ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

அச்சம் தவிர்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 129
பறவை பார்ப்போம்.. - பாகம் 81
#1
"உங்களுக்கானது உங்களைக் கண்டடையும்." 
_ Imam Ali

#2
"ஒன்றைக் கண்டு அச்சம் கொள்வதைக் காட்டிலும் 
அது உங்களுக்குத் தேவை என்பதில் தீர்மானமாக இருங்கள்." 
_ Bill Cosby

#3
“நிதானமாகச் சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள், 
ஆனால்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

சாக்லேட் எனும் சந்தோஷம்

பெரியவர் சிறியவர் பாகுபாடின்றிப் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருப்பது சாக்லேட். 


டேபிள் டாப் ஒளிப்படங்களாக இந்த வார ஞாயிறு படத்தொகுப்பு:

#1
ப்ரவுன் சாக்லேட்

"குழந்தைப் பருவ மலரும் நினைவுகள், பெருவாழ்வு, இன்சுவை மற்றும் சாக்லேட் சாதாரண உணவை விடவும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது - அது ஒரு சிகிச்சை.
_ Christelle Le Ru


#2

வெள்ளை சாக்லேட்

தொழில் நுட்பப்படிப் பார்த்தால் இவற்றைச் சாக்லேட் எனச் சொல்ல முடியாது. ஆனால் சுவையானவை.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

ரோஜா தினத்தில் தொடங்கி.. - பிப்ரவரி 14

14 பிப்ரவரி அன்று மட்டுமல்ல, அதற்கு ஒரு வாரம் முன்பாகவே காதலர்கள்/அன்பர்கள் தினக் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கி விடுகின்றன. இப்படியும் தினங்கள் உள்ளன என்பது இப்போதுதான் பரவலாகத் தெரிய வருகிறது. பரிசுப் பொருட்கள் விற்பனைக்கான வியாபார உத்தியாகவும் இந்தத் தினங்கள் விளம்பரப் படுத்தப்பட்டு வருகின்றன! புகைப்படக் கலைஞர்களுக்கோ  தேடிப் பொருத்தமான படங்களைப் பதிய ஒரு வாய்ப்பு :)!

#7பிப்ரவரி 
ரோஜா தினம்:
இதயம் மட்டுமே அறிந்த 
மெளன மொழியில் பேசும் 
ரோஜா.

#8பிப்ரவரி 
விருப்பத்தைத் தெரிவிக்கும் தினம்:
நீயே எனது 
பதில் கிடைத்தப் பிரார்த்தனை
நிறைவேறிய விருப்பம்
பலித்த கனவு.



#9பிப்ரவரி
சாக்லேட் தினம்:
இனிப்புகள் வரும் போகும்

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

அகத்தின் அழகு

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 127

#1

 அழகிய நினைவுகளைச் சேகரியுங்கள்.


#2
“தைரியம் என்பது பயமே இல்லாது இருப்பது அன்று, 
பயத்தை எதிர் கொண்டு நிற்பதும்,  
பயத்தை வெல்வதுமே ஆகும்.”
 _ Mark Twain


#3
“எங்கே நம்பிக்கை வளர்கிறதோ, 

வியாழன், 3 பிப்ரவரி, 2022

கமலா பஸீன் கவிதைகள்

 கமலா பஸீன் / Kamla Bhasin  (ஏப்ரல் 1946 – செப்டம்பர் 2021) 

நான்கு மாதங்களுக்கு முன்னர் 25 செப்டம்பர் 2021 அன்று தனது 75_வது வயதில் காலமானார் கவிஞரும் எழுத்தாளருமான கமலா பஸீன். கடந்த அரை நூற்றாண்டில் பெண் கல்வி, பெண் உரிமை குறித்த விழிப்புணர்வு பரவ, மாற்றங்கள் நிகழ இவரது எழுத்துகளும் செயல்பாடுகளும் ஆற்றிய பங்கு, இவர் காலமான பொழுது மீண்டும் பெருமளவில் பேசவும் போற்றவும் பட்டது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin