ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

ஒற்றைக் கனவு

 #1

"மனஉறுதியே, 
வெற்றிக்குத் தேவையான சக்தி!" 
_  Dan Gable

#2
"சில விஷயங்கள் சற்றே அதிக வருத்தம் தருபவையாக முடிந்தாலும், 
நாம் மூழ்கி விடாமல் மிதப்போம், 
பரவாயில்லை..!"
#3
“ஒற்றைக் கனவு ஆயிரம் நிதர்சனங்களைக் காட்டிலும் 
அதிக சக்தி வாய்ந்தது.” 
_ J.R.R. Tolkien
#4
"பிரச்சனைகள் என்பது 
மேலே முட்களைச் சூடிய 
வாய்ப்புகள்." 
_ Hugh Miller

#5
“காலம் குறுகியது, 
மற்றவரது வாழ்க்கையை வாழ்ந்து 
அதை வீணாக்காதீர்கள்." 
_ Steve Jobs

#6
"வளர அவகாசம் தேவைப்படும் சில விஷயங்களை 
அவசரப்படுத்த முயன்றிடாதீர்கள்."
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 134

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

15 கருத்துகள்:

 1. மிதந்தபடி என்பதை விட முழுகிவிடாமல் என்று சொல்லலாமோ!

  ஒற்றைக்கனவு பாம் பெரிதாக்கப்படாமல் சிரித்தாயாகவே இருக்கிறதோ?


  படங்கள் வெகு அருமை.  வரிகள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஒற்றைக்கனவு பாம்//

   *ஒற்றைக்கனவு படம் 

   இப்போது சரியாகி விட்டதோ!

   நீக்கு
  2. வரிகளுக்கு நடுவே பொதிந்த பொருள் அதுவே. இருப்பினும் சிறு மாற்றம் செய்து விட்டேன்:).

   ஆம், படம் பெரிதாக்க விட்டுப் போயிருந்தது. சரி செய்தாயிற்று.

   நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. தட்டச்சுப் பிழை எனப் புரிந்தது. நான் பதிலளித்துக் கொண்டிருக்கையிலேயே உங்கள் விளக்கம் வந்து சேர்ந்தது:).

   நீக்கு
 2. சிறப்பான படங்களும் வாசகங்களும்..... அனைத்தும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. மிக அழகான பூக்கள். வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

  பதிலளிநீக்கு
 4. பூக்களும் அதற்கான வாழ்வியல் வாசகங்களும் அருமை.

  மிகவும் ரசித்துப் பார்த்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. வாசகங்களும் நன்று.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 6. தோட்டத்து மலர்களின் படங்களும் அவற்றிற்கான வாசகங்களும் அருமை

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin