ஒரு கணம் நாம் இழக்கலாம்
வாழ்க்கை மற்றும் மரணம் குறித்த பிரக்ஞையை
நட்சத்திர வெளிச்சம் மங்கும் வேளையிலும் கூட, என்னால் இன்னும் பார்க்க முடிகிறது
ஒளிரும் உன் உதடுகளையும் கண்களையும்,
உனது கைகளில் ஒன்று முழங்காலோடு பிணைந்திருக்க, மற்றொன்றுஒரு கோப்பைக் காப்பியைப் பிடித்துக் கொண்டிருக்கிறது, அதன் சூடு தணிய நீ காத்திருக்கையில்.
உறங்கும் பாறைக்கு எதிராக நான் சாய்ந்து கொண்டு, உற்றுக் கேட்கிறேன்
சில்வண்டுகளின் நிலை கொள்ளாத சலசலப்பை.
உனக்குப் பின்புறமாக விரைந்து கடக்கிறேன்
அது மழைக்குப் பிறகு குறுகலான பாதையில்
நீ பின்புறமாக வண்டியைச் செலுத்துவதைப் போலிருந்தது.
ஒருவேளை இந்தக் கசங்கிய துணிகளுக்கு மீண்டும் இஸ்திரி தேவையாக இருக்கலாம்.
ஒருவேளை கோடைகாலக் கடிகார முள்ளுக்கு மீளமைவு தேவையாக இருக்கலாம்.
காப்பியில் மிதக்கும் வடிவமைப்பு
நீயோ நானோ ஒருபோதும் முன்கூட்டி கணிக்க இயலாத தீர்மானமாக இருக்கிறது.
இந்த உலகம் மீட்டு சரிசெய்ய இயலாத அளவுக்கு அதிகமாய் உடைந்து போய்விட்டது, மற்றும் நாம்
இங்கே இருப்பது தற்செயலானது, இந்த இடைவேளையில் சுற்றிக் கொண்டிருக்கிறோம் சொற்பக் காலத்திற்கு.
ஒரு கணம் நாம் இழக்கலாம் வாழ்க்கை மற்றும் மரணம் குறித்த பிரக்ஞையை
செல்லும் பாதையிலுள்ள விளக்குகள் மட்டும் இன்னமும் எரிந்து கொண்டிருக்கின்றன.
*
மூலம்: 'For a Moment We Can Lose Consciousness of Life and Death' by Wang Yin [a poem from 'A Summer Day in the Company of Ghosts']
ஆங்கிலத்தில்: Andrea Lingenfelter
கவிதை மற்றும் கவிஞர் பற்றிய குறிப்பின் தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
படங்கள்: நன்றியுடன்.. இணையத்திலிருந்து..
**
வாங் யென், 1962_ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தவர். 1980_களில் கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்தவர். இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் கலைகளுக்கு எதிரான கட்டுப்பாடுகளை எதிர்த்துக் குரல் எழுப்பிய, கலாச்சாரப் புரட்சியாளர்களாக அறியப்பட்ட, மக்களாட்சி இயக்கத்தைச் சார்ந்த ‘மிஸ்டி’ கவிஞர்களில் முக்கியமான மூன்றாம் தலைமுறைக் கவிஞராகக் கொண்டாடப்படுபவர். சதர்ன் வீக்லி எனும் முற்போக்குச் செய்தித் தாளின் கலை விமர்சகராகவும் நிருபராகவும் ஐரோப்பா மற்றும் ஆசியா எங்கிலும் பரவலாகப் பயணம் மேற்கொண்டவர். சமகால எழுத்தாளர்கள், மற்றும் ஓவியர்களுடன் தொடர்புடையதாக இவர் எடுத்த புகைப்படங்கள் சீனா மற்றும் உலக அளவில் காட்சிப் படுத்தப்பட்டு கவனம் பெற்றிருக்கின்றன. சீனாவின் கவிதைக்கான உயரிய பரிசுகளை இருமுறை வென்றவர். இவரது கவிதைகள் பிரஞ்சு, ஜப்பானிய மொழிகள் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
***
***
அருமையான கவிதை. கவிஞர் அறிமுகம் அருமை.
பதிலளிநீக்குசொல்வனத்தில் இடம்பெற்றதற்கு வாழ்த்துகள்.
நன்றி கோமதிம்மா.
நீக்குசீனாவில் கூட கவிதைகள் எழுதுகிறார்களா? மனதுக்குள் இப்படி தோன்றியதுதான்! கவிஞர் அறிமுகமும் கவிதையும் நன்று.
பதிலளிநீக்குமுன்னரும் சீனக் கவிதைகளின் தமிழாக்கம் பகிர்ந்திருக்கிறேன். நன்றி ஸ்ரீராம்.
நீக்குஉண்மை தான். வாழும் சொற்ப காலத்தில், நம்மால் மாற்ற முடியாத துயரங்கள் குறித்து கவலை கொள்ளாது மகிழ்ச்சி அளிக்கும் விசயங்களில் மனதைச் செலுத்துவது நல்லது தான். நல்லதொரு அறிமுகம். வாழ்த்துக்கள். நன்றி.
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நீக்குகவிதையின் மொழிபெயர்ப்பும் அர்த்தமும் அருமை,. //இந்த உலகம் மீட்டுச் சரி செய்ய இயலாத அளவு போய்விட்டது அதுவும் அதோடு வரும் ......இடைவெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறோம்// என்ன ஒரு யதார்த்தம். இந்த உலகம் சரி செய்ய இயலாத அளவு போய்விட்டது இது அவர் எப்போது எழுதிய கவிதையோ? இப்போது உலகம் அப்படித்தேன் இருக்கிறது!
பதிலளிநீக்குஅர்த்தம் பொதிந்த வரிகள்
கவிஞர் பற்றிய அறிமுகத்திலிருந்து இவரைப் பற்றி அறிய முடிகிறது. எத்தனை விருதுகள்!!
வாழ்த்துகள்!
கீதா
மிக்க நன்றி கீதா.
நீக்கு