Thursday, December 31, 2015

நெல்லை ஓவியர் மாரியப்பன் படைப்புகள் - 2015 பெங்களூர் சித்திரச் சந்தை - பாகம் 2

2015 பெங்களூர் சித்திரச் சந்தை (பாகம் 1) ‘இங்கே


நெல்லையைச் சேர்ந்த ஓவியர் மாரியப்பனின் படைப்புகளை ஒவ்வொரு வருடமும் தனிப்பதிவுகளாகப் பகிர்ந்து வருகிறேன். அவற்றுக்கான இணைப்புகளைப் பதிவின் இறுதியில் தந்திருக்கிறேன்.


இந்த முறை நான் சென்றது பின் மாலை வேளையில். இவரது ஓவியங்களைக் காட்சிப் படுத்தியிருந்த இடத்தை நான் அடைந்த பொழுது இருட்ட ஆரம்பித்து விட்டிருந்தது. ‘இத்தனை தாமதமாக வருகிறீர்களே. பெரிய அளவில் வரைந்த பல ஓவியங்கள் விற்று போனதுடன், எடுத்தும் சென்று விட்டார்களே’ என ஆதங்கப்பட்டார். பார்க்கும் வாய்ப்பு நழுவிப் போனதேயென ‘நீங்கள் படம் எடுத்திருப்பீர்களே. காட்டுங்களேன்’ என்றேன் ஆர்வமாக. பதிலுக்கு

Wednesday, December 30, 2015

பெங்களூர் சித்திரச் சந்தை 2015 ( Chitra Santhe )

இந்த வருடத்தின் முதல் மாதம் முதல் ஞாயிறில் நடைபெற்ற நிகழ்வைப் பற்றி வருடம் முடிய இரு தினங்கள் இருக்கும் போதாவது பகிர்ந்திட வேண்டாமா? Better late than never.. இல்லையா:)?

4 ஜனவரி 2015. சித்ரகலா பரீக்ஷத் வளாகத்திலும், இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள குமர க்ருபா சாலையிலும், அதன் பக்கவாட்டு சாலைகளிலுமாக மொத்தம் 1200 ஓவியக் கலைஞர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுமிருந்து வந்து தங்கள் படைப்புகளைக் காட்சிப் படுத்தியிருந்தார்கள். தீவிரக் கலை இரசிகர்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள், தங்களையும் தங்கள் குழந்தைகளையும் ஓவியமாகத் தீட்டிக் கொள்ள ஆர்வம் காட்டியவர்கள், சிறு வியாபாரிகள் என அந்த சாலையில் அன்றைய தினம் கால் பதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தைத் தாண்டி விட்டதெனில் நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும்.

#1

#2
சித்ரகலா பரீக்ஷத் வளாகத்தின் உள்ளே..


2012_ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சென்று விட்டேன். வருடத்திற்கு வருடம் அலைமோதும் கூட்டம் அதிகரித்தபடியேதான் உள்ளது. முந்தைய வருடப் பகிர்வுகள் “சித்திரம் பேசுதடி” எனும் பகுப்பில் (label) தேடினால் கிடைக்கும்!  இவ்வருடம் எடுத்த படங்களில் சிலவற்றை வரிசையாகப் பகிருகிறேன். விளக்கங்கள் தேவையில்லை சித்திரங்களே பேசுகையில்..

#3
விதம் விதமாக வி்நாயகர்..

Friday, December 25, 2015

கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்!

#1 Jingle Bells
ண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துகள் :)! விழாக்காலப் படங்கள் மேலும் சில..

JINGLE BELLS

#3 நட்சத்திரங்கள் மின்னும் கிறுஸ்துமஸ் மரம்

Wednesday, December 23, 2015

முன்னொரு காலத்தில்.. - கேப்ரியல் ஒகாரா


கனே, ஒரு காலத்தில்
அவர்கள் மனதாரச் சிரித்தார்கள்
கண்களால் புன்னகைத்தார்கள்
ஆனால் இப்பொழுதோ
சிரிப்பதாய்ப் பற்களை மட்டுமே காட்டுகிறார்கள்
பனிக் கட்டியைப் போல் உறைந்த அவர்களது கண்கள்
என் நிழலுக்கு அப்பால் எதையோ தேடுகின்றன.

தங்கள் இதயத்தால் அவர்கள் கைகளைக் குலுக்கிய
காலம் ஒன்று இருந்தது
அது மறைந்து விட்டது.

Monday, December 21, 2015

வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதத்தில் வருகிற வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி ஆகக் கொண்டாடப்படுகிறது.

#1 மாலே மணிவண்ணா..


திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுமென்பது நம்பிக்கை.

#2
..பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே..
-திருப்பாவை


முன்னிரவில் உறங்காது இருந்து இந்நாளில் திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர்.

#3 கோபுர தரிசனம்

Sunday, December 20, 2015

தக்கனப் பிழைத்தல் - பறவை பார்ப்போம் (5)

மாடப்புறாக்கள், அழகு மயில்கள், நீந்தும் நாரைகள், சேவல், பருந்து  எனப் பல்வேறு சமயங்களில் ஃப்ளிக்கரில் பதிந்தவை இந்த ஞாயிறின் படத் தொகுப்பாக...

#1 ‘விடிந்தது பொழுது..’

#2 “உள்ளே வரலாமா?”


#3 மீனைத் தேடி.. 
நாரைகள்

தக்கனப் பிழைத்தல் 

#4 காலை உணவு..

Tuesday, December 15, 2015

தனித்துவங்கள் - நவீன விருட்சத்தில்..

காட்டுத் தீக்கு ஒப்பாக
இரத்தச் சிகப்பு இலைகளோடு
கனன்றிருந்த விருட்சத்தின் இலைகள்
பழுப்புக்கு மாறத் தொடங்கியிருந்தன
இளவேனிற்கால முடிவில்.

ஒவ்வொன்றாய் உதிர்ந்து
ஒற்றை இலையோடு
ஓரிருநாள் காட்சியளித்த விருட்சத்தின்
கடைசி இலையும்
விடை பெற்றுப் பறக்கலாயிற்று.

Saturday, December 12, 2015

அவசர காலத்தில்..

மாமழையில் சிக்கிக் கொண்டபோது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கற்க நேர்ந்த பாடங்களென வந்த ‘வாட்ஸ் அப்’ பகிர்வுகள் இன்னும் சில. மீண்டும் இப்படியொரு நிலை  வேண்டாவே வேண்டாம் என்றாலும் சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே. அதே போல உணர்ந்து கொள்ளவும் சில உண்மைகள்..

இன்வெர்டரிலிருந்து நேரடியாக மொபைலுக்கு சார்ஜ்:

மின் தடையின் காரணமாக மொபைலில் சார்ஜ் இல்லாமல் முற்றிலுமாக நான்கு நாட்களுக்கு வெளியுலகோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு மாட்டிக் கொண்டவர்கள் பலபேர். அவர்கள் நிலைமை என்னாயிற்றோ என உறவினர் நண்பர்களின் பதட்டம் ஒரு புறம்.

Wednesday, December 9, 2015

மழைக்குப் பின்.. சுகாதாரம்.. சில குறிப்புகள்..

வெள்ள நீர் வடிந்தாலும் சென்னையின் பல பகுதிகளில் இன்னும் சாலைகள் சுத்தம் செய்யப்படாமல், குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும்,.மாசடைந்த சூழலில் மக்கள் பயந்துபடியே இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி தேவையான மருந்துகள் கிடைக்காமல், இன்னும் மின்சாரம் திரும்பாமல், BSNL, Airtel சரியாகாமல் எங்கும் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும் பலர் சிரமத்தில் இருக்கிறார்கள். இவ்வேளையில் மக்கள் தங்கள் உடல் நலத்தைக் காத்துக் கொள்ளவும், நீரினால் பரவக் கூடிய நோய்களைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட வேண்டும். சுகாதாரத்தில் காட்ட வேண்டிய அக்கறை பற்றி வாட்ஸ் அப்பில் ஆங்கிலத்தில் பகிரப் பட்ட குறிப்புகளைத் தமிழாக்கம் செய்து இங்கு அளித்திருக்கிறேன். இவற்றில் பல மருத்துவர்களைக் கலந்தாலோசித்து தரப்பட்டவை.
முதலில் மும்பையைச் சேர்ந்த  மருத்துவர் ஒருவர் பகிர்ந்ததைப் பார்க்கலாம்:

Monday, December 7, 2015

வெள்ளமும் உதவும் உள்ளங்களும்..

பெய்து முடித்த பெருமழை மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டிருக்கிறது. உறவுகள், நட்புகள் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்ட அனுபவங்களும், செய்திகள் மூலம் அறியவரும் மக்கள் படும் இன்னல்களும் கலவரத்தை அளிப்பதாக உள்ளன. அரசோ, ராணுவமோ யார் என்ன செய்கிறார்கள் எனப் பாராது நம்மால் என்ன முடியும் என ஓடி ஓடி உதவிக் கொண்டிருக்கிறார்கள் தன்னார்வலர்கள். பிற ஊர்கள், மாநிலங்களிலிருந்தும் உதவிப் பொருட்களோடு விரைந்து கொண்டிருக்கிறார்கள். நேரில் சென்றோ அல்லது நம்பகமான குழுவினர் மூலமோ பாதிப்படைந்தவர்களுக்கு சரியாகச் சென்று சேர்வதில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறார்கள். பெங்களூரிலும் அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் நண்பர் குழுக்கள் பொருட்கள், மற்றும் உடைகளை வீடு வந்து வாங்கிச் செல்கிறார்கள். உதவிக் கொண்டிருக்கும் அனைவரும், சிரமத்தில் இருப்பவர்களின் பலதரப்பட்ட தேவைகளையும் மனதில் கொண்டு கவனத்துடன் செயலாற்றி வருகிறார்கள். மனிதமும், சகோதரத்துவமும் மரித்துவிடவில்லை என்பது இப்பேரிடர் காலத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய ஆறுதல்.

உதவி வரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

வர்களில் சிலரோடு கைகோர்க்க விருப்பமா?

Wednesday, December 2, 2015

சென்னை மழை - மீட்புப் பணி - பிரார்த்தனைகள்!

#1

சென்னையிலும், தமிழ்நாட்டின் கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கில் மாட்டிக் கொண்டு மக்கள் படுகிற அவதி மனதைப் பதைக்க வைப்பதாக இருக்கிறது. இருப்பிடம், உணவு, மின்சாரம், உடல்நலம், பாதுகாப்பு என எல்லாமே கேள்விக் குறியாகி விட்டுள்ளது. இந்த நேரத்தில் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு மனித நேயத்துடன் களம் இறங்கி, உதவி வருகிற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வந்தனங்கள்.

உரிய நேரத்தில் உதவி பல இடங்களுக்கு கிடைக்கவில்லை என்ற செய்திகள் வந்தபடி இருந்தாலும் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் காட்டி வரும் அர்ப்பணிப்பு நெகிழ வைப்பதாகக் குறிப்பிட்டார் பின்வரும் படங்களை தன் மொபைலில் எடுத்து அனுப்பியிருந்த நண்பர்.

#2

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin