மெட்ரோ, சாலை விரிவாக்கம், அதற்காக இழந்த மரங்கள், எங்கெங்கும் முளைத்திருக்கும் ஷாப்பிங் மால்கள், எந்தப் பக்கம் திரும்பினாலும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஐடி வளாகங்கள்.. இவைதாம் தோட்ட நகரம் என அறியப்பட்ட பெங்களூரின் இன்றைய அடையாளங்கள். காலத்திற்கு அவசியமான மாற்றங்கள் என என்னதான் நியாயப் படுத்தினாலும் பெங்களூர் தன் பழைய அழகை எப்போதோ தொலைத்து விட்டிருப்பதை பல காலமாக இங்கே குடியிருப்பவர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்வார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெங்களூரை அவ்வப்போது நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை ரொம்பப் பழகிய இடங்களுக்குச் சென்று வருகையில்.
நேற்று முன் தினம், ஒரு உணவகத்தில் அன்றைய பெங்களூரை நினைவு படுத்தும் விதமான ஓவியங்களைக் கண்டதும் மகிழ்ச்சி தாங்கவில்லை. அவை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பெங்களூரைச் சித்தரிப்பவையாக இருந்தன. நின்று நின்று ஒவ்வொன்றையும் ரசித்த பின்னர் படம் எடுத்தேன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள. பிரபல கார்ட்டூனிஸ்ட் பால் ஃபெர்னான்டஸ் வரைந்த ஓவியங்கள் இவை. பின்னர் இணையத்தில் தேடியபோது அவரது படைப்புகள் மேலும் பல பார்க்கக் கிடைத்தன எனினும் நான் படமாக்கியவற்றை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன். என் கணிப்பின் படியே இவை 1960-70_களின் பெங்களூர் என்பதும் தெரிய வந்தது. ஓவியங்களுக்கு நேரெதிரே இருந்து எடுக்க முடியாமல் இருக்கைகள் தடுக்க, நிற்க முடிந்த இடங்களில் மின் விளக்குகளின் பிரதிபலிப்பு விழ, சமாளித்து எடுத்த கோணங்களில்.. படங்கள்:
#1
எம்.ஜி. ரோட் என அறியப்படும் மகாத்மா காந்தி சாலையில், ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை
எத்தனையோ முறை சென்றிருக்கிறேன். அருகே இருந்த பல பிரபல கடைகள், திரையரங்குகள் காணாமல் போயிருக்க இன்றைக்கும் தாக்குப் பிடித்து அதே கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
#2
எம்.ஜி ரோடில் காஃபி ஹவுஸ்
#1
எம்.ஜி. ரோட் என அறியப்படும் மகாத்மா காந்தி சாலையில், ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை
#2
எம்.ஜி ரோடில் காஃபி ஹவுஸ்