ஞாயிறு, 28 ஜூன், 2020

நாட்களை எண்ணாதே..

கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம். குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்’ என்றொரு பழமொழி உண்டு. அதே போல வாழைப்பழமும் அவற்றுக்கும் பிடித்தமானவை. சென்ற டிசம்பரில் லெபக்ஷி சென்று வந்த அனுபவத்தைப் படங்களுடன் 4 பாகங்களாகப் பகிர்ந்திருந்தேன்: https://tamilamudam.blogspot.com/search/label/Lepakshi இந்த வானரங்களின் படங்கள் அங்கே எடுத்தவை. ஃப்ளிக்கர் தளத்தில் பகிர்ந்தவை. இவை போக மேலும் சில வானரங்களை விதம் விதமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறேன்.  அவற்றை பிறிதொரு ஞாயிறு பார்க்கலாம். இந்தப் பதிவில் பெரிய குரங்கின் படமொன்றும் ஒரு மிக அழகிய குட்டிக் குரங்கின் 4 படங்களும்....


#1
"அழகு என்பது 
பரிசுத்தமான களங்கமற்ற 
ஆன்மாவினால் வெளிப்படுவது."
_  Vishal Arora


#2
"சாதாரண விஷயங்களை 
அசாதாரணக் கண்களால் காணுங்கள்."
_Vico Magistretti



#3
“அதிர்ஷ்டத்திற்கும் சில விதிமுறைகள் உள்ளன. 
விவேகமுடையவர்களுக்கு எல்லாமே தேடிவந்த நல்வாய்ப்புகள் அல்ல.
அவர்கள் தம் திறமையால் அதிர்ஷ்டத்திற்கு உதவுகிறார்கள்.”
_Balthasar Gracian

#4
சில நேரங்களில் நாம் செய்ய முடிந்த சிறப்பான விஷயங்கள்: சிந்திக்காமல், கவலைப் படாமல், 
கற்பனை செய்யாமல், ஆவேசம் கொள்ளாமல் இருப்பது. 
மூச்சை இழுத்து விட்டு நம்பிக்கை வையுங்கள், 
எல்லாம் சரியாகி நலமே விளையும் என்று.

#5
“நாட்களை எண்ணாதீர்கள். 
பின்னாளில் எண்ணிப் பார்க்கும் அளவுக்கு 
நாட்களை அர்த்தமுள்ளாதாக ஆக்கிடுங்கள்!”

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]

***

16 கருத்துகள்:

  1. ஆஹா..... அத்தனை படங்களுமே அழகு. யானைகளை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று சொல்வார்கள். குரங்குகளும் அப்படியே! அவற்றின் சிறு சிறு சில்மிஷங்களும், வால்தனங்களும் ரசிக்கக் கூடியவை.

    தேர்ந்தெடுத்துப் பகிர்ந்த வாசகங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். ஆம், யானைகளைப் போல குரங்குகளையும் பார்க்கச் சலிக்காது.

      நீக்கு
  2. குரங்கார் படங்கள் எல்லாம் அழகு. வாசகங்கள் அருமை.
    கடைசி வாசகம் மிக அருமை.
    சேமிப்பு தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வானரங்களை மிகவும் துல்லியமாக படம் பிடித்திருக்கிறீர்கள். முகத்தின் அத்தனை வரிகளும் அசத்துகின்றன! அனைத்து வாசகங்களும் சிறப்பான தேர்வு!

    பதிலளிநீக்கு
  4. // மூச்சை இழுத்து விட்டு நம்பிக்கை வையுங்கள் , எல்லாம் சரியாகி நலமே விளையும் என்று //

    உண்மை.  இப்போதைக்கு அவசியமான வார்த்தைகள்.

    படங்களும் வாசகங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைய சூழலை நினைத்தபடியேதான் பதிந்தேன். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. மிக அழகிய படங்களும் , வாசகங்களும் ...

    ஒவ்வொரு படமும் மனதை மயக்குகிறது ...

    உங்கள் பதிவு பார்த்து இந்த லேபக்ஷி போகும் எண்ணம் வந்தது ...சூழல் சரியாகவும் அங்கு செல்ல வேண்டும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் சென்று வாருங்கள் அனு. உங்கள் பயண ஆர்வம் பாராட்டுக்குரியது. நன்றி.

      நீக்கு
  6. துல்லியமான படங்களும், பொருத்தமான வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமாக இருக்கிறீர்களா? நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி:).

      நன்றி கவிநயா.

      நீக்கு
  7. அழகும் அர்த்தமும் நிறைந்த வாசகங்கள். அசாதாரமாணக் கண்களுக்கு அழகிய படங்கள் எடுப்பது இயல்பானது.:)

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin