வியாழன், 22 ஏப்ரல், 2021

நமக்குச் சொந்தமானது அல்ல பூமி.. - உலகப் புவி தினம் 2021

வ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22_ஆம் தேதி உலகப் புவி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையைச் சீரழித்து வரும் மனிதர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.  ‘மீட்டெடுப்போம் நம் பூமியை..’ என்பதே இந்த ஆண்டின் உலகப் புவி நாளுக்கான கருவாகும்.


#1

“இன்று நாம் காப்பாற்றும் பூமியே, 
நாளை நாம் நமது குழந்தைகளுக்கு விட்டுச் செல்லும் 
உயரிய பரிசு.”

#2

“மனிதனின் பேராசையைத் திருப்தி செய்ய முடியாத பூமி, 
ஒவ்வொரு மனிதனின் தேவையையும் 
போதுமான அளவுக்குத் திருப்தி செய்து கொண்டுதான் இருக்கிறது.”

#3

"நம்பிக்கையை விதைக்கும் தொழிலே விவசாயம்." 

சனி, 10 ஏப்ரல், 2021

தேடினேன்.. வந்தது.. - சிட்டுக்குருவி (House Sparrow) - பறவை பார்ப்போம் - பாகம்: (66)

 #1

ழிந்து வரும் அபாயத்தில் இருக்கும் பறவைகளின் பட்டியலில் சிட்டுக்குருவி இனம் சேர்ந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. 

சிறு வயதில் எனது அன்றாட வாழ்வில் அதிகமாகப் பார்த்த பறவைகள் எவை என்றால் காகங்களையும் சிட்டுக்குருவிகளையும்தான் கை காட்ட முடியும். திருநெல்வேலி மதுரை ரோட்டில், எங்கள் வீட்டுப் புறவாசல் தாண்டி  இருந்த பிள்ளையார் கோயில் அரச மரத்தில் கூடடையும் கொக்கு உள்ளிட்ட பறவைகளை மேல் தட்டட்டியில் இருந்து ரசித்ததெல்லாம் தனிக் கணக்கு. ஆனால் அவை வீட்டுக்கு வருவதில்லையே. வீட்டு விருந்தாளிகள் என்றால் மேற்சொன்ன இரண்டும்தாம். 

அதிலும் சிட்டுக்குருவிகள் வசிப்பதற்காகவே முற்றத்தில் இரு தூண்களுக்கு நடுவே தாத்தா பரண் அமைத்திருந்ததால் அவற்றின் தினசரி தரிசனம் நிச்சயம்.

2013_ஆம் ஆண்டு சிட்டுக்குருவிகள் தினத்தன்று பதிந்த ‘கூடு இங்கே குருவி எங்கே.. - https://tamilamudam.blogspot.com/2012/03/blog-post_20.html’ என்ற என் பதிவில் அந்த ‘மலரும் நினைவுகளை’ நேரமிருப்பின் வாசிக்கலாம்.

இப்போது எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், பெங்களூர் வந்த இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட சிட்டுக்குருவியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. எங்கேனும் ஊர்களுக்குப் பயணம் செல்லுகையில் பார்த்ததுதான். 

அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்த போது மாடப் புறாக்களும், காகங்களும், எப்போதேனும் பால்கனி கைப்பிடியில் ஒருசில மணித்துளிகள் அமர்ந்து செல்லும் பருந்துகளும், அபூர்வமாக வருடம் ஒருமுறை குறிப்பிட்ட மாதத்தில் வந்து ஆச்சரியப்படுத்திய ஆந்தையும் மட்டுமே பறவை-விருந்தாளிகள் கணக்கில் வரும். காகத்தையும், புறாவையும் அப்போது சலிக்கச் சலிக்கப் படங்கள் எடுத்தாயிற்று.

கடந்த நான்கு வருடங்களாக, தோட்டத்துடன் கூடிய இந்த வீட்டுக்கு வந்த பின் இதுவரையில் சுமார் முப்பதுக்கும் மேலான வகைப் பறவைகளை எங்கள் தோட்டத்திலேயே பார்த்து விட்டேன். அதில் 25 வகைகளைப் படமாக்கித் தகவல்களுடன் பகிர்ந்தும் விட்டேன். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், வருடக் கணக்காக சிட்டுக்குருவியைத் தேடியதைப் போல இங்கே காகத்தைத் தேட வேண்டிய நிலை. வயல்கள் சூழ்ந்த, தோட்டங்களைக் கொண்ட இந்தப் பகுதிக்கு வந்த முதலிரண்டு வருடங்களில் ஒரு காகம் கூட கண்ணில் படவில்லை என்றால் நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். இப்போது இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எப்போதேனும் சுற்றுச் சுவருக்கு அப்பால் இருக்கும் யூகலிப்டஸ் மரத்திலிருந்து கேட்க நேரும் காகம் கரைகிற சத்தம்  ‘அட நம்ம காக்கா’ என எண்ணவும், எட்டிப் பார்க்கவும் வைக்கின்றது :). 

கண்ணிலேயே அகப்படாமல் இருந்த சிட்டுக்குருவி, சின்ன வயதில் மிக அருகாமையில் பார்த்து வளர்ந்த ஒரே குருவி, இன்று எத்தனையோ வகைக் குருவிகளைப் படம் எடுத்திருந்தாலும் ‘சிட்டுக்குருவியை எடுக்க முடியவில்லையே’ என வருத்தப்பட வைத்த குருவி... சில மாதங்களுக்கு முன் ஓர் அதிகாலையில் கலையாத தூக்கத்துடன் சன்னல் திரையை விலக்கிய போது முருங்க மரக் கிளையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கக் கண்டேன். பரபரப்பாகி அரை நிமிடத்தில் அவசர அவசரமாக ஓரிரு படங்கள்தான் எடுத்திருப்பேன். பறந்து விட்டது. போகட்டும், எப்படியோ என் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய வரையில் திருப்தியே :).

ஆக.., என் வீட்டுத் தோட்டத்தில்.., என்னைத் தேடி வந்த பறவைகள்.. பட்டியலில் சிட்டுக்குருவியையும் இப்போது சேர்த்தாயிற்று. அத்தோடு மேலதிகத் தகவல்கள் சிலவற்றையும் பார்ப்போம். ..

ஆங்கிலப் பெயர்: House Sparrow
உயிரியல் பெயர்: Passer domesticus

#2

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

துணிவில் உள்ளது..

 #1

"உண்மையாய் இருங்கள். 
அது அத்தனை சிக்கலானதன்று."

#2

"எதிர்மறையான எதுவும்
உங்கள் பிரகாசத்திலிருந்து 
பாய்ந்து வெளியேறட்டும்."


#3

"எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin