ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

புதிய அழகு

 1.  

இப்போதும் மிகத் தாமதமென ஏதுமில்லை, 
உங்கள் கனவுகள் மீது கவனத்தைச் செலுத்த..!"


2. 
“நாம் நமக்கு வெளியில் தேடும் அதிசயங்களை நமக்குள்ளேயேதான் சுமந்து கொண்டிருக்கிறோம்.”
_ Rumi

3.
“வளர்ந்து உண்மையில் நீங்கள் யாராக 
இப்போது இருக்கிறீர்களோ 
அதற்குத் தைரியம் துணை நின்றிருக்கிறது.”
_ E.E. Cummings


4.
துணிவே 
புதிய அழகு.

5.
“எளிமையாய் அதோ  ரோஜா, 
தன் இருப்பின் ஒவ்வொரு கணமும் முழுநிறைவுடன்!”
_ Ralph Waldo Emerson6.
“மலர்ந்திடு அழகாக அபாயமாக சத்தமாக, 
மலர்ந்திடு மென்மையாக 
உனக்கு எப்படி வேண்டுமோ அவ்வாறாக 
ஆனால் தவறாது மலர்ந்திடு!   
_ Rupi Kaur

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 145

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

8 கருத்துகள்:

 1. உங்கள் வீட்டுத் தோட்ட மலர்கள் அழகு.
  அவைகள் சொன்ன வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
  துணிவே புதிய அழகு அருமை. அழகை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் தோட்டப் பூக்கள் அழகு! நம்ம அம்மா நம்மை மிக அழகாக எடுத்துப் போடுவாங்கன்னே அழகா போஸ் கொடுக்கும் போல பூக்களும்!

  ஒவ்வொன்றின் லைட்டிங்கும், கோணமும் மிக அழகு. ரோஜா வாவ் போட வைக்கிறது. படத்திற்கான வரிகள் அதன் மொழிபெயர்ப்பு அழகா செய்திருக்கீங்க.

  அனைத்தும் ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 3. படங்களும் அழகு.  வரிகளும் அழகு.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin