79 வருடப் பாரம்பரியத்துடன் இயங்கி வந்த கல்கி வாரயிதழ் தன் அச்சுப் பிரதியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருப்பது அதனைப் பல்லாண்டுகளாக வாசித்து வரும் வாசகர்களுக்கு மன வருத்தத்தைத் தந்துள்ளது. கல்கியின் 41 இதழ்களில் எனது பங்களிப்பு இருந்திருப்பதை நன்றியுடன் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்.
ஒளிப்படக் கலைஞராக என்னைப் பற்றிய முதன் முதல் பத்திரிகை அறிமுகம், கடந்த ஒன்பது வருடத்தைய தீபாவளி மலர்களில் எனது ஒளிப்படங்கள், 6 ஒளிப்படக் கலைஞர்கள் மற்றும் 6 ஒவியர்கள் பற்றிய எனது அறிமுகக் கட்டுரைகள், சக கலைஞர்கள் பலரது ஒளிப்படங்களை தீபாவளி மலர்களில் இடம் பெறச் செய்வதற்கான வாய்ப்பு, நான்கு முறைகள் எனது ஒளிப்படங்களின் இருபக்கத் தொகுப்பு, நான் எழுதிய நூல் மதிப்புரைகள் 4, எனது சிறுகதைத் தொகுப்பு குறித்து எழுத்தாளர் சீத்தா வெங்கடேஷின் மதிப்புரை மற்றும் எனது 12 கவிதைகள் வெளியானது... இவை அனைத்தும் தலைமை உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா தந்த தொடர் ஊக்கத்தினால் சாத்தியமானது. அவருக்கு என் அன்பும் நன்றியும