#1
“காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பார்கள்,
ஆனால் உண்மையில் நீங்கள்தாம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.”
_ Andy Warhol
#2
“ஒவ்வொரு நாளும் அடையும் சிறு முன்னேற்றம்,
ஓர் நாள் பெரும் பலன்களுக்கு வழி வகுக்கும்.”
#3
“நாம் நாளை ஓட்டுகிறோம்,
அல்லது நாள் நம்மை ஓட்டுகிறது.”
#4
“கடிகாரத்தையே கவனித்துக் கொண்டிருக்காதீர்கள்,
அது செய்வதைச் செய்யுங்கள். தொடர்ந்து செல்லுங்கள்.”
_ Sam Levenson
#5
“எது முக்கியமோ
அதில்
கவனத்தைச் செலுத்த வேண்டிய காலம் இது!”
#6
“நிலவுக்குக் குறி வையுங்கள்.
தவறினாலும் நட்சத்திரங்களுக்கு நடுவே கால் பதிப்பீர்கள்!”
- Norman Vincent Peale
** |
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது..]
***
எல்லா வரிகளும் அருமை. வித்தியாசமாக கைக்கடிகாரப் படங்கள் மிக அருமை.
பதிலளிநீக்குஆனால்... நிலவை விட தூரத்தில் அல்லவா நட்சத்திரங்கள் இருக்கின்றன...
நன்றி ஸ்ரீராம். உண்மைதான், நானும் அதை யோசித்தேன்.
நீக்குபிரகாசமான நிலவைக் கைப்பற்றத் தவறினாலும் ‘அப்படியே தாண்டிப் போய்’ நட்சத்திரங்களையாவது வசப்படுத்திட முடியும் எனும் அர்த்தத்தில் சொல்லியிருப்பாரோ நார்மன் வின்சென்ட் :) ?!
அழகான வாட்ச் படங்கள்,
பதிலளிநீக்குஅது சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளை ரசித்தேன்.
நன்றி கோமதிம்மா.
நீக்குகாலக் கண்ணாடியும் பொன்மொழிகளும் அழகாய்க் கரம் கோர்க்கின்றன ராமலெக்ஷ்மி !
பதிலளிநீக்குநன்றி தேனம்மை.
நீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோம்மா. தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
நீக்கு