செவ்வாய், 23 செப்டம்பர், 2008

ஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..

அன்று சாமான்யனுக்கு எகிறும் விலைவாசியில் கார் வாங்குவதென்பது நிறைவேறாத ஆசை போலிருந்தது.
இன்றோ விலைவாசி கட்டுக்குள் வராவிடினும் வங்கிகள் கடனை வாரி வழங்கிட வாசலுக்கு வண்டி வருவது கடினமாயில்லை.

ஆனால்....
ஆனால் என்ன?

அன்றைக்கு ஒரு இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இந்த நையாண்டிக் கவிதையின் கடைசி நான்கு வரிகள் இன்றைக்கும் பொருந்தி வந்தால் அதற்கு நான் பொறுப்பல்லதானே!


[1980-ல் எழுதி '84-ல் நான் இளங்கலை இரண்டாம் ஆண்டிலிருந்த போது திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது.]


இப்போது பாடலாமா:
"ஆசை ஆசை இப்பொழுது பேராசை... பெட்ரோல் போட்டு வண்டியில் போவதுதான்..."




[இங்கு வலையேற்றிய பின் செப்டம்பர் 25, 2008 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.]





வியாழன், 11 செப்டம்பர், 2008

எம்மதமும் எமக்கு...[PiT- இறுதிச் சுற்று-'கட்டமைப்பு'க்கு]

தொழுவோம்
நீயில்லாத இடமேயில்லை...

*** *** ***

துதிப்போம்

தேவனே என்னைப் பாருங்கள்...*** *** ***
தரிசிப்போம்

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்...

*** *** ***

தியானிப்போம்

புத்தம் சரணம் கச்சாமி...
*** *** ***
பொன்னான போதனைகளைத் தந்தவருக்கு பொன்னால் ஆன சிலை


ஞான ஒளி போதித்தது அஹிம்சாவழி
அதை
ஏனோ மறந்துசிலர் போவது வேறுவழி

*** *** ***

தியானத்தில்..

மெய்ப் பொருள் தேடி..
*** *** ***



குமரிக் கடலினிலே..

விவேகத்துக்கு வழி காட்டிய விவேகானந்தா வீற்றிருந்த பாறை
தியானத்தின் மேன்மையைச் சொல்லிட
எழுந்து நிற்கும் மணி மண்டபம்

*** *** ***

1330 ஈரடிகளைத் தந்திட்ட ஐயனுக்கு 133 அடி உயரத்தில் மரியாதை

கட்டுக் கோப்பான
வாழ்க்கைக்கு
வழி சொல்லும்
ஈரடிக் குறள்தனைப்
பேணி நாம்
போற்றி வர
அதைத் தந்திட்ட
ஐயனைப்
போற்றிப் பேணிடச்
சுற்றி வரக்
கட்டமைப்பு!
*** *** ***



சுற்றிப் படிக்கட்டு நீயும் வெற்றிக் கொடி கட்டு
குட்டையில் முடிந்து விடுவதில்லை வாழ்க்கை-
வெளி உலகில் எங்கெங்கும்
கொட்டிக் கிடக்கின்ற வாய்ப்புக்களைத் தேடி
எட்டியெட்டி முயற்சியுடன் ஏறிடவே
சுற்றி வரப் படிக்கட்டு- அதை
நன்கு புரிந்து நீயும்
வெற்றிக் கொடி கட்டு!

*** *** ***



ஓம்காரேஷ்வரா

ஓம் எனும் ஓங்கார ஒலி எழும்
இக்கோவிலின் சிறப்பென்ன அறிவீரா?
நாம் என்றும் ஒற்றுமையாய்
வாழ்ந்திட வேண்டுமென
வலியுறுத்தும் விதமாக-
இரு மதக் கட்டிடக் கலையும்
கலந்து இணைந்து எழுந்து நின்று-
இப்பதிவின் தலைப்புக்கும்
பொருத்தமாக... புறப்படுகிறது
போட்டிக்கு [கடைசி தின
நீட்டிப்பை அறிந்ததும்]!
*** *** ***


[தமிழ்மணம் அறிவித்த ‘விருதுகள் 2008’-ல் 'காட்சிப் படைப்புகள்’ பிரிவில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது இப்பதிவு.]

திங்கள், 1 செப்டம்பர், 2008

வேண்டுவது தளமா இல்லை சோர்வைத் தரும் களமா?

உங்கள் குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வர ஒரு தளம்- ப்ளாட்ஃபார்ம் தேவைதான். ஆனால் அதுவே போட்டி என்ற பெயரில் (போரில்)தோல்வியால் அவர்கள் துவண்டு நிற்கும் களமாக மாறிப் போக வேண்டுமா?

சமீபத்தில் கல்கத்தாவில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பெண் அதன் நடுவர்களின் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள இயலாது அங்கேயே கண்ணீர் சிந்தி வருத்தத்துடன் வீடு திரும்பினாள். அதன் பிறகு அவள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகப் பெற்றோரால் குற்றம் சாட்டப் பட்டு, பத்திரிகைகளில் பரபரப்பாக்கப் பட்டு பெங்களூர் நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆனார். பின்னர் ஏற்கனவே அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்ததால்தான் இத்தகைய மன உளைச்சல் ஏற்பட்டதென்றும் நிகழ்ச்சி நடுவர்கள் மேல் எந்தத் தவறுமில்லை எனவும் மருத்துவச் சான்றிதழ்கள் மூலம் நிரூபணமாகியதும் பலரும் அறிந்திருக்கக்கூடும். சேனல்,நிகழ்ச்சி, பெண்ணின் பெயர் எதுவும் இங்கு நமக்குத் தேவையில்லாதது.

பொதுவாகப் பார்த்தால் பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் தோல்விகளைக் குழந்தைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத வண்ணம் ஒரு ஸ்போர்டிவ் ஸ்ப்ரிட், 'பங்களிப்பே சிறப்பு' எனும் உணர்வு இருக்குமாறு பார்த்துக் கொள்வதில் வெகு கவனமாக இருக்கிறார்கள். நமது காலத்தை விட இக்காலத்தில் அதைப் பல பள்ளிகள் ஒரு கொள்கையாகவே கடைப் பிடிக்கிறார்கள். ஐந்தாவது வகுப்பு வரை படிப்புக்கு கூட ரேங்கிங் சிஸ்டம் இருப்பதில்லை. அதுபோல ஒரு ஆண்டு விழா என்றால் குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து
அவரவருக்கு ஏற்ற வேடங்களாகக் கொடுத்து "அத்தனை" பேரையும் மேடையேற்றி அழகு பார்க்கிறார்கள். இந்த மாதிரியான தளங்களையும் தாண்டி தனித் திறமை வாய்ந்த குழந்தைகளின் பெற்றோர் மேலும் அவர்களை ஊக்குவிப்பதற்காகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளை நாடுவதை நான் குற்றமாகச் சொல்லவில்லை. ஆனால் யாரோ சம்பாதிப்பதற்காக நமது குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பலியாக்கி விடக் கூடாது
என்று கேட்டுக் கொள்கிறேன்.

சில நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் தவறுகளை மென்மையாகச் சொல்கிறார்கள். சிலவற்றில் குழந்தைகள் சரிவரச் செய்யாமல் தடுமாறுகையில் அவர்களையும் அவர்தம் பெற்றோர்களையும் மாறி மாறிக் காட்டி டென்ஷனை அதிகரிப்பார்கள். இது இரு சாராருக்கும் மன அழுத்தத்தைத் தருகிறது. முடிவு நெருங்க நெருங்க அதிகரிக்கவும் செய்கிறது. ஒரு பிரபல சேனலின் ஜூனியர் பாட்டுப் போட்டி முதல் கட்டத் தேர்வுச் சுற்றிலே தேர்வாகாத குழந்தைகள் தேம்பி அழுதபடி கீழிறங்க இந்தப் பக்கம் ஏங்கி அழுதபடி பெற்றோர். அவ்வளவு ஏன்? அதே சேனலில் பெரியவர்களுக்கான ஜோடி ஆட்டபாட்ட நிகழ்ச்சியில் கூட தன் மகள் தோற்றதை தாங்கிக் கொள்ள முடியாது ஒரு தாயார் அரங்கினில் நடந்து கொண்ட விதம் பலரும் அறிந்திருக்கக் கூடும்.

தோல்வியைத் தாங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் எந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். தோற்று நின்றால் அதுவே "வெற்றிக்கு முதல் படி"
எனச் சொல்லித் தேற்றி அரவணைக்கும் முதிர்ச்சி முதலில் உங்களுக்கு இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள் 'என்ன இப்படிச் சொதப்பிட்டே' என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விடாமல். இந்தப் பக்குவமும் முதிர்ச்சியும் மிஸ்ஸிங் என்றால் இந்த நிகழ்ச்சிகளின் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள். ஒரு சென்சேஷனை உண்டு பண்ணுமாறு நிர்ப்பந்திக்கும் விளம்பரதாரர்களுக்காகவும் அவர்கள் மூலம் கிடைக்கிற வருமானத்துக்காகவும் சேனல்கள் செய்யும் சர்க்கஸில் நாமோ நம் குழந்தைகளோ கோமாளிகளாகி விடக் கூடாது.

'என்ன இப்படிச் சொதப்பிட்டே' என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் அளவுக்கு யாரும் இருப்பதில்லை என சிலர் சொல்லக் கூடும். விதி விலக்காய் இருக்கும் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படவே இப்பதிவு. மற்றொரு பிரபல சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பமாக போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சுற்று பெற்றோரில் ஒருவர் க்ளூ கொடுக்க பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பதிலளிப்பார்கள். சில குழந்தைகள் தடுமாறி சரியான பதிலையும் கூடவே தங்கக் காசுகளையும் தவற விட்டு விட்டு குடும்பத்திடம் திரும்பி வருகையில் கடுகடு சிடுசிடுவென அவர்களை எதிர்கொள்ளும் தாய்மாரைக் காமிராக் கண்கள் கவரத் தவறியதில்லை. அவர்களுக்கு அவர்தம் வியாபாரம் முக்கியம் என்றால்
நமக்கு நமது குழந்தைகள் முக்கியம்.

*** *** ***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin