வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஜினியா - இரட்டை வர்ணங்களில்.. - ( Bangalore Lalbagh Flower Show )

ஆகஸ்ட் லால்பாக் கண்காட்சியில் எடுத்த படங்களில் மலர் அலங்காரங்களையும், சிட்டுக் குருவிகள் போல் அங்குமிங்கும் தத்தித் திரிந்த மழலைகளையும் தொகுப்பாகப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  மேலும் எடுத்த வகை வகையான மலர்களை... ஃப்ளிக்கரில் வரிசையாகப் பகிர்ந்தவற்றை.. சில தொகுப்புகளாக இங்கு பதிந்திட எண்ணியுள்ளேன்.

இன்று ஜினியா. அதுவும் Bicolor  என அறியப்படும் இரட்டை வர்ண ஜினியாக்கள். இதழ்களில் ஏதேனும் இரண்டு வர்ணங்களைப் பிரதானமாகக் கொண்டவை.

விதைகள் பாகத்தில் தெரியும் வர்ணங்களும், சிலவற்றின் இதழ்களில் மூன்றாவதாக ஊடுருவப் பார்க்கும் வர்ணமும் கணக்கில் வரா என்பதை சொல்லிக் கொள்கிறேன்:)!

சில வகைகள் சட்டெனப் பார்வையை ஓட விடுகையில் ஒரே மாதிரியானவையோ எனத் தோன்ற வைத்தாலும் உற்றுப் பார்க்கையில் தெரிந்திடும் இறைவனின் தூரிகை எடுத்துக் கொண்ட கவனம்.

வாருங்கள் இரசிக்கலாம் அழகின் கொண்டாட்டத்தை.. அழுத்தமான வண்ணங்களிலும் மென்மையான நிறங்களிலும்...

#1 வெள்ளை - மஞ்சள்


#2 மஞ்சள் - பழுப்பு

வியாழன், 26 டிசம்பர், 2013

நாளினை நனைத்த சொற்கள் - இந்த வாரக் கல்கியில்..

இந்த வாரக் கல்கியியின்..  27 ஆம் பக்கம், கவிதை கஃபேயில்..
நாளினை நனைத்த சொற்கள்

‘இது மேலத்தெருதானே?
குத்தாலிங்கம் வாத்தியார் வீடு
எங்கிருக்கு?’

வடக்குத்தெருவில் நின்று
நடுங்கும் குரலில்
போவோர் வருவோரைக்
கேட்டுக் கொண்டிருந்த
வயதானவரின்
கைப்பிடித்து அழைத்துச் சென்று

வெள்ளி, 20 டிசம்பர், 2013

மறு வாசல்


1. ஏதேனும் ஒரு புள்ளியத் தொடும் போது முதலில் எடுக்க வேண்டிய தீர்மானம் அதிக நேரம் அங்கே தங்கக் கூடாதென்பதே.

2. பலசாலியாய் இருக்கத் தேவையில்லை. பலசாலியாய் உணர்ந்தால் போதும்.

3. ஆரவாரம் வலுவானது அமைதி பலவீனமானது எனத்  தவறாகக் கணித்து விட வேண்டாம்.

புதன், 18 டிசம்பர், 2013

அம்மாவும் நானும் அம்மாவும் - மாயா ஏஞ்சலோ (3)


உண்மை
நான் உன்னில் உருவானேன்
இதுவும் உண்மை
நீ எனக்காக உருவாக்கப் பட்டாய்.
உன் குரலைச் சொந்தமாக்கிக் கொண்டேன்

செவ்வாய், 17 டிசம்பர், 2013

பெண் பணி - மாயா ஏஞ்சலோ கவிதை (2)

எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள் பராமரிக்க
துணிகள் உள்ளன துவைக்க
தரை உள்ளது துடைக்க
கடைக்குச் செல்ல வேண்டும் மளிகை வாங்க
அடுத்து உள்ளது கோழிக்குஞ்சு பொறிக்க
குழந்தை காத்திருக்கிறது குளிக்க வைக்க
துணை இருக்கிறது உணவளிக்க
தோட்டத்துக்கும் நான் தேவை, களை பிடுங்க

சனி, 14 டிசம்பர், 2013

பூக்குட்டி - இந்த வார ஆனந்த விகடன் சொல்வனத்தில்..


இந்த வார ஆனந்த விகடன் (பக்கம் 24) சொல்வனத்தில் வெளியாகியிருக்கும் ‘பூக்குட்டி’ கவிதையை எனக்களித்தப் பூக்குட்டி:)!

ன்னல்கள் மட்டுமே கொண்ட
வீட்டைக் கட்டி முடித்த
இரண்டே நிமிடங்களில்
திமுதிமுவென வளர்ந்து நின்றன
வாசலில் நான்கு தென்னைகள்.

திங்கள், 9 டிசம்பர், 2013

பொகே அல்லது பொகா (Bokeh) - ஒரு அறிமுகம்; மூடிய கதவுகள் - டிசம்பர் PiT போட்டி

 #1
பின்னணியின் தொலைவு கூடக் கூட பொகே அழகும் கூடும்.
ந்த மாத PiT போட்டி இரண்டு தலைப்புகளில். DSLR பயன்படுத்துகிறவர்களுக்காக சவாலான தலைப்பு ஒன்றும், பொதுத் தலைப்பாக இன்னொன்றும்.

விரிவான விவரங்களை போட்டி அறிவிப்பு பதிவில் காணலாம்.

கிறுஸ்துமஸைக்  கொண்டாட, புதுவருடத்தை வரவேற்க நகரங்கள் ஒளிக்கோலம் பூணுகிற இந்நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முதல் தலைப்பு.

போட்டி 1: பொகே

பொகே அல்லது பொகா குறித்து அறியாதவர்களுக்காக இன்று PiT-ல் நான் அளித்திருக்கும் விளக்கப் பதிவு http://photography-in-tamil.blogspot.com/2013/12/bokeh.html உங்களுக்கும் பயனாகக் கூடுமென இங்கேயும் பகிர்ந்துள்ளேன். ஒளிப்படக்கலையில் ‘பொகே’ அல்லது ‘பொகா’ என்றால் என்னவெனப் பார்ப்போம்.

Bokeh எனும் சொல் ஜப்பானிய மொழியில் ‘மங்கிய’ (blurred) எனும் அர்த்தம் கொண்டதாகும். ஆங்கிலத்துக்கு வந்த விட்ட இச்சொல் பொகே, பொகா, போக்கி எனப் பலவிதமான உச்சரிப்புகளில் பயன்படுத்தப் படுகிறது. நாம் பொகே எனப் பார்ப்போம்:).

வியாழன், 5 டிசம்பர், 2013

குமரியில்.. FB புகைப்படப் பிரியனின் இரண்டாவது ஒளிப்படக்கலை கருத்துப்பட்டறை

ந்தக் கலையானாலும் சரி, கற்றக் கொண்டே செல்வதில்தான் நம் திறன் மெருகேருகிறது. ‘கற்றலுக்கு முடிவே இல்லை. வாருங்கள் பகிர்ந்து கொள்வோம் அவரவர் அறிந்ததை’ என அழைக்கிறது குமரி முனைக்கு உலகத் தமிழ் புகைப்படப் பிரியர்களை, புகைப்படப் பிரியனின் "இரண்டாவது ஒளிப்படக்கலை கருத்துப் பட்டறை."!


இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒளிப்படக் கலைஞர் மெர்வின் ஆன்டோவினால் ஆரம்பிக்கப்பட்டது புகைப்படப் பிரியன் குழுமம். அது குறித்த அறிமுகமாக எனது அப்போதைய பகிர்வு இங்கே. மெர்வினின் வியக்க வைக்கும் கலைத் திறன் குறித்த எனது ‘தினகரன் வசந்தம்’ கட்டுரை இங்கே. அதிலே முதல் கருத்துப் பட்டறையில் அவர் நிகழ்த்திக் காட்டிய ‘உன்னைப் போல் ஒருவன்’ பற்றிய குறிப்பும் உள்ளது.

அழைப்பின் பேரில் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஒளிப்பட ஆர்வலர்களுக்கு தன் அனுபவத்திலிருந்து ஆலோசனைகள் வழங்கியும், அறிந்த பல வித்தைகளைக் கற்றுத் தந்தும் வருகிறார் மெர்வின் ஆன்டோ. சமீபத்தில் தூத்துக்குடியிலும், பாளையங்கோட்டையிலும் இவர் வரவால் பயன்பெற்றிருக்கின்றனர் பல தொழில் சார்ந்த புகைப்படக் கலைஞர்கள்.

ஒவ்வொரு நாளும் FB ‘புகைப்படப் பிரியன்’ குழுமத்தில் ஆர்வத்துடன் பலர் இணைந்தபடி இருக்க 7300-க்கும் அதிகமான உறுப்பினர்களோடு எட்டி நிற்கும் அதன் உறுப்பினர்களுக்காக இதோ அவரது முயற்சியில் இரண்டாவது கருத்துப் பட்டறை, 2014 ஜனவரி 25, 26 தேதிகளில்..

திங்கள், 2 டிசம்பர், 2013

மீன்களின் கண்ணீர் - மட்சுவோ பாஷோ ஜப்பானிய துளிப்பாக்கள் ( பத்து )



1.
கழுவ விரும்புகிறேன்
இவ்வுலகின் புழுதியை
பனியின் துளிகளால்.

2.
நிலவற்ற இரவு
பலமான காற்று தழுவுகிறது
ஆதிகாலத்தைய தேவதருவை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin