என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (81)
பறவை பார்ப்போம் - பாகம் (54)
ஜூன் மாதத்தில் ‘திசை மாறிய பறவைகள்’ பதிவில் பெற்றோரைக் காணாத் தவித்த இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அதே பறவைதான் இது. அடுத்த ஓரிரு வாரங்களும் எங்கள் குடியிருப்பின் மரங்களில் அங்கும் இங்குமாகத் தனித்து அல்லாடிக் கொண்டிருந்த போது எடுத்த படங்கள். கால இடைவெளி விட்டு ஒவ்வொரு படமாக ஃப்ளிக்கரில் பதிந்த போது தோழி ஒருவர் கேட்டார் “அபூர்வமாய்க் காணக் கிடைக்கும் இருவாச்சிப் பறவை இப்போதெல்லாம் அடிக்கடி உங்கள் தோட்டத்திற்கு வருகிறதா?” என்று. ‘இல்லை’, ஒரே நேரத்தில் எடுத்தவற்றைதான் இடைவெளி விட்டுப் பகிர்வதாகச் சொன்னேன். பிறகு யோசித்துப் பார்க்கையில் சென்ற வருடமும் இந்த வருடமும் சரியாக ஜூன் மாதத்தில் இருவாச்சி ஜோடி எங்கள் குடியிருப்பின் கடைசி வீட்டுத் தோட்டத்து மரத்தில் கூடு கட்டி, குஞ்சுகள் வெளிவந்ததும் சில வாரங்களில் விட்டுவிட்டுப் போயிருப்பது கவனத்திற்கு வந்தது. இப்போது இந்தக் குஞ்சுப் பறவையும் சில காலம் இங்கே சுற்றித் திரிந்து காணாது போய் விட்டது. இனி இவற்றை அடுத்த ஜுன் மாதம் எதிர்பார்க்கலாமோ?
விதம் விதமாக போஸ் கொடுத்த இருவாச்சியின் படங்களுடன் பொன்மொழிகளின் தமிழாக்கம்:
#2
“அழகென்பது உங்களை நீங்களே ஆராதிப்பது.
_ Zoe Kravitz.
“நான் அழகாய் இருக்கிறேனா?”
#3
வாழ்க்கை என்பதே
புதிய சவால்களைச் சந்திப்பதுதான்!
#4
குறிக்கோளை அடையும் பொருட்டு
எது உங்கள் ஆன்மாவைக் கனன்று கொண்டிருக்கச் செய்கிறதோ
அது குறித்து அச்சம் கொள்ளாதீர்கள்!
#5
“தொலைந்து போகவில்லையெனில்
ஒருபோதும் நாம்
புதிய பாதையைக்
கண்டடைய மாட்டோம்.”
_ Joan Littlewood
#6
ஓங்கி ஒலிக்கட்டும் உங்கள் குரல்,
ஆனால்
எதிரொலியாக அல்ல!
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடரும்..
***
அருமை!
பதிலளிநீக்குநன்றி அமைதி அப்பா.
நீக்குஇருவாச்சிப் பறவையும் அவை சொன்ன வாழ்வியல் சிந்தனையும் மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள்,வாசகங்கள் இரண்டுமே அருமை!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குசிறப்பான தொகுப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு