ஒளிப்படக் கலையின் 177_வது வருடம். 19 ஆகஸ்ட், இன்று உலக ஒளிப்பட தினம். தத்தமது உலகத்தை உலகத்தோடு பகிர்ந்து கொள்ளும் அத்தனை ஒளிப்படக் கலைஞர்களுக்கும் நல்வாழ்த்துகள்!
 |
என் முதல் கேமரா |
“
நீங்கள் மட்டுமல்ல, பொதுவாகவே ஏன் பல ஒளிப்படக் கலைஞர்களுக்கும் சரி, ஓவியர்களுக்கும் சரி கருப்பு வெள்ளைப் படங்கள் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு..?” சமீபத்திய பதிவொன்றில் என்னிடம் எழுப்பப்பட்ட கேள்வி. வர்ணங்கள் அழகு. வர்ண மயமானது வாழ்க்கை.
இருப்பினும் அதை அப்படியே பதிவு செய்வதை விடுத்து ஏன் கருப்பு வெள்ளையில் காட்ட வேண்டும்?
இதற்குப் பல காரணங்கள். வண்ணப் படங்கள் எடுக்கும் வசதி இல்லாத நாட்களில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைக்கும் ஏன் நம் மனதை விட்டு அகலாமல் நிற்பதை மறுக்க முடியாது. கருப்பு வெள்ளைப் படங்களில்
வண்ணங்களால் ஏற்படும் கவனச் சிதறல் தவிர்க்கப்பட்டு கருப்பொருளின் மேல் கவனம் குவிகிறது. ஒளியும் நிழலும் சிறப்பாக வெளிப்படுகிறது. கருப்பு வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணங்களின் கலவையை சரி வரக் கொண்டு வருவதிலிருக்கும் சவால் பிடித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு கலைஞருக்குள்ளும் இருக்கும் தனிப்பட்ட இரசனையின் வெளிப்பாடாகவும் அமைந்து போகின்றன கருப்பு வெள்ளைப் படங்கள்.
குறிப்பாக மனிதர்களின் உணர்ச்சிகளைத் துல்லியமாகக் காட்டுவதிலும் வல்லமை வாய்ந்தவை கருப்பு வெள்ளை portrait படங்கள். ‘இல்லையென சொல்லமுடியுமா?’ கேட்கிறார்கள் இவர்கள்:
#1
‘எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாய் மாறும்..’
#2
‘இரவானால் பகலொன்று வந்திடுமே..’