தெரிஞ்சுக்கலாம் வாங்க.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரிஞ்சுக்கலாம் வாங்க.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 டிசம்பர், 2025

தேன் பருந்து ( Crested Honey-Buzzard ) - பறவை பார்ப்போம்

 

ஆங்கிலப் பெயர்கள்: Crested honey buzzard; Oriental Honey Buzzard
உயிரியல் பெயர்Pernis ptilorhynchus

க்சிபிட்ரிடே (Accipitridae) குடும்பத்தைச் சேர்ந்த, நடுத்தர அளவு முதல் பெரிய அளவு வரையிலான வேட்டைப் பறவை. இவ்வகையான (Hawk) கொன்றுண்ணிப் பறவைகளின் பொதுப் பெயர் தமிழில் ‘பாறு’ என அறியப்படுகிறது. அதாவது 'பாறுக் குடும்பம்' அல்லது 'கழுகு, பருந்து குடும்பம்' என்று குறிப்பிடப்படுகிறது.

#2

தேன் பருந்து ஆசியாவிற்கே உரிய தனிப்பட்ட இனமாகும். கோடைகாலத்தில் இனப் பெருக்கத்திற்காக சைபீரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன. பின்னர் குளிர்காலத்தை தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் செலவிடுகின்றன. இந்தப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் வசிக்கும் பறவைகளும் உள்ளன.

புதன், 26 நவம்பர், 2025

சாம்பல்-வயிற்றுக் காக்கா ( Grey-bellied cuckoo ) - பறவை பார்ப்போம்


ஆங்கிலப் பெயர்கள்: Grey-bellied cuckoo; Indian Flaintive cuckoo
தமிழில் வேறு பெயர்: சக்களத்திக் குயில்
உயிரியல் பெயர்: Cacomantis passerinus 

கிளைகளைப் பற்றி அமரும் பாஸரின் வகைப் பறவைகளில் ஒன்று. சாம்பல் நிறத்தில் சிறிய காகம் போன்ற தோற்றத்தைக் கொண்டது. 

சாம்பல் வயிற்றுக் காக்காவின் மொத்த உயரம் சுமார் 23 செ.மீ இருக்கும். வளர்ந்த பறவைகளுக்கு அடிவயிறும், வால் நுனியும் வெள்ளை நிறத்தில் இருக்கும். (வாலின் வெள்ளைப் பட்டையைப் படத்தில் காணலாம்). 

சில பெண் பறவைகள் மேல் பகுதியில் அடர்ந்த கோடுகள் கொண்ட சிவப்பு அல்லது பழுப்பு நிறத்துடன், கோடுகள் இல்லாத வாலையும், அழுத்தமான அடர் - கோடுகள் கொண்ட வெள்ளை நிறக் கீழ்ப்பகுதிகளையும் கொண்டிருக்கும். இளம் பறவைகள் பெண் பறவையை ஒத்திருக்கும், ஆனால் மங்கிய சாம்பல் நிறத்தில் இருக்கும்.

பூச்சிகளை இரையாக்கிக் கொள்ளும். உயர்மரக்கிளைகளில் கம்பளிப்பூச்சி போன்றவற்றைத் தேடி உண்ணும். 

இவை குறுகிய தூரம் புலம்பெயர்ந்து செல்லும் பறவைகளாகும்.

வெள்ளி, 24 அக்டோபர், 2025

இந்திய வெள்ளைக்கண்ணி ( Indian white-eye ) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்:  Indian white-eye 
உயிரியல் பெயர்: Zosterops palpebrosus
வேறு பெயர்கள்: முன்னர் Oriental white-eye என அறியப்பட்டு வந்தது.

இந்திய வெள்ளைக்கண்ணி, Zosterops palpebrosus எனப்படும் வெள்ளைக்-கண் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பாடும் பறவை இனமாகும். இதன் கண்களைச் சுற்றி ஒரு வெள்ளை வளையம் இருப்பதால், இதற்கு "வெள்ளைக்கண்ணி" என்று பெயர் வந்தது. 8-9 செ.மீ நீளமே உடைய மிகச் சிறிய பறவை. 

#2

இவற்றின் உடலின் மேற்பகுதி மஞ்சளும் பச்சையும் கலந்த ஒரு வித ஆலிவ் நிறத்தையும்,  கீழ்ப்பகுதியும் கழுத்தும் நல்ல மஞ்சள் வண்ணத்தையும்  வயிற்றுப் பகுதி வெள்ளை கலந்த சாம்பல் வண்ணத்தையும் கொண்டு காணப்படும். சில துணை இனங்களில் வயிற்றின் பகுதி மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன. இருபாலினங்களும் ஒத்த தோற்றத்தைக் கொண்டிருக்கும்.

[வெகு காலமாக இதைக் காண இயலாதா என எதிர்பார்த்துக் காத்திருந்த போது கிளைகளுக்கு நடுவே, அடர்ந்த இலைகளுக்கு உள்ளேயிருந்து வெளிப்பட்டது ஓர் நாள்:)! 

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

செம்பருந்து ( Brahminy Kite ) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்:  Brahminy Kite
உயிரியல் பெயர்: Haliastur indus
வேறு பெயர்கள்: பிராமணி கழுகு; கருடன்

செம்பருந்து ஒரு நடுத்தர அளவிலான வேட்டைப் பறவை. இது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ‘சிவப்பு முதுகுடைய கடல் கழுகு’ என்றும் அழைக்கப்படுகிறது. சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் காணப்படும். 

#2

இப் பறவையின் உடல் செம்மண் நிறத்திலும் தலையும் மார்புப் பகுதியும் வெண் நிறத்திலும் இருக்கும்.  சிறகுகளின் நுனி கருப்பு நிறத்தில் இருக்கும். மற்ற கழுகுகளைப் போல் முட்கரண்டி வடிவில் அன்றி இதன் வால் பகுதி வட்டமாக இருக்கும்.

#3

நிறம் தவிர்த்து, தோற்றம் மற்றும் குணாதிசயங்களில் கரும்பருந்துக்கு நெருங்கிய உறவுப் பறவை எனலாம்.

திங்கள், 8 செப்டம்பர், 2025

கல்வாழை [ Canna Lily ]

 

ல்வாழை அல்லது மணிவாழை எனத் தமிழில் அழைக்கப்படுகிறது (canna lily) கன்னா லில்லி. தாவரவியல் பெயர்: Canna Indica. ஆங்கிலத்தில் Indian shot, African arrowroot, edible canna, purple arrowroot, Sierra Leone arrowroot ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றன. கன்னாசியே (Cannaceae) குடும்பத்தைச் சேர்ந்த இந்த வாழை இனத்தில் சுமார் 10 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.

#2


இந்த வகைச் செடிகள் கண்களைக் கவரும் அழகிய இலைகளைக் கொண்டவை ஆகையால் தோட்டக் கலைஞர்கள் இவற்றை அலங்காரத் தாவரங்களாகப் பயன்படுத்துகிறார்கள். 

#3


இவற்றின் அனைத்து வகை இனங்களுக்கும் பூர்வீகம்

வெள்ளி, 27 ஜூன், 2025

பிளைத் நாணல் கதிர்க்குருவி ( Blyth's Reed Warbler )

 

ஆங்கிலப் பெயர்:  Blyth's Reed Warbler
உயிரியல் பெயர்: Acrocephalus dumetorum 
வேறு பெயர்: பிளைத்தின் நாணல் வார்ப்ளர்

#2
பிளைத் நாணல் கதிர்குருவி ஒரு சிறிய பழுப்பு நிற பறவை ஆகும். முதன்முதலில் இப்பறவை 1849 ஆம் ஆண்டு ஆங்கில விலங்கியல் நிபுணர் எட்வர்ட் ப்ளைத்தால் முறையாக விவரிக்கப்பட்டது. அதனாலேயே  எட்வர்ட் பிளைத்தின் நினைவாக பெயரிடப்பட்டது. 

#3

திங்கள், 2 ஜூன், 2025

அருகி வரும் மிருகம் - சிறுத்தை

உயிரியல் பெயர்:  Panthera pardus
ஆங்கிலப் பெயர்: Leopard
வேறு பெயர்: சிறுத்தைப் புலி

பூனைப் பேரினத்தைச் சேர்ந்த, புலி குடும்ப வகைகளில் சிறிய வகை விலங்காக உள்ளது சிறுத்தை. புலி, வேங்கை (சீட்டா), தென் அமெரிக்கச் சிறுத்தையான ஜாகுவார் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இவற்றின் உடல் மெல்லியதாகவும் நெகிழ்வாகவும் இருக்கும். ஆகையாலேயே இவற்றால் வேகமாக மணிக்கு சுமார் 58 கி.மீ வேகத்தில் ஓட முடியும். ஒரு சிறுத்தை ஒரே தாவலில் 6 மீட்டர் தொலைவை அடைய முடியும்.

#2

புதன், 21 மே, 2025

அலெக்ஸாண்ட்ரியா கிளி ( Alexandrine Parakeet )

 பெரிய பச்சைக்கிளி:

ஆங்கிலப் பெயர்கள்: 
Alexandrine Parakeet ; 
Great-Ringed Parakeet; 
Ring-necked Parakeet

#2


உயிரியல் பெயர்: Psittacula eupatria
வேறு பெயர்கள்: ராஜ வளையக் கிளி

'பெரிய பச்சைக்கிளி' எனக் குறிப்பிடப்படும் 'அலெக்ஸாண்ட்ரியா கிளி' (Psittacula eupatria) இனம் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மியான்மர், வங்க தேசம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.

#3

மாவீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவில் பஞ்சாபிலிருந்து ஐரோப்பா வரைக்கும்

புதன், 14 மே, 2025

காட்டுக் கோழி ( Junglefowl )

ஆங்கிலப் பெயர்: Junglefowl 
உயிரியல் பெயர்: Gallus gallus 
வேறு பெயர்: சிகப்புக் காட்டுக் கோழி

சியாவைச் சேர்ந்த, காடுகளில் வாழும் கோழி இனப் பறவை.  இந்த இனத்தில் சிகப்புக் காட்டுக்கோழி, சாம்பல் காட்டுக் கோழிகள், இலங்கை காட்டுக்கோழி, பச்சைக் காட்டுக்கோழி என பல வகைகள் உள்ளன. 

பெரும்பாலும் இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் வாழ்கின்றன. சாதாரண வீட்டுக் கோழிகளை விட அளவில் சற்று பெரிய பறவைகளாகவும் இருக்கும். 

#2

இந்தியாவில் காணப்படும் இந்த சிகப்புக் காட்டுக்கோழி இனமே தற்போதைய வீட்டுக் கோழிகளுக்கு மூதாதை என சிலரும்,

செவ்வாய், 6 மே, 2025

கருப்பு அன்னம் ( Black Swan )

 கருப்பு அன்னம்:

ஆங்கிலப் பெயர்: Black Swan
உயிரியல் பெயர்: Cygnus atratus
வேறு பெயர்: காரோதிமம் 

பிரதானமாக ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற, அளவில் பெரிதான நீர்ப் பறவை.

நியூசிலாந்தில் இந்த இனப் பறவைகள் ஒரு காலக் கட்டத்தில் முற்றிலுமாக அழியும் அளவிற்கு வேட்டையாடப்பட்டாலும் பின்னாளில் மீண்டும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இடம் பெயர்ந்து (வலசை) செல்கின்ற உயிரினம். 

திங்கள், 31 மார்ச், 2025

ஆதிமனிதனின் அருங்கதை - மனிதக் குரங்கு ( Chimpanzee )

 #1


வாலில்லா மனிதக் குரங்கு, சிம்பன்ஸி. சிம்பன்சிகள் மனிதர்களுடன் 98% டி.என்.ஏ (DNA) ஒற்றுமை பெற்றவை. மனிதர்களைப் போன்ற கை, கால், மற்றும் முக அமைப்பைக் கொண்டுள்ளது. இவை மனிதர்களை ஒத்திருந்தாலும்,

வியாழன், 13 மார்ச், 2025

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்... - வாத்துகள் ( Geese )

 #1

அனாடிடாய் (Anatidae) குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப்பறவை இனம் வாத்து. உருவத்தில்  சிறிய அளவிலான வாத்துகள் ducks எனவும் அளவில் பெரியதாக நீண்ட கழுத்துடன் காணப்படுபவை Geese (பன்மை) எனவும் விளிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் பெண் வாத்து goose எனவும் ஆண் வாத்து gander எனவும் குறிப்பிடப்படுகின்றன. 

இதே அனாடிடாய் குடும்பத்தின் தொலைதூர உறுப்பினராக இருக்கும் அன்னப் பறவைகள் geese வகை வாத்துகளை விடவும் பெரிதாக வளைந்த கழுத்துகளுடன் காணப்படும்.

#2

Geese வகை வாத்துகளில் 3 விதமான பிரிவுகள் உள்ளன. அன்செர் (Anser) பேரினத்தைச் சேர்ந்த சாம்பல் வாத்துகள், பிரன்டா (Branta) பேரினம் (கருப்பு வாத்துகள்) மற்றும் சென் (Chen) பேரினத்தைச் சேர்ந்த வெள்ளை வாத்துகள். 

