புதன், 28 அக்டோபர், 2015

சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (8,9) - சொல்வனம் இதழ்: 138



பட்டத்தினால் என்ன பயன்?

அவர்களால் அடைய முடிவதில்லை
அழகானவர்கள் தீச்சுடரில் மரிக்கிறார்கள்-
தற்கொலை மாத்திரைகள், எலிப் பாஷாணம், கயிறு 
எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும்...

செவ்வாய், 27 அக்டோபர், 2015

எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் நினைவஞ்சலிக் கூட்டம்

அஞ்சலிகள்!
ழுத்தாளரும் கலை, இலக்கிய விமர்சகருமான திரு வெங்கட் சாமிநாதன் கடந்த புதன் கிழமை, 21 அக்டோபர் 2015 அன்று அதிகாலையில் காலமானார். அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் விதமான ஓர் அஞ்சலி நிகழ்ச்சியை எழுத்தாளர் பாவண்ணன் நண்பர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருக்கிறார். அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

மூன்று தமிழும் ஓரிடம் நின்று..

ஒன்று.. இரண்டு.. மூன்று..

பார்த்ததும் பளிச் எனத் தெரிய வேண்டும் படத்தில்..

இதுதான் ‘தமிழில் புகைப்படக் கலை’ தளம் இம்மாதப் போட்டிக்கு அறிவித்திருக்கும் தலைப்பு..

சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

#1 சுற்றிச் சுற்றி வந்தீக..

#2 மைசூர் அரண்மனையின் தெற்குக் கோபுரங்கள்


#3 இதழ் மூன்று.. துளிர் மூன்று..

#4 கதிரொளியில் மொட்டுக்கள்..

புதன், 14 அக்டோபர், 2015

மனிதம்.. அன்பு.. அமைதி.. - மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் 10

#1 எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உயிர்த்திருக்கிறது.

#2 என் வாழ்க்கையே எனது அறிவுரை.

#3 அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை.


#4 கண்ணுக்கு கண் எனும் கொள்கை,

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கரையாத கணபதி பப்பா - பெங்களூரு, சாங்கி ஏரி


ரு வாரங்களுக்கு முன், ஒரு ஞாயிறு மாலை பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இருக்கும் சாங்கி ஏரிக்கு சென்றிருந்தேன். அதற்கு முந்தைய வாரத்தில் அந்த ஏரியைக் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை செய்தித்தாளில் படிக்க நேர்ந்ததும் செல்லும் ஆவல் எழுந்ததற்கு ஒரு காரணம்.

#2

பசுமை சுருங்கிக் கொண்டே வருகிற இந்தத் தோட்ட நகரில் பல வித உயிர்களுக்கும் மரங்களுக்கும் புகலிடமாக இருந்து வருகிறது

வியாழன், 1 அக்டோபர், 2015

அலங்கார பலூன்களும் விபரீத விளைவுகளும்..


லுவலக விழாக்கள், குடும்ப நிகழ்வுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இவற்றை A to Z கவனித்து  நடத்தித் தருகிறோம்’ என வாக்குத் தருகிற, இவெண்ட் ஆர்கனைசர் எனப்படுகிற விழா ஏற்பாட்டளர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் மக்கள். தவறில்லை. ஆனால் ஒப்படைக்கும் பொறுப்பை நேர்மையாகச் செயல்படுத்துவார்களா என்பதைத் தீர விசாரிப்பது மிக மிக அவசியம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin