புதன், 29 மே, 2013

தோற்றப் பொலிவு, கூடுதல் வசதிகளுடன் NEW FLICKR - இப்படை தோற்கின்.. Cubbon Photo Walk

#1  1 GB வேலி முள்
விலகியது..
புகைப்பட ஆர்வலர்களுக்கோர் நற்செய்தி:)! அன்றாடம் உலவும் சமூக வலைத்தளங்களிலும், பிரத்தியேகமாகப் புகைப்படங்களுக்கென வந்திருக்கும் தளங்களிலுமாக நம் படங்களைப் பகிரப் புதிது புதிதாக எத்தனையோ வழிகள் வந்து விட்டாலும் முன்னோடியாகவும் இன்றளவிலும் முதன்மையானதாகவும் இருந்து வருவது FLICKR. 1 GB வரை மட்டுமே (சுமார் 200 படங்கள்) இலவசமாக ஏற்ற முடிவதாக இருந்தது. அதில் sets உருவாக்க இயலாது. படங்களையும் பார்த்துப் பார்த்து குறைந்த அளவு இருக்குமாறு வலையேற்ற வேண்டிய சூழல். இதனாலேயே 1GB கோட்டா முடிந்ததும், பலரும் அதில் அப்டேட் செய்வதை விட்டுவிட்டு வெளியேறி வந்தனர். ஃப்ளிக்கர் மேல் பற்று கொண்டவர்கள் கூடுதல் வசதிகளை ஆண்டுச் சந்தா கட்டி Pro உறுப்பினர் ஆகித் தொடர்ந்து வந்தனர். நானும் அப்படியே.

ஆனாலும் ஆயிரத்துக்கும் மேலான படங்களை வகைப்படுத்தி வைத்ததெல்லாம் ஆர்வம் குறைகையில், தளத்தைக் கவனிக்காமல் விடுகையில் மறைந்து போகுமே எனும் உறுத்தல் இருந்தபடியே இருந்தது.

சனி, 25 மே, 2013

உன்னிடத்தில் என்னை விட்டு.. - ரோஜாப் பூந்தோட்டம் - கபினி ( இறுதிப் பாகம்)

‘பேசும் படங்கள்’ பகுப்பின் நூறாவது பதிவு. ஏன் இந்தப் பெயரில் தொகுக்கத் தொடங்கினேன் என்பது இறுதியில்..

இப்போது நுழையலாம் பூங்காவினுள்..

[14_ல் ஓரிரு படங்கள் முன்னர் சில பதிவுகளில் பகிர்ந்திருந்தாலும், கபினி தோட்டத்து மலர்கள் என்ற வகையில் மீண்டும் இடம் பெறுகின்றன.]

#1 அரும்பும் மலரும்..

#2 முகம் மலர்ந்து..

புதன், 22 மே, 2013

மெய்யெனப்படுவது.. - கீற்று மின்னிதழில்..


சலனமற்ற நீரில் தெரியும்
பிரதிபலிப்புகளாகவும்
நிஜமென்று மயங்க வைக்கும்
பிம்பங்களாகவும்
காண்கின்ற யாவும்.

சனி, 18 மே, 2013

‘மலரே.. முகம் காட்டு..’ - பன்னீரில் நனைந்த பூக்கள் - படங்கள் 22 - கபினி (பாகம் 3)

#1  மலரே முகம் காட்டு..

காட்டியதா:)?

காணலாம் பதிவிலே, பன்னீரில் நனைந்த பூக்களை.

கபினி நதியோர மண்ணின் செழுமையால் மட்டுமின்றி நட்டு வளர்த்துப் பராமரிப்பவரின் உழைப்பாலும் மலர்ந்து சிரித்த மலர்கள்.

வாங்க இரசிக்கலாம், தோட்டத்தைச் சுற்றி நடந்தபடியோ இல்லை இப்படி அமர்ந்தபடியோ...

# 2

#3 கேந்திப் பூ

வியாழன், 16 மே, 2013

கோடை மழை – ‘மட்சுவோ பாஷோ’ ஜப்பானிய துளிப்பாக்கள் (ஆறு)1.
ஊதக்காற்றில் சாயும் வாழைமரம்
ஊற்றுகிறது மழை நீரை
வாளிக்குள்.

2.
என் கூரையாய் நிற்கும் மரத்தின் கீழ்
ஏப்ரல் மழையின் சரிவான கோடுகள்
துளிகளாய்ப் பிரிகின்றன.

வெள்ளி, 10 மே, 2013

என் சின்னஞ்சிறு பெண்ணே..


நிற்க.. நடக்க.. 
சிறகு விரித்துப் பறக்க.. மட்டுமல்ல..
உன்னை நீ பாதுகாத்துக் கொள்ளவும் 
கற்றிட வேண்டும் கண்ணே!

புதன், 8 மே, 2013

ஆன்மாவின் இசை - மே 2013 PiT போட்டி


ஆன்மாவின் இசை சிரிப்பு என்பார்கள்.  தன்னிகரற்ற அந்த இசையை, முகம் மலர்ந்த புன்னகையை, மனம் நிறைந்த சிரிப்பைக் காட்சிப்படுத்திடக் கேட்கிறது மே PiT போட்டி.

தலைப்பு: புன்னகை

புன்னகை, சந்தோஷம் , மகிழ்ச்சி, ஆனந்தம்,குதூகலம்,கலகலப்பு.. இப்படி எது வேண்டுமானாலும் இருக்கட்டும்.. என்கிறார் நடுவர் கருவாயன் என்ற சுரேஷ்பாபு, அறிவிப்புப் பதிவில். “இன்றைக்கு இருக்கின்ற பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலைகளில் நாம் சந்திக்கின்ற அனைவருமே ஒரு வித இறுக்கமான முகங்களையே பார்க்கின்றோம்..முகம் உர்ர் என இருந்தால் யாருக்காவது பிடிக்குமா என்ன...” எனக் கேட்கிறார்.

உண்மைதானே? எந்த ஒரு மன இறுக்கத்தையும் மாற்றிடும் சக்தியாக,  மனக் கவலைகளைப் போக்கிடும் மருந்தாக புன்னகையும் சிரிப்பும் இருப்பதை மறுக்க முடியுமா?

#1


#2

#3
குழலூதும் பாலக் கிருஷ்ணர் போல அபிநயம் பிடிக்கிறார் :)!
#4

ஞாயிறு, 5 மே, 2013

‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”


மானா மதுரையிலிருந்து வெளியாகும் ‘நல்ல கவிதை பேசுவோம்’ வளரி இலக்கிய இதழ் ஒவ்வொரு மாதமும் அனைத்து இலக்கிய சிற்றிதழ்களிலுமிருந்து மூன்று கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அம்மாதத்தின் சிறந்த கவிதையாக, அமரர் கவிஞர் மீரா அவர்களின் பெயரில் “கவிப் பேராசான் மீரா விருது” வழங்குவதோடு சான்றிதழும் அனுப்பிக் கெளரவித்து வருகிறது. இந்த இதழில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத் தேர்வுகள் வெளியாகியுள்ளன.
அதில் பிப்ரவரி மாத சிறந்த கவிதையாக, (என் கவிதைகளின் சிறப்பிதழாக வெளியான) பிப்ரவரி புன்னகை இதழில் இடம்பெற்ற “யுத்தம்” கவிதை தேர்வாகியுள்ளது.

கவிதை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin