பழமையும் புதுமையும் கலந்த பெருநகரம் ஹைதராபாத். ஒருபக்கம் புராதான முக்கியத்துவம் கொண்ட இடங்கள், மாளிகைகள், கலை நயம் மிக்கக் கட்டிடங்கள். இன்னொரு பக்கம் அசுர வளர்ச்சியில் ஐடி துறை, அதன் மிகப் பிரமாண்டமான அலுவலகக் கட்டிடங்கள். இந்நகரத்திற்கு பிப்ரவரி மாதத்தில் ஒரு வேலை நிமித்தமாக இரண்டரை நாட்கள் சென்றிருந்தோம். கிடைத்த நேரத்தில் சுற்றிப் பார்த்த இடங்கள் தொடராக வரும். சில பிரசித்தி பெற்ற முக்கிய இடங்கள் இந்தப் பதிவில்..!
ஹைதராபாத் தலைமைச் செயலகம் - சட்டமன்றக் கட்டிடம்:
#1
1913_ஆம் ஆண்டு பாரசீக மற்றும் ராஜஸ்தானி பாணியில் கட்டப்பட்டக் கட்டிடம். முழுவதும் வெள்ளை நிறத்தில், குவிமாடங்கள் மற்றும் அழகிய வளைவுகளுடன் வடிவமைக்கப்பட்டது. ஆறாவது நிஜாமான, மிர் மஹபூப் அலிகானின் நாற்பதாவது பிறந்தநாளை நினைவு கூர்ந்திடும் வகையில் எழுப்பப்பட்ட கட்டிடம். தற்போது தெலுங்கானா சட்டமன்றம் கூடும் இடமாக உள்ளது.
#2
ஹூஸைன் சாகர் ஏரியைச் சுற்றி அமைந்த லும்பினி தோட்டத்திற்கு எதிரில் உள்ள பொதுத் தோட்டங்களுக்கு மத்தியில் உள்ளது.
#3
பிர்லா மந்திர் குன்றின் மேலிருந்து பார்க்கும் போது தோட்டங்கள் நீருற்றுகளுக்கு மத்தியில் இரவு மின் விளக்குகளில் ஒளியில் கம்பீரமாகக் காட்சி அளித்தது.
ஹுஸைன் சாகர் ஏரி: