ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

ஒற்றை நூலிழை

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (78)
#1
"மழையின் துளிகள் 
மண்ணுக்கு மட்டுமல்ல 
மனதுக்கும் ஆறுதல்"
_ Moulima Chatterjee


#2
உங்கள் இதயம் சொல்லும் வழியில் செல்லாதிருக்க 
எந்த ஒரு காரணமும் இல்லை.

_Steve Jobs 

#3
"உண்மையில் எந்த வார்த்தைகளை விடவும் 
உரக்கப் பேசும் சக்தி வாய்ந்தது

இயற்கையின் மெளனம்."

#4

"மற்றவர்களுக்குக் கை கொடுத்துத் தூக்கி விடுவதன் மூலமே 
நாமும் வளர்கிறோம்."

#5
“நம்பிக்கை எனும் ஒற்றை நூலிழை 
இப்போது வரையிலும் 
மிக வலிமையான ஒன்று."
_Beth K. Vogt

#6
“நாம் கற்க வேண்டியதை நமக்குக் கற்பிக்காமல் 
எதுவும் அத்தனை எளிதில் போய் விடுவதில்லை.”
 _ Pema Chodron

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]
***

12 கருத்துகள்:

  1. சிறப்பான சிந்தனைகள். பகிர்ந்து கொண்ட பொருத்தமான படங்களும் அழகு. தொடரட்டும் உங்கள் சேமிப்பு.

    பதிலளிநீக்கு
  2. படங்களையோ, வரிகளையா...    எதை அதிகம் ரசிப்பது?  இரண்டையும்தான்.  ஆனாலும் ஒன்றோடொன்று போட்டி போடுகிறது.

    பதிலளிநீக்கு
  3. படங்களும், அதற்கு நீங்கள கொடுத்து இருக்கும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. அந்த செம்பருத்தி பூவை அப்படியே கை நீட்டி பறித்து விடலாம் போலிருக்கிறதே.... too good!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin