#1
புதுத் தளிர்களை எதிர் நோக்கி நிற்கும் மரங்கள்
கற்பிக்கின்றன
இறந்த காலத்தை எப்படிக் கடந்து வருவதென்பதை..
#2
“உறுதியான வேர்களைக் கொண்ட மரங்கள்
புயல்களைப் புன்னகையோடு எதிர்கொள்கின்றன!”
#3.
நீ இருக்கிற இடம் உனக்குப் பிடிக்கவில்லையா,
நகர்ந்திடு.
அங்கேயே நிற்க நீயொன்றும் மரமில்லை.
#4
மழையின்றி எதுவும் வளர்வதில்லை.
வாழ்வில் உயர
முதலில் புயல்களை அரவணைக்கக் கற்றிட வேண்டும்.
#5
நினைவிலிருக்கட்டும்,
தங்களது இப்போதைய நிலைமை
தாங்கள் சென்றடைய வேண்டிய இறுதி நிலை அல்ல.
சிறந்தது இனிமேல்தான் வர உள்ளது.
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]
***
வரிகளும் அருமை. படங்களும் அருமை. வேர்களைக் கொண்ட மரம் படமும், கடைசிப் படமும் மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅனைத்து படங்களும் அதற்கு கொடுத்த வாசகங்களும் அருமை.
பதிலளிநீக்குஅணிலாருக்கு பிடித்த இடம் கிடைக்கட்டும்.
சிறந்தது வரட்டும் சீக்கீரம்.
அணிலார் பிடித்த இடத்துக்கு நகர்ந்திடுவதில் வல்லவரே:).
நீக்குநன்றி கோமதிம்மா.
மிகவும் அருமையான, ரசனையான படங்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅவைகள் வரிகள் அல்ல, வாழ்வின் வழிகள். அருமையான படங்களும் அதனடியில் பதித்துவைத்த சிந்தனை மலர்களும்..
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குவார்த்தைகளும் , படங்களும் கதை சொல்லுகின்றன ...அருமை
பதிலளிநீக்குநன்றி அனு.
நீக்குbest photos and messages
பதிலளிநீக்கு