எழுத்து
அநேகமாக
இது ஒன்று மட்டுமே
உள்ளது
உனக்கும்
சாத்தியமற்றவைக்கும்
இடையினில்.
மதுவோ
மங்கையின் அன்போ
செல்வமோ
அதற்கு
ஈடாகாது.
எழுத்தை
எதுவும்
உன்னைக் காப்பாற்றாது.
சுற்றுச் சுவர்கள்
தகர்ந்திடாமல்
தொடரும் கூட்டம்
தொலைந்திடாமல்
காக்கிறது.
இருட்டை
வெடித்துச்
சிதறடிக்கிறது.
எழுத்து
முடிவானதொரு
உளநோய் மருத்துவர்,
அனைத்து தெய்வங்களிலும்
கருணைமிரு
தெய்வம்.
எழுத்து
மரணத்தைத்
துரத்தும்.
அதற்கு
விட்டுப் போகத்
தெரியாது.
வலிமிகும் வேளையில்
எழுத்து
தனக்குத் தானே
சிரித்துக் கொள்ளும்.
அது ஒரு
கடைசி எதிர்பார்ப்பு,
கடைசி விளக்கம்.
இதுதான்
எழுத்து.
*
மூலம்: "writing" By Charles Bukowski
*
26 ஜூன் 2022, சொல்வனம் இதழ்: 273_ல் வெளியாகியுள்ள கவிதை. நன்றி சொல்வனம்!
**
படம்: இணையத்திலிருந்து..
***
மட்டிப்பர்ப்பஸ் மருந்து!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம். ஸ்பாமில் இருந்து மீட்டு விட்டேன். தகவலுக்கும் நன்றி:).
நீக்குவெகு திரள் கூட்டத்தின் சராசரி வாழ்க்கை முறையிலிருந்து விலகி வாழும், சாத்தியமற்ற கனவுகளை நனவாக்க முயற்சிக்கும் கவிஞனின் அனுபவ மொழிகள் காலத்தைக் கடந்தும் சலனத்தை ஏற்படுத்துகிறது. மூன்று கவிதைகளும் அழகான முத்துக்கள். கோர்த்து அளித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குமூன்றையும் வாசித்து அளித்திருக்கும் கருத்துக்கு மிக்க நன்றி.
நீக்கு'எழுத்து மல்ட்டிப்பார்ப்பஸ் மருந்து' என்று என்று நேற்று ஒரு கமெண்ட் கொடுத்திருந்தேன். அநேகமாக ஸ்பாமில் இருக்கும்!
பதிலளிநீக்குஎழுத்து பற்றிய கவிதை தமிழாக்கம் அருமை.
பதிலளிநீக்குநிறைய பேரை எழுத்தும் பேச்சும் தான் வாழ வைத்து கொண்டு இருக்கிறது.
சொல்வனத்தில் இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்.
உண்மைதான். வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குஅருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஉண்மைதான். எழுத்து பல வகைகளில் உதவுகிறது 'உள் நோய் மருத்துவர்'!! நல்ல வரிகள். உங்கள் மொழியாக்கமும். வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கீதா.
நீக்கு