Friday, August 30, 2013

வாழ்வை அர்த்தப்படுத்தும் ‘வெற்றிக் கோடு’ - மோகன் குமாரின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை


சுய முன்னேற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஏன் அத்தியாவசியமாகிறது? சமூகத்தில் தனக்கென ஒரு அந்தஸ்தைத் தேடிக் கொள்ளவும், உலகுக்குத் தன்னை நிரூபிக்கவும்தானா?  ‘இல்லை’ என்கிறார் மோகன் குமார்.  எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட்டு, மாற்றங்களுக்குத் தயாராகி, சவால்களைச் சந்தித்து, நினைத்தும் பார்த்திராத சிகரங்களைத் தொட்டு, நாமே அமைக்கும் புதிய பாதையில் நம் வாழ்க்கைப் பயணம் சீராக ஓடத் தொடங்குவதில் கிடைக்கிற ஆனந்தத்துக்கும் திருப்திக்காவுமே என்கிறார் இந்நூலின் மூலமாக.

‘இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு?’

Tuesday, August 27, 2013

வாசிப்பில் உயிர்த்திருக்க.. “அகநாழிகை புத்தக உலகம்”

அவசர உலகின் அழுத்தங்களிலிருந்து ஆசுவாசமாகவும், உலகையும் மனிதர்களையும் புரிந்து கொள்ளவும், அறிவைச் செதுக்கிக் கொள்ளவும், மனதைப் பண்படுத்திக் கொள்ளவும் உற்ற நண்பனாக என்றும் உடன் வருபவை புத்தகங்களே. நேரம் கிடைக்கையில் வாசிப்பவர்.. வாசிக்கவென நேரத்தை ஏற்படுத்திக் கொள்பவர்.. இவர்களுக்கு மத்தியில்,

Friday, August 23, 2013

வாய்ப்புகள் வரமன்று

அதிர்ஷ்டம்
1. ஒரு புன்னகை போதும் நட்பைத் தொடங்க. ஒரு வார்த்தை போதும் மனஸ்தாபங்களை முடிவுக்குக் கொண்டு வர.

2. அரும்புக்குள் சுருங்கி நிற்கும் இறுக்கத்தை விடவா வலியைத் தந்து விடப் போகின்றன, மலரும் போது எதிர் கொள்ள நேரும் பிரச்சனைகள்?

Tuesday, August 20, 2013

இலையும் அழகுதான் - இம்மாத PiT

#1
 Canna Plant
'மலர்கள் மட்டும்தான் அழகா? ஒரு செடிக்கோ மரத்துக்கோ அழகூட்டும் இலைகளை மறக்கலாமா' எனக் கேட்கிறார் இம்மாத PiT போட்டியின் நடுவர், Anton. எத்தனையோ முறை மரங்களைப் படமாக்குகையில், ஒரு கொப்பாக இலைகள் என்ற வகையில் ஓரிரு படங்கள் எடுத்திருக்கிறேன் என்றாலும் இவரது கேள்வியும், இந்தத் தலைப்புமே விதம் விதமான வண்ணங்களிலும் எண்ணற்ற வடிவங்களிலும் மலர்களோடு போட்டியிடும் இலைகளின் பக்கம் என் பார்வையைத் திருப்பியது.

போட்டி அறிவிப்பு: இலை(கள்) இங்கே.
இன்றே படங்களை அனுப்பக் கடைசித் தேதி.

அறிவிப்புப் பதிவிலும் இடம்பெற்ற கீழ்வரும் பாகற்கொடி தவிர்த்து மற்ற 10 படங்களும் லால்பாகில் சென்ற வாரம் படமாக்கியவை.
#2

# 3 சிகப்பு நரம்புகள்


#4 சிறகுகள் விரித்து..

Monday, August 19, 2013

உலகப் புகைப்பட தினம் - புகழ் பெற்றக் கலைஞர்கள் என்ன சொல்றாங்கன்னா..

*1
ஒளிப்படம்  என்பது எடுக்கப்படுவதில்லை. உருவாக்கப்படுகிறது” - அன்சல் ஆடம்ஸ்

# An Apple a Day..


சிறப்பான புகைப்படங்களைக் கொடுக்க, எப்படி எடுத்தால் நல்ல படமாகும் என விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். பார்ப்பவர்கள் ஆர்வத்துடன் நம் படத்தை இரசிக்க வேண்டுமெனில் எதைச் சேர்த்தால் பலம், எதைத் தவிர்த்தல் நலம் என்கிற புரிதல் இருக்க வேண்டும்.

*2. “நீங்கள் எடுத்த முதல் பத்தாயிரம் படங்களே உங்களது மோசமான படங்கள்” - ஹென்ரி கார்ட்டியர்-ப்ரிசன்

அதிர்ச்சியாகி விட வேண்டாம் எல்லாமே மோசமா என. பத்தாயிரம் என்பது ஒரு பேச்சுக்கு. இதுவரை நாம் எத்தனை முறை கேமராவை ‘க்ளிக்’கியிருப்போம் என்பதற்கு சரியான கணக்கு இருக்க முடியாதுதான். உத்தேசமாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான படங்களை எடுத்த பிறகே..,

Wednesday, August 14, 2013

செங்கல் சூளை சித்திரங்கள் - ‘கல்கி கேலரி’க்காக சரவணன் தண்டபாணியுடன் ஒரு நேர்காணல்


 67_ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது நாடு. சமீப ஆண்டுகளில் நாடு கண்டிருப்பது பெரும் வளர்ச்சி என்றே உவகையுடன் பேசப்படுகிறது. சர்வதேச தரத்துக்கு விமான நிலையங்கள், சாலைகள், பாலங்கள், ஐடி அலுவலகக் கட்டிடங்கள், வேலைவாய்ப்புகளால் நகரங்களில் கூடிக் கொண்டே போகும் மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்க முளைத்துக் கொண்டே இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், Malls.. இவை யாவும் இப்படியான ஒரு மாயையை உருவாக்கி இருப்பதில் ஆச்சரியமென்ன?

Monday, August 12, 2013

விகடன் செய்திகள் .காமில்.. - ( Bangalore Lalbagh Flower Show )

#1  மஞ்சள் பூவின் மலர்ச்சி

# 2  டாலியா, கண்களுக்குக் குளிர்ச்சி

இந்தப் பூக்களையும் இணைத்துக் கொண்டு நான் எடுத்த லால்பாக் மலர் கண்காட்சிப் படங்கள்..

Sunday, August 11, 2013

உலகின் அதி உயர மண் குடம் “The Meltling Pot of Culture" , பெங்களூர்

சென்ற பதிவின், லால்பாக் சுதந்திர தின மலர்க்கண்காட்சிப் படவரிசையில் இப்படத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தேன் ஆயினும் அது குறித்த முழுமையான விவரங்கள் தந்திருக்கவில்லை. இந்த முறை சென்றிருக்கையில்தான் முதன் முறை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். லால்பாக் உள்ளே கெம்பகெளடா மண்டபம் எழும்பிய குன்றின் நேர் எதிரே இருக்கிறது போன்சாய் தோட்டம். அதனுள்ளே எழும்பி நிற்கிறது இந்த அதி உயர மண்குடம்.

 The Meltling Pot of Culture


படத்தை ஃப்ளிக்கரில் பதியும் முன் அதுகுறித்த விவரங்களைத் தேடிய போது கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்திட விரும்புகிறேன். இதை சென்ற பதிவிலேயே இப்போது சேர்த்தால் ஏற்கனவே வாசித்தவர்கள் தவறவிடக் கூடுமாகையால், தனிப்பதிவாக இங்கு:

Saturday, August 10, 2013

2013 சுதந்திர தின மலர் கண்காட்சி - லால்பாக் பெங்களூரு - ( Bangalore Lalbagh Flower Show )

#1  # சூரியக் கதிரில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் மலர்கள்

#2 ஆரம்பித்த இரண்டாம் நாள் (8 ஆகஸ்ட்) என்பதாலோ அல்லது மதிய நேரம் என்பதாலோ கூட்டமிருக்கவில்லை. 

#3 கண்ணாடி மாளிகை

#4 ஒவ்வொரு முறையும் இந்தப் படிகளில் இறங்கும் போது மனிதத் தலைகளை மட்டுமே காண முடியும். கூட்டமில்லாக் கண்காட்சி கொண்டாட்டத்தைக் கொடுத்தது:)!

கடந்த சில தினங்களாக மழையும் குளிருமாகவே இருந்த பெங்களூர் இப்போதுதான் சூரியனின் கதகதப்புக்குத் திரும்பியிருக்கிறது. இந்த நீரூற்றுக்கு எதிரேயிருக்கும் வாயிலின் வழியாகவே நுழைய வேண்டும் மாளிகைக்குள்..
#5

நீல நதியில் மிதந்து கொண்டிருந்தது அங்கே இரண்டு இலட்சம் ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட, 35 அடி நீளமும், 13 அடி உயரமும் கொண்ட பூப் படகு. விரிக்கப்பட்டிருந்தது முன்னே பூக்கம்பளம். நெருக்கடியோ கெடுபிடியோ இல்லாத சூழலில் படகைச் சுற்றி வந்து வேறு வேறு கோணங்களில் எடுத்தவற்றை பார்வைக்கு வைக்கிறேன் நீங்கள் இரசித்திட. அப்படியே Mega Hand, Vertical Garden, Melting Pot என இந்தக் கண்காட்சியின் சில சிறப்பம்சங்களையும் பார்க்கலாம் வாங்க.

Wednesday, August 7, 2013

பூவின் மொழி நிறமா.. மணமா..? - ( Bangalore Lalbagh Flower Show )

மீண்டும் மீண்டும் பூக்களா?

மீண்டு வர முடியாதபடி இயற்கை விரித்த வலையில் மாட்டிக் கொண்டதில்
வருத்தமில்லை. மகிழ்ச்சிதான்.

இங்கே பத்தாவது படத்தில் வைத்த கேள்விக்கு சாட்சியாக முதல் ஒன்பது படங்கள்.

கூடவே பெங்களூர் லால்பாக் சுதந்திரதினக் கண்காட்சி 2013 குறித்த தகவல்கள்..

#1 Canna Flower

பின் வரும் மூன்றும்.. PINK ALAMANDA

#2 மலரக் காத்திருக்கும் மொட்டுக்கள்


Sunday, August 4, 2013

உன்னை நேசிக்கிறேன் மனிதாபிமானமே.. – இ. இ. கமிங்ஸ் ஆங்கிலக் கவிதை

மனிதாபிமானமே உன்னை நேசிக்கிறேன்
ஏனெனில், வெற்றியாளனின் காலணிகளைப் பளபளப்பாக்குவதையே
அதிகம் விரும்புகிற நீ, அவனது கடிகாரச் சங்கலியில் ஊசலாடும்
ஆன்மாக்கள் குறித்துக் கவலை கொள்வதில்லை.
இதைச் சொல்ல முற்பட்டால் தர்மசங்கடம் இருவருக்குமே.

கொண்டாட்டங்கள்,  ஏனெனில்
பலமாகப் புகழப்படுகிறாய்
பெரும் அரங்கில் இசைக்கப்படும் பாடல்களில்
தேசம், தாயகம், அன்னை ஆகிய வார்த்தைகளைக் கொண்டு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin