ஞாயிறு, 7 ஜூன், 2020

முதலும் முடிவும்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (73) 
#1
“நம்பிக்கை என்பது விழித்துக் கொள்கிற கனவு.”
_Aristotle


#2
“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது ஒரு பொருட்டேயில்லை.
நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதுதான் விஷயம்.”
_ Brian Tracy


#3
“சிலநேரங்களில் நமக்காக நாம் எழுந்து நின்று பேசும் போது,  நாமே ஆச்சரியமாக உணர்வோம். அதை நான் பரிந்துரைக்கிறேன். வாழ்க்கை மிகக் குறுகியது, அதை சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாது.”
– Demi Lovato

#4
"இரண்டு உள்ளங்கள் ஒரே எண்ணத்துடன்..
இரண்டு இதயங்கள் ஒரே துடிப்புடன்.."
_ John Keats
14 Feb 2020, valentine's day அன்று
ஃப்ளிக்கரில் பதிந்த படம்.. :)!


#5
“முடிவை மனதில் நிறுத்தித் 
தொடங்குங்கள்.”
_Steven Covey


#6 
“மற்ற எல்லாத் திறமைகளையும் போல
நம்பிக்கையும் ஒரு திறமையே!”
 _Storm Jameson
ஃப்ளிக்கர் தளத்தில் எனது பக்கத்தின் 3700++ படங்களில்,
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/albums/72157669489823135
"என் வீட்டுத் தோட்டத்தில்.. - (இயற்கையும் நானும்)"
ஆல்பத்தில் சமீபத்தில் வலையேற்றிய 500_வது படம்....

பூக்கும் மலர்கள், கனியும் காய்கள், பாடும் பறவைகள், சுற்றித் திரியும் அணில்கள், ஆச்சரியப் படுத்தும் பூச்சி வகைகள் என அத்தனையையும் கேமரா சளைக்காமல் பதிந்து வருகிறது :). ஓரளவுக்குப் பொருத்தமான பொன்மொழிகளோடு இங்கே தொகுப்பதும் தொடர்ந்து வருகிறது :)!

***

14 கருத்துகள்:

  1. 500 ஆவது படத்துக்கு, வலைப்பூவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் அன்பு ராமலக்ஷ்மி.

    வண்ணப்பூக்களின் தலையில் மணியான வாசகங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.... அனைத்துமே அழகு.

    தொடரட்டும் உங்களது தொகுப்பு....

    பதிலளிநீக்கு
  3. தெள்ளத் தெளிவான படங்களுக்கு சிந்திக்க வைக்கும் வாசகங்கள்.

    பதிலளிநீக்கு
  4. 500 வது படம் அழகு. வாழ்த்துக்கள்.
    படங்கள் அழகு.
    வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. ஒளிப்படங்கள் மகிழ்ச்சியையும் வாசகங்கள் நம்பிக்கையையும் அளிக்கிறது. இந்தப் பதிவின் ஆறு படங்களும் அழகு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. மகிழ்ச்சி. கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மிக அழகிய காட்சிகள் ....அனைத்தும் அழகு

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin