ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

மாம்பழமாம் மாம்பழம் - டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (2)

இன்று 29 ஏப்ரல் 2018,  டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழின் ஞாயிறு பதிப்பில்..
#


‘Mango Mania’ எனும் தலைப்பின் கீழ் தேர்வான ஆறுபடங்களுள் ஒன்றாக வெளியாகியுள்ளது, எனது படம்:


That Sweet Indulgence

ஒரு மாம்பழ சீசனில், பல வித கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களும் மாம்பழம் குறித்த தகவல்களும் அடங்கிய இப்பதிவு: மாம்பழம் சாப்பிடலாம் வாங்க..  http://tamilamudam.blogspot.com/2016/03/blog-post_27.html  உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்:).

மற்றும் தேர்வான ஐந்து படங்கள் இங்கே:

மாசற்ற சோதி.. - குதம்பைச் சித்தர் பாடல்களுடன்.. படங்கள் 10

#1
விண்ணொளி யாக விளங்கும் பிரமமே
கண்ணொளி ஆகுமடி குதம்பாய்
கண்ணொளி ஆகுமடி.


#2
எங்கும் நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி.

#3
எல்லாப் பொருளுக்கும் மேலான என்தேவைச்
சொல்லாமற் சொல்வாயடி குதம்பாய்
சொல்லாமற் சொல்வாயடி.

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

தங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - ஸ்ரீலங்கா (2)

#1
முனிஸிபல் கவுன்ஸில் டவுண் ஹால்

நாட்டின் பழமை வாய்ந்த பரந்து விரிந்த பூங்காக்களில் முக்கியமான ஒன்று விகரமகாதேவி பூங்கா. கொழும்பு மாநகரில், தேசிய அருங்காட்சியகத்தின் அருகில் இருக்கிறது. ஒரு காலத்தில் விக்டோரியா பூங்கா என அறியப்பட்ட இடம். காலனி ஆதிக்கத்தின் போது எழுப்பப்பட்ட டவுண் ஹால் கட்டிடம் இந்தப் பூங்காவின் வட கிழக்குப் பகுதியில் சாலை தாண்டி நேர் எதிரே உள்ளது.  பூங்காவின் முக்கிய அம்சமாக இருப்பது வரிசையான நீருற்றுகளின் முடிவில், கவுன்ஸில் டவுண் ஹாலைப் பார்த்து அமர்ந்திருக்கும் பெரிய புத்தர் சிலை.

#2
 விகரமகா தேவி பூங்கா
பிரிட்டிஷ் ஆட்சியின் போது இப்பூங்காவுக்கான நிலம் சார்லஸ் ஹென்ரி என்பவரால் நகரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே பிரிட்டிஷ் மகராணியின் பெயர் முதலில் சூட்டப்பட்டிருந்தது. இரண்டாவது உலகப் போரின் போது பிரிட்டிஷ் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பூங்கா பின்னர் 1951 ஆம் ஆண்டில் நகரத்திற்காக மீட்கப்பட்டு பொதுமக்களுக்காகத் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் துட்டகாமினி எனும் சிங்கள அரசரின் அன்னையும், திசா மன்னரின் மகளுமான விகரமகாதேவியின் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

#3
பரந்த பூங்காவின் வரைபடமும்
1951 ஆம் ஆண்டு பொதுமக்களுக்குத்
திறந்து விடப்பட்டத் தகவலும்..

#4
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ‘விக்டோரியா பூங்கா’

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

உயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா?


‘மறுபக்கத்திற்கும் ஒரு மறுபக்கம் உண்டு’

#2
“எல்லோரையும் போலவே நீங்கள் சிந்திப்பீர்கள் ஆயின், 
நீங்கள் சிந்திக்கவே இல்லை என்று பொருள்”

#3
“நமக்குள் இருக்கும் திறமைகளைக் கண்டறியத் தேவையானது 
விடாத முயற்சியே அன்றி அறிவோ ஆற்றலோ அன்று.”
_ Winston Churchill


#4
“ஒருவரால் ஆழமாக நேசிக்கப்படுவது வலிமையைக் கொடுக்கிறதெனில், 
ஒருவரை ஆழமாக நேசிப்பது தைரியத்தைக் கொடுக்கும்.” 
_ Lao Tzu

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

தூறல்: 33 - தினமலர் ‘பட்டம்’ (12-15), வல்லமை, ஆல்பம்


தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில் (பாகங்கள்: 12 - 15) :
பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தினமலர் பட்டத்தில் எனது படங்களுடன் வெளியான தகவல் பக்கங்கள்..

# 28 பிப்ரவரி 2018


#19 பிப்ரவரி 2018



#14 பிப்ரவரி 2018

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin