தமிழாசிரியரும், மாதமிருமுறை வெளியாகும் “புன்னகை - கேட்பினும் பெரிது
கேள்!” கவிதை இதழின் ஆசிரியருமாகிய கவிஞர். க. அம்சப்ரியா அவர்கள் எனது
கவிதைத் தொகுப்புக்கு அளித்திருக்கும் மதிப்புரையை இங்கு பகிர்ந்து
கொள்கிறேன்:
இலைகளுக்குள் ஒளிந்திருக்கும் கவித்துவம்
இதற்கு
முன்பும் இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. இனியும் உதிரும்... நீங்களும்
நானும் இந்தத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கையில் ஆயிரமாயிரம் இலைகள்
உதிர்ந்தபடியிருக்கும். ஒரு மரம் துளிர்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு
செடி தனக்கான கடைசி இலையையும் உதிர்த்துவிட்டு வெறுமனே தண்டோடு
நின்றிருக்கத்தான் செய்யும். மறுபடியும் மழை வரும்... தான் செழித்து
வளர்வதற்கான வாய்ப்பும் அமையுமென்று காத்திருக்கும் செடிகளாக ஒவ்வொரு
இலையாக உதிர்த்த செடி மனிதர்கள் காத்திருக்கிறார்கள்.