#1
|
ஓம் ஸ்ரீ சாய் ராம் |
“
உங்களின் படத்திற்கு முதல் நீதிபதி நீங்கள். இது தான் என்று இல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள் என யாராகவும் இருக்கலாம். இயற்கை காட்சிகளாக இருக்கலாம். எந்த வகையான படமாகவும் இருக்கலாம். அவற்றில் இருந்து மிகச் சிறப்பாக நீங்கள் கருதும் படங்கள் பத்தைத் தேர்ந்தெடுத்து அதில் இருந்து அதி சிறப்பு என்று உங்களுக்குப் பிடித்த ஒன்றை நீங்கள் போட்டிக்கு அனுப்புங்கள்.” என்று சொல்லி விட்டார் இந்த மாத போட்டிக்கான நீதிபதி.
#2
|
நீங்களே உங்களது நீதிபதி.. |
PiT தளத்தில் அறிவிப்புப் பதிவு
இங்கே.
ஆக முதல் சுற்றுப் படங்களாய் உட்கார்ந்து ஒரு பத்தைத் தேர்ந்தெடுங்கள். அதிலிருந்து ஒரு அதிசிறப்பை அனுப்பி வையுங்கள்.
2000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கும்
என் ஃப்ளிக்கர் பக்கத்திலிருந்து எதை என்று மாதிரிக்காகத் தேர்ந்தெடுப்பது? அதுவுமில்லாமல் காக்கைக்கும் தன் குஞ்சு.. போல என் கேமரா பிடித்த எல்லாமே எனக்குப் பொன் குஞ்சாகதான் தெரிகிறது:). ஆகையாலே சமீபத்தில் பதிந்தவற்றிலிருந்து.. முத்துச்சரத்தில் பதியாததாகத் தெரிவு செய்து பத்து படங்கள் பார்வைக்கு இங்கே....
#3
|
ஓம் க்ஷிப ஸ்வாஹா.. |
#4