இவை gregarious எனப்படும், கூட்டமாக வாழும் வழக்கம் கொண்டவை. இணை சேருதல் போன்றன தாண்டி நட்புறவுடன் ஒரு குடும்பமாக மந்தையாக வசிக்கும். 

#3

ஞாயிறு, 9 மார்ச், 2025

மயில் வனம்: மைசூர் கராஞ்சி ஏரி இயற்கைப் பூங்கா (1)

யிரியல் பூங்காக்களைப் போலவே பறவைப் பண்ணைகளும்  பறவைகளைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. குறிப்பாக அழிந்து வரும் அரிய இனங்கள் பெருகி வளர வழிவகுக்கின்றன. இந்தியாவின் மிகப் பெரிய பறவைப் பண்ணைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது கராஞ்சி ஏரி இயற்கைப் பூங்கா. இருவாச்சி, கிளிகள், கருப்பு அன்னப் பறவைகள் உட்பட்டப் பல வகைப் பறவைகளின் புகலிடமாக உள்ளது. முக்கியமாக மயில்கள்.

#2

இந்தப் பூங்காவுக்கு செல்வது மூன்றாவது முறை. கடந்த முறை சென்று வந்து படங்களை 3 பதிவுகளாகப் பகிர்ந்திருந்தேன். அவற்றின் இணைப்புகள் பதிவின் இறுதியில் உள்ளன. 

உள்ளே நுழையும் போது இரு வரிசையிலும் இருந்த பாக்கு மரங்கள் முன்னை விடவும் நன்கு வளர்ந்து வானை முட்டி நின்று வரவேற்றன.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

அதிவேக வேட்டையன் - வேங்கை ( Cheetah )

 #1

உயிரியல் பெயர்: Acinonyx jubatus
ஆங்கிலப் பெயர்: Cheetah
வேறு பெயர்: சிவிங்கிப்புலி

திமூன்று ஆண்டுகளுக்கு முன் மைசூர் உயிரியல் பூங்கா சென்று வந்த போது “சிங்கம்”, “புலி” மற்றும் “ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகளைப் பற்றித் தகவல்களுடன் படங்களைப் பகிர்ந்திருந்தேன். 

அண்மையில் சென்று போது எடுத்த படங்களின் பாகம் 1 “இங்கே”. தற்போது ஓரிரு விலங்குகள் குறித்தேனும் தகவல்களுடன் பகிர்ந்திட எண்ணம். இப்பதிவில் ஆங்கிலத்தில் Cheetah எனப்படும் வேங்கை அல்லது சிவிங்கிப் புலியைப் பற்றிப் பார்ப்போம்.

#2

வேங்கைகள் சுமார் 40 இலட்சம் வருடங்களாக உயிர் வாழும் இனம் என அறியப்படுகிறது. முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த உயிரினம் இந்தியா உட்பட பல நாடுகளில் அருகி விட்டது. மைசூர் உயிரியல் பூங்காவிலும் கூட மிகப் பரந்த புல்வெளியைக் கொண்ட மைதானத்தின் அடைப்புக்குள்

புதன், 24 ஜூலை, 2024

தரைக் கீரை - தேனீக்கள் தேடி வரும் Common Purslane

 #1

ழகுக்காக வளர்க்க ஆரம்பித்த இந்தத் தாவரம், கீரை வகையைச் சேர்ந்தது என அறிய வர சில காலம் ஆனது. தரைக்கீரை அல்லது பருப்புக்கீரை என அழைக்கப்படும் இவற்றைத் தரையில் ஊன்றினால் ஒன்றரையடி உயரம் வரை மட்டுமே வளரும். தொட்டிகளில் கொடி போலத் தவழ்ந்து இறங்கி அழகாகக் காட்சி தரும். 

#2


இலைகள் சற்று சதைப் பற்றுடன் இருக்கும்.

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

கரும்பருந்து ( Black kite ) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்: Black Kite; உயிரியல் பெயர்: Milvus migrans;
வேறு பெயர்: ஊர்ப்பருந்து

கரும்பருந்து, நடுத்தர அளவிலான, அக்சிபிட்ரிடே (Accipitridae) எனப்படும் பாறு குடும்பத்தைச் சேர்ந்த, கொன்றுண்ணிப் பறவை (bird of prey).  பாறு குடும்ப வகையில் அதிகமான தொகையில் வாழும் பறவைகளாக அறியப்பட்டாலும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் அவற்றின் எண்ணிக்கையில் சரிவும், ஏற்ற இறக்கமும் இருந்துள்ளன. தற்போது உலக அளவில் சுமார் 60 இலட்சம் கரும்பருந்துகள் வாழ்வதாகக் கணக்கிடப் பட்டுள்ளன. 

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கம்புள் கோழி ( White-breasted waterhen ) - பறவை பார்ப்போம்

 கம்புள் கோழி

#1

ஆங்கிலப் பெயர்: White-breasted waterhen 

தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும், இந்தியத் துணைக் கண்டத்திலும் பரவலாகக் காணப்படுகின்றன. நீர்க்கோழி இனத்தைச் சேர்ந்த இப்பறவை சம்புக்கோழி, கானாங்கோழி என்றும் அறியப்படுகிறது. மேல் பாகம் அடர்ந்த நிறத்திலும், முகத்தில் தொடங்கி நெஞ்சு மற்றும் வயிறு வரையிலும் தூய வெண்மை நிறத்திலும் இருக்கும். பிற நீர்க்கோழி இனங்களை விடச் சற்றே துணிச்சலானவை. வாலை செங்குத்தாக நிமிர்த்திக் கொண்டு திறந்தவெளி சதுப்பு நிலங்களிலும், பரபரப்பான சாலையோர வடிகால்கள் அருகிலும் ஒய்யார நடை போடும். 

#2

வியாழன், 20 ஜூலை, 2023

சாம்பல் கதிர்க்குருவி ( Ashy Prinia ) - பறவை பார்ப்போம்

 #1


ஆங்கிலப் பெயர்: Ashy Prinia, Ashy Wren-Warble
உயிரியல் பெயர்: Prinia socialis

சாம்பல் கதிர்க்குருவி 13 முதல் 14 செ.மீ வரையிலான உயரம் கொண்ட, கிளைகளைப் பற்றி அமரும் மற்றுமொரு பாஸரைன் வகை சிறு பறவை. செங்குத்தாக நிற்கும் வால் இவற்றைப் பிற வகை கதிர்க்குருவிகளிடமிருந்து எளிதில் வேறுபடுத்திக் காட்டும்.  

அடிக்கடி எங்கள் தோட்டத்திற்கு வருமாயினும் இவை மரக் கிளைகளில் அமர்ந்து அதிகம் பார்த்ததில்லை. பெரும்பாலும் புல்வெளியில் பூச்சிகளைத் தேடித் தத்தித் தாவியபடி இருக்கும். வேகமாக நகர்ந்தபடியே இருக்கும் இப்பறவையைப் படமெடுப்பது சற்று சிரமமே.

#2

சாதா கதிர்க்குருவிகளைப் போல் இவையும் வலசை செல்லாது. 

வியாழன், 6 ஜூலை, 2023

சாதா கதிர்க்குருவி (Plain Prinia) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்: Plain Prinia)
உயிரியல் பெயர்: Prinia inornata

சாதா கதிர்க்குருவி சுமார் ஐந்து அங்குல உயரத்திலான, கிளைகளைப் பற்றி அமரும் பாசரைன் (Passerine) வகை சிறு பறவை. நல்லத் தெளிவாகக் குரலெழுப்பிப் பாடும். பழக்க வழக்கங்களைக் கொண்டு  பாடும் குருவி, வெண்புருவப் பாடும் குருவி போன்ற வேறு பெயர்களாலும் அறியப்படுகின்றன. 

#2

 வேறு பெயர்கள்: 
சாதா பாடும் குருவி (plain wren-warbler)
வெண்புருவப் பாடும் குருவி (white-browed wren-warbler)

சற்று தைரியமான பறவை. அடிக்கடி புதர்களுக்குள் மறைந்து கொள்ளக் கூடியது ஆயினும், பாடும் போது திறந்தவெளி மரக்கிளைகளில் அமர்ந்தே பாடும்.

வியாழன், 9 மார்ச், 2023

கொண்டலாத்தி ( Eurasian hoopoe ) - பறவை பார்ப்போம்

ஆங்கிலப் பெயர்: Eurasian hoopoe

கொண்டலாத்தி பத்து முதல் பன்னிரெண்டரை அங்குலம் வரை நீளம் கொண்ட நடுத்தர அளவிலான வண்ணமிகு பறவை. தலைப் பகுதியில் இறகுகள் கிரீடம் போன்று அமைந்திருப்பது இதனை எளிதில் வேறுபடுத்திக் காட்டும். 

ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டம், மடகாஸ்கர் பகுதிகளில் காணப்படுகிறது. முன்னொரு காலத்தில் ஒரே இனமாகக் கருத்தப்பட்ட இப்பறவை, பின்னாளில் மூன்று வகையாகப் பார்க்கப்பட்டன:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin