வியாழன், 30 மே, 2019

இந்திய சாம்பல் இருவாச்சி ( Indian Grey Hornbill ) - பறவை பார்ப்போம்: பாகம் (39)

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 50
#1
இந்திய சாம்பல் இருவாச்சி
(இளம் பறவை)

ங்கள் குடியிருப்பில் இருக்கும் வீட்டுத் தோட்டங்களுக்கு பலவிதமான பறவைகள் வந்தபடி இருப்பதையும், அவற்றைப் படமாக்கி நான் பகிர்ந்து வருவதையும் அறிவீர்கள். சமீபத்திய வரவு ’இந்திய சாம்பல் இருவாச்சி'.  குடியிருப்பின் கடைசி வீட்டையொட்டிய மரத்தில் கூடமைத்திருந்த ஒரு ஜோடி, மற்றும் அதன் இளம் பறவைகள் அவ்வப்போது ஒவ்வொருவர் தோட்டத்திற்கு வந்தமர்ந்து தரிசனம் தந்து போகலாயின. ‘இன்று நான் பார்த்தேன்.. இதோ இன்று எங்கள் தோட்டத்தில்..’ என அவரவர் படங்களை வாட்ஸ் அப் குழுமத்தில் பகிர்ந்து வந்தனர். 

#2
தாய்ப் பறவை

வளர்ந்த பறவைகள் மிகுந்த ஜாக்கிரதை உணர்வு கொண்டவை.  பலமுறை அதிகாலை வேளையில் முருங்கை மரத்தில் அமர்ந்து பருந்தினைப் போலப் பெரும் குரலெழுப்பிப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அறைக்குள் நின்று படம் எடுக்க முயன்றிடும் என்னை எப்படியோ கவனித்து உடனே பறந்து போய் விடும். ஆனால் இளம் பறவை கண்டு கொள்ளாமல் நேற்று படம் எடுக்க விட்டது.  அதன் தாய், தந்தையைப் படமாக்கும் வேளைக்காகக் காத்திருந்தேன். இன்று அதிகாலை, தோட்டத்துச் சுற்றுச் சுவருக்கு அந்தப் பக்கம் சற்று தொலைவில் இருக்கும் உயர்ந்த மரத்தில் ஒன்றாக அமர்ந்திருந்த அதன் பெற்றோரையும் இன்று படமாக்கி விட்டேன்:). வாட்ஸ் அப் குழுமத்திலும் பகிர்ந்து கொண்டாயிற்று:).

#3
ஜோடியாக பெண் பறவையும் ஆண் பறவையும்..


இப்போது உங்களுடன்.. இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த சுவாரஸ்யமான தகவல்களுடன்..

#4

ஞாயிறு, 26 மே, 2019

கிளிப் பேச்சு

முருங்கை மரத்துக் கிளிகள்:

#1
“எங்கிட்ட மோதாதே..”

ரு காலை நேரம். தோட்டத்து முருங்கை மரத்தின் மேல் கிளிகள் கீச் மூச் என ஒரே சத்தம். சத்தத்தைக் கேட்டு நாம் அவசரமாகக் கேமராவை எடுத்துக் கொண்டு போகும் முன்னரே சிலநேரங்களில் அவை பறந்து விடுவது உண்டு. சாப்பாட்டு நேரமாகையால் தவிர்க்க நினைத்தேன். ஆனால் விடாமல் பத்து நிமிடங்களாகியும் சத்தம் நிற்காததால் கேமராவுடன் சென்றால் பலனிருக்கும் எனத் தோன்றவே கேமராவுடன் முதல் மாடிக்கு விரைந்தேன்.

#2
“எதுவானாலும் பேசித் தீத்துக்கலாம்..”

வெள்ளி, 17 மே, 2019

ஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..

கிலமெங்கும்
ஆதிப்பெண்கள்,
ஆங்காங்கே 
மலர்களைக் கொண்ட
முட்கிரீடங்கள் தரித்து.
மாறவில்லை எதுவும்.

புதன், 15 மே, 2019

அட்டர கச்சேரி, KGID, GPO - பெங்களூர்.. சில Landmarks.. (2)

கர்நாடக உயர் நீதி மன்றம்:

#1

ர்நாடகாவின் சட்ட சபை இயங்கி வரும் விதான செளதாவுக்கு நேர் எதிரே உள்ளது கர்நாடக உயர் நீதி மன்றம். ஒரு காலத்தில் மைசூர் உயர் நீதி மன்றம் என்ற பெயரில் இயங்கி வந்திருக்கிறது. இக் கட்டிடத்திற்கு ‘அட்டர கச்சேரி’ (பதினெட்டு அலுவலகங்கள்) என்ற பெயரும் உண்டு.  கற்களாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டு, முழுவதும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட இந்தக் கட்டிடம் இரண்டு தளங்களைக் கொண்டது. ராவ் பகதூர் ஆர்காட் நாராயணசாமி முதலியார் என்பவரின் மேற்பார்வையில் கிரேக்க மற்றும் ரோம கட்டிடக்கலைப் பாணியைப் பின்பற்றி 1868_ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ‘பழைய பொது அலுவலகங்கள்’ என அழைக்கப்பட்டது. 

#2


திப்பு சுல்தானின் கோடைக் கால அரண்மனையிலிருந்து இடமின்மையால் மைசூர் அரசாங்கம் 18 பொதுத்துறை அலுவலகங்களை இந்தக் கட்டிடத்திற்கு மாற்றிய போது ‘அட்டர கச்சேரி’ என்ற பெயர் வந்திருக்கிறது.

புதன், 8 மே, 2019

விதான செளதா.. விகாஸ செளதா.. - பெங்களூர்.. சில Landmarks.. (1)

விதான செளதா:
#1

ர்நாடக மாநிலத்தின் சட்டசபைக் கட்டிடமான விதான செளதா, இந்தியாவின் மிகப் பெரிய சட்டசபைக் கட்டிடமும் ஆகும். மைசூர் நியோ திராவிடப் பாணியையும், இந்தோ-சராசனிக் பாணியின் சில அம்சங்கங்களையும், திராவிடப் பாணியையும் பின்பற்றிக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 1956_ல் கட்டி முடிக்கப்பட்ட விதான செளதா  தரையிலிருந்து மேலே நான்கு தளங்களையும், தரைக்குக் கீழே ஒரு தளத்தையும் கொண்டது.

2300 அடி x 1150 அடி நீள அகலம் கொண்டது.

#2


முகப்புத் தாழ்வாரத்திற்கு இட்டுச் செல்லும் 45 படிகளும் 200 அடி அகலம் கொண்டவை. கிழக்குப் பக்க தாழ்வாரம் 40 அடி உயரம் கொண்ட 12 கிரானைட் தூண்களைக் கொண்டவை.  அழகான கூரைச் சித்திரங்களும் உண்டு.

#3

வெள்ளி, 3 மே, 2019

அனந்தபுரம் ஏரிக் கோயில் - சைவ முதலையும்.. கடு சர்க்கரை யோகமும்.. - கேரளம் (5)

#1

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் அனந்தபுரா கிராமத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கிறது “அனந்தபுரம் ஏரிக் கோவில்”.  கேரள மாநிலத்தில் ஏரிக்குள் அமைந்திருப்பது இந்தக் கோவில் மட்டுமேயாகும். கும்பாலா எனும் இடத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ளது. நாங்கள் பேகலில் இருந்து மங்களூர் திரும்பும் வழியில் இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.

நண்பகல் ஒரு மணி ஆகிவிட்டபடியால் கோவிலின் மூலஸ்தானம் மூடி விட்டிருந்தார்கள். அமைதியான சூழலில் அமைந்த கோவில். ஆலயம் எழும்பி நிற்கும் ஏரியானது சுமார் 302 சதுர அடி அளவிலானது.

#2

#3
 #4

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் குடிகொண்டுள்ள அனந்த பத்மநாபசுவாமியின் மூலம் இதுவே என்கிறார்கள்.  புராணங்களின் கூற்றுப்படி பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இது என நம்பப் படுகிறது. இதை அங்கிருந்த பெரியவர் ஒருவரும் கூறினார்.

புதன், 1 மே, 2019

மே தினம் - இவர்கள் இல்லையேல்..

ழைப்பென்பது மனிதனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அல்ல. கனவு மெய்ப்படவும்,  வாழ்வுக்கான ஒரு அர்த்தத்தைத் தேடவும் அதில் மனநிறைவு கொள்ளவும் கொடுக்கிற விலை. அர்ப்பணிப்புடன் கடுமையான உடல் உழைப்பைக் கொடுக்கும் பாட்டாளி மக்கள் தம் உழைப்பில் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களின் தேவைகள் நிறைவேறவும் உரிய அங்கீகாரம் கிடைக்கவும் வாழ்த்துவோம்.


சிறு வியாபாரிகள்

#1
குழந்தைகளைக் குதூகலப்படுத்த
பெங்களூர் லால்பாக் தோட்டத்தில்..

#2
கோடைத் தாகம் தணிக்க
பெங்களூரு உயர்நீதி மன்ற வளாகத்தில்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin