற்றைப் படித்துப் பிரமித்துப் போயிருக்கிறேன். அது போல எழுத முடியுமா தெரியாது. ஆனால் அப்படி ஒரு ஆசை அடி நெஞ்சில் இருக்கிறது. ஒரு புகைப்படப் பதிவை எப்படி சுவாரஸ்யமாகக் கொடுக்க வேண்டும் என்பதற்கான பொறியை இங்கிருந்தே பெற்றேன். எனக்கேற்றவாறு ஒருபாணியை அமைத்தும் கொண்டேன். அதே போல பின்னூட்டமிடுபவர் ஒவ்வொருவரையும் ‘வாங்க’ என அன்பாய் விளித்துப் பதிலளிப்பார். தனித்தனியாக பதில் தரவும் இவரிடமே கற்றேன்.
ஊக்கம் தந்தவர்கள்:
ஒருவரா இருவரா எத்தனை பேர். இருந்தாலும் சிலரைக் குறிப்பிட்டாக வேண்டும். இணைய இதழ்களில் எழுதுவதை நிறுத்தியிருந்த என்னை மீண்டும் எழுத வைத்த
ரிஷான் ஷெரீஃப், கவிதைகளை எளிமையாய் எழுதுதிலும் இருக்கிறது ஒரு நன்மை, சுலபமாய் நுழைந்து விடும் பிறர் மனதிலே சொல்ல வந்த கருத்து எனப் புரிய வைத்த
கிரி, தூரத்தில் இருந்தபடி வலைப்பூ அமைப்பில் என்ன சந்தேகம் வந்தாலும் உடனுக்குடன் தீர்த்து வைக்கும்
தமிழ் பிரியன், எழுதுவோடு நின்றிடாமல் புகைப்படங்களிலும் கவனம் செலுத்துங்கள் என ஃப்ளிக்கர் தளத்தில் நுழையக் காரணமாய் இருந்த
ஜீவ்ஸ், பத்திரிகைகளிலும் முயற்சிக்குமாறு அடிக்கடி ரிஷானைப் போலவே வலியுறுத்தி வரும்
ஷைலஜா, தனிமடலில் இலக்கியம் பேசும்
சதங்கா[இருவருக்கும் இருந்த ‘விகடனில் நுழையும் கனவு’ மெய்ப்பட்டது ஒரே சமயத்தில் என்பது உங்களுக்கு கூடுதல் தகவல்!].
வலைக்குள் வந்த சமயத்தில் பலவிதமானவர்களின் படைப்புகள் படிக்கக் கிடைத்தன். அச்சமயத்தில் நாம் இத்தனை எளிமையாய் எழுதுவதும் கவிதைதானா என்கிற மிரட்சியுடன் திருவிழாவில் தொலைந்த குழந்தை போலத் ‘திருதிரு’வென விழித்து நின்ற போது ‘வாங்க அப்படியெல்லாம் பார்த்தால் நம் எண்ணங்களை நாம் வெளிப்படுத்த வாய்ப்பே இல்லாது போகும். மற்றவர் சொல்வதைப் பற்றி நினையாமல் மனதுக்கு பிடித்ததை செய்யலாம்’ என அன்போடு முத்துச்சரத்தைக் கை பிடித்து அழைத்துச் சென்று தன் வலைப்பக்கத்திலே ஓர் இடமும் தந்தவர்
கவிநயா. எப்போதும் இவர் என் 'நினைவின் விளிம்பில்’.
அடுத்து வலைச்சரம். அங்கு
ஆயில்யன், தமிழ்பிரியன், நானானி,
கவிஞர் N.சுரேஷ், ரிஷான் ஷெரீஃப்,
ரம்யா,கோமா ஆகியோர் எனக்களித்த பாராட்டு. அதற்குக் களம் தந்த
சீனா சார். எனக்கு இவற்றால் அதிகரித்தது ஒரு பொறுப்புணர்வு.
உடன் வருபவர்கள்:
இவர்கள் உடன் மட்டும் வரவில்லை உத்வேகம் ஊக்கம் ஆகியவற்றோடு உற்சாகத்தையும் சேர்த்துத் தருபவர்கள். என் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்த்த மறக்காத
வல்லிம்மாவில் ஆரம்பித்து பலரும் இருக்கிறீர்கள். தனித்தனியாக யாரையும் குறிப்பிடவில்லை என நினைத்துக் கொள்ள வேண்டாம்.
வலைப்பூவைத் தொடருபவர்கள், follower ஆக இல்லாவிட்டாலும் தொடர்ந்து என் ஒவ்வொரு பதிவுக்கும் வந்து உள்ளார்த்தமான கருத்துக்களைப் பதிந்து செல்லுபவர்கள், 'பரவாயில்லை இனித் தொடர்ந்திடலாமோ முத்துச்சரத்தை' என இப்போது நினைக்கின்ற சில பேர்கள்.. இவர்கள்
எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!