புதன், 19 ஆகஸ்ட், 2020

181_வது உலக ஒளிப்பட தினம்

ஆகஸ்ட் 19, இன்று 181_வது உலக ஒளிப்படதினம். 
#1
லக ஒளிப்பட தினம் ஒளிப்படக்கலையின் வரலாற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், நிகழ்காலத்தில் கலையைக் கொண்டாடவும், வருங்காலத்திற்கு ஒரு வழித்தடமாக அமையவும் 1839_ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் லூயி டகர் என்பவரின் கண்டுபிடிப்பான டகரியோடைப் எனும் ஒளிப்படக்கலைக்கான வழிமுறையை 9 ஜனவரி 1836 அன்று ஃப்ரெஞ்ச் அகடமி ஆஃப் சயின்ஸ் வெளியிட்டது. சில மாதங்கள் கழித்து பிரான்ஸ் அரசாங்கம் அந்தக் கண்டுபிடிப்பை உலகிற்கு இலவசப் பரிசாக வழங்கியது. அந்த நாளே கடந்த 181 வருடங்களாக உலக ஒளிப்பட தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ன்றைய தினத்திற்காக ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த படங்கள்:

#2
“உங்களது மிக முக்கியமான ஒளிப்படக் கருவி 
உங்களது கண், இதயம் மற்றும் ஆன்மா!”
 Marius Vieth
வீட்டின் முற்றத்திலிருக்கும் மடகாஸ்கர் பாதாம் மரத்தின் கிளைகளின் ஊடாக என்னை வாழ்த்துகிறது உலக ஒளிப்பட தினத்திற்காக, சூரியனின் “ஒளி” :)!


#3
“நல்ல ஒளிப்படத்திற்கான விதிமுறைகள் என்று ஏதுமில்லை.
நல்ல ஒளிப்படங்கள் மட்டுமே உண்டு.”
 _ Ansel Adams


கேமரா என்னும் சொல் லத்தீன் மொழியில் இருட்டு அறை (dark chamber) எனும் பொருள் படும் ‘கேமரா அப்ஸ்க்யூரா’ (camera obscura) எனும்  சொல்லில் இருந்து பெறப்பட்டது.

#4
TLR  (Twin Lens Reflex) Camera, Yashica - D

கி
ரேக்க மொழியில் ஒளிச் சித்திரம் எனும் பொருள் படும்  ஃபோட்டோஸ் க்ராஃபைன் (Photos-Graphein) என்கிற சொல்லில் இருந்து ஃபோட்டோகிராபி எனும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் சர் ஜான் ஃப்ரெடெரிக் வில்லியம் ஹெர்ஷெல் (Sir John Frederick William Herschel).

#
Film winding knob with film speed dial and focusing knob with depth of field scale..

ன் அப்பா உபயோகித்த இந்த யாஷிகா டி கேமராவின் படங்கள் இந்த வருட கேமரா தினமான ஜூன் 29 அன்று ஃப்ளிக்கரில் பதிவதற்காக எடுத்தவை. அப்பாவின் நினைவாகப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் இதனை சமீபமாக ஒவ்வொரு வருடமும் கேமரா தினம் அல்லது ஒளிப்பட தினத்தையொட்டி வெவ்வேறு விதமாகப் படமெடுத்துப் பகிர்ந்து வருகிறேன். 

குடும்பத்தில் அப்பா, பெரியப்பா, சித்தப்பா மற்றும் அத்தைகள் எல்லோருமே இக்கலையில் ஆர்வம் கொண்டிருந்ததோடு சிறந்தும் விளங்கினார்கள். அவர்தம் ஆசியோடு இக்கலையை அன்றாடம் பயின்றும் பழகியும், எடுக்கும் படங்களை ஃப்ளிக்கரில் பதிந்தும் இங்கே தொகுப்பாகப் பகிர்ந்துமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக..!


அனைத்து ஒளிப்படக் கலைஞர்களுக்கும் 
ஒளிபடக் கலை ஆர்வலர்களுக்கும் 
உலக ஒளிப்பட தின வாழ்த்துகள்!
***

12 கருத்துகள்:

  1. அன்பு ராமலக்ஷ்மி,
    வாழ்த்துகள். புகைப்படம் என்றா நினைவுக்கு வருவது,
    நீங்களும்,மற்ற கலைஞர்களும் தான்.
    மேலும் மேலும் நற்படங்கள் எடுக்க வாழ்த்துகள்.
    புகைப்படக் கலையின் சரித்திரம் இனிமை.

    பதிலளிநீக்கு
  2. அப்பா சித்தப்பாவின் ஆர்வம் இரண்டு மடங்கு, நான்கு மடங்காய் உங்களிடம் வந்திருக்கிறது போல.  அப்பா உபயோகித்த அப்போதைய நவீன யாஷிகா கேமிரா அருமை.  புகைப்படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. அழகான்படங்கள்.
    முருங்கை மரத்தில் தேன் சிட்டு படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  4. உலக ஒளிப்பட தினத்தையொட்டி, ஒரு அருமையான புகைப்படக்கலைஞருக்கு வாழ்த்துக்கள்! உங்கள் ஆர்வமும் திறமையும் புகழ் என்னும் சிகரம் நோக்கி என்றும் உயர்ந்திருக்க‌ மனதார வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அனைத்தும் அழகு. புகைப்பட தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin