யாக்கை
வெறித்து நிற்கிறாள்
போதை இறங்காது வீழ்ந்து கிடப்பவனை.
எக்கவலையுமற்றவன் தருந்துயரும்
தனியொருவளாய்த் தாங்கும்
அன்றாடத்தின் பாரமும்
அழுத்துகிறது
உள்ளத்தையும்
உடலையும்.
ஒவ்வொரு உறுப்பும்
ஓய்வு கேட்டுக் கெஞ்ச
#1
#1
தேரி. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், அற்புதம்! ‘ஒவ்வொரு நாளும் ஒருசில அத்தியாயங்கள்’ என முடிவெடுத்து ஆரம்பித்தேன். ஆயின் ஆவல் மிக, தொடர்ச்சியாக மூன்று தினங்களில் வாசித்து முடித்தேன்.
காட்சிகளாக விரியும் கிராமத்து மக்களின் எளிய வாழ்க்கை, சீரிய எழுத்து நடை, ரசிக்க வைக்கும் வட்டார வழக்கு, ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கண் முன் கொண்டு வந்த சிறப்பு, நுட்பமானக் கதைப் பின்னல், வாசகரின் ஆர்வத்தைத் தூண்டியபடி சென்று உரிய நேரத்தில் ஒவ்வொன்றாகக் கட்டவிழ்க்கப்பட்ட முடிச்சுகள்!
கஞ்சுகம்