மைசூர் அரண்மனையைப் பார்த்து ரசிப்பவர்கள் பெரும்பாலும் பார்க்கத் தவறிவிடுவது மேற்கே சற்று தொலைவிலேயே அமைந்த ஜெகன்மோகன் அரண்மனையை. இந்த அரண்மனை மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்டது.
இந்து பாரம்பரியப் பாணியில் மூன்று தளங்களோடு கட்டப்பட்டுள்ளது. 1900_ஆம் ஆண்டில் வெளிப்புறத்தில்.. முகப்பில்.. மூன்று நுழைவாயில்களுடனான (படத்தில் காணலாம்) பெரிய கூடம் புதிதாக இணைக்கப்பட்டது. அரண்மனையின் உட்புறம் சுவர்ச் சித்திரங்களோடு திகழ்கிறது. மைசூர் ஓவியப் பள்ளியின் பாணியில் தசரா காட்சிகள், யானை சவாரி போன்றவை மூன்று நீண்ட சுவர்களில் வரையப்பட்டுள்ளன. தொடக்கக் கால தசராக் கொண்டாட்டத்தைக் கண் முன் கொண்டு வரும் இந்த ஓவியங்கள் காய்கனிகளிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகளைச் சாயமாகப் பயன்படுத்தி வரையப்பட்டிருக்கின்றன. மரத்தில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட தசாவதாரக் காட்சிகளையும் இங்கே பார்க்கலாம்.
உடையார் குடும்பத்தினர் அம்பாவிலாஸ் அரண்மனை கட்டப்படும் வரை இங்குதான் இருந்தனர். 1912-ல் அம்பா விலாஸ் அரண்மனை முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படும் வரை ஆண்டுவிழா மற்றும் தசரா விழாக்கள் இங்குதான் கொண்டாடப்பட்டிருக்கின்றன. கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட தூண்களையும், சிற்பங்களையும் கொண்ட இந்த அரண்மனை தற்போது அருங்காட்சியமாகவும் ஓவியக் கலைக் கூடமாகவும் பராமரிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்களோடு உடையார் பேரரசர் ஆட்சி காலத்தின் 25 வாரிகளின் வரலாறும் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் என்னை மிகக் கவர்ந்தவை ஓவியர் ராஜா ரவிவர்மா வரைந்த அசல் ஓவியங்கள் பதினாறு.