ஞாயிறு, 31 மார்ச், 2019

வெள்ளி, 29 மார்ச், 2019

உப்பங்கழி.. இயற்கையிடம் சரணாகதி.. - பேகல், கேரளம் (2)

ப்பங்கழி (Backwaters) என்றால் என்னவென்பதை 2010 கேரளப் பயணப் பகிர்வான ‘ஏரிக்கரைப் பூங்காற்றே’ பதிவில் சொல்லியிருக்கிறேன். அதாவது, மழைக்காலத்தில் மலையிலிருந்து பாய்ந்துவரும் நதிகளின் நீர் கடலில் கலக்கும்போது அந்த நல்லநீர் சுற்றியுள்ள மாவட்டங்களில் விவசாயத்துக்கு மிக உகந்ததாய் பயன் படுகிறது. மழையற்ற கோடையில் தாழ்வான மட்டத்தில் இருக்கும் காரணத்தால் கடலின் உப்புநீர் நதி வந்த பாதைகளில் புகுகின்றது. இதைத்தான் உப்பங்கழி (பேக் வாட்டர்ஸ்) என்கிறார்கள். அந்த சமயம் மட்டும் விவசாயத்துக்கு ஏற்றதாக இருப்பதில்லை.

நாங்கள் தங்கியிருந்த தாஜ் விவாண்டா விடுதியின் பின்பக்கமே அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது உப்பங்கழி. கரையோர மரங்களோடு அக்காட்சிகள் சிலவற்றை இங்கே தொகுக்கிறேன்:

#1

#2

திங்கள், 25 மார்ச், 2019

பேகல் கோட்டை - கேரளம் (1)

கேரளத்தின் காசரகோடு மாவட்டத்தில், . மங்களூரிலிருந்து 65கிமீ தூரத்தில், பேகல் எனும் இடத்தில் இருக்கிறது 40 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் ‘பேகல்’ கோட்டை.

#1

பம்பாய் திரைப்படத்தின் “உயிரே.. உயிரே..” பாடல் காட்சி படமாக்கப் பட்ட இடம் என்றால் உங்கள் எல்லோருக்கும் சட்டெனப் புரிந்து போகும். பலர் இந்தப் பாடல் கோவாவில் எடுக்கப்பட்டது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

#2


இந்தக் கோட்டையின் சிறப்பம்சம் இது கடற்கரையோரம் அமைந்திருப்பது. கண்காணிப்பு கோபுரங்கள், தண்ணீர் தொட்டிகள், குகைகள், தளவாட கிடங்குகள் என்று பல வகை வரலாற்று ஈர்ப்புகள் இங்கு இருக்கின்றன. உள்ளே செல்லலாம் வாருங்கள்.

#3

ஞாயிறு, 17 மார்ச், 2019

தூறல்: 35 - இன்றைய செய்திகள்

 ஒரு படம்.. ஒரு லட்சம்++ பக்கப் பார்வைகள்..!

ளிப்படங்களுக்கான ஃப்ளிக்கர் தளத்தில் எக்ஸ்ப்ளோர் பக்கம் என்றால் என்னவென்பதை முன்னரே பலமுறைகள் பகிர்ந்திருக்கிறேன். நாளொன்றுக்கு அத்தளத்தில் சுமார் பதினாறு இலட்சம்++ படங்கள் வலையேறுகின்றன. அதிலிருந்து 500 படங்கள் தெரிவு செய்யப்பட்டு ‘எக்ஸ்ப்ளோர்’ பக்கத்தில் வெளியிடப்படும். இதுவரையிலும் அப்பக்கத்தில் தேர்வான எனது படங்களைப் பற்றி பகிர்ந்து வந்திருக்கிறேன். இப்போது அந்த வரிசையில் இம்மாதம் சிவராத்திரியையொட்டி நான் பகிர்ந்த நடராஜர் படமும்:


சென்னை விமானநிலையத்தில் இருக்கும் சிலை இது. இதுவரையிலும் தான் பார்த்த இந்த சிலையின் படங்களில் இதுவே சிறப்பானது என

ஞாயிறு, 10 மார்ச், 2019

கோவில் வீதி

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் 15வது குறுக்குத் தெரு பல புராதான மற்றும் புதிய கோவில்களை வரிசையாகக் கொண்டிருப்பதால் டெம்பிள் ஸ்ட்ரீட் - கோவில் தெரு என்றே அழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் கோவில்களைப் பற்றி தனித்தனியே ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். அவற்றுக்கான இணைப்புகள் பதிவின் இறுதியில்..

சென்ற மாதம் ஓர் நாள் அங்கிருக்கும் கோவில்களுக்குச் சென்றிருந்த போது 50mm லென்ஸ் உபயோகித்து எடுத்த படங்களின் தொகுப்பு இது..

#1
ஓம் சக்தி
தேவி கங்கம்மா கோவில் வாசலில்..

#2
எலுமிச்சைகள்
மாலைகளாகவும்
விளக்கேற்றி வழிபடவும்

#3
பஜ கோவிந்தம்
கோபுர தரிசனம்

ஞாயிறு, 3 மார்ச், 2019

மகா சிவராத்திரி வாழ்த்துகள்!

சிவ பெருமானை வழிபடச் செல்லுகையில் நம்மை முதலில் வரவேற்பவர் நந்தி தேவரே. சிவனின் அருளைப் பெற நந்தியையே முதலில் வணங்குகிறார்கள். பிரதோஷக் காலங்களில் நந்திக்குதான் முதலில் விசேஷ பூஜைகளும் அபிஷேகமும் நடக்கும். நந்தியின் காதுகளில் தமது பிரச்சினைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

#1
‘பெருமைமிகு வாழ்வருளும் நந்தியம் பெருமான்'
காடு மல்லேஸ்வரர் ஆலயம்,
பெங்களூரு
மீபத்துப் பயணத்தின் போது மொபைலில் (OnePlus6T) க்ளிக் செய்த சில படங்கள்:

#2
‘மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ.
மறைநான்கின் அடிமுடியும் நீ. மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ.'

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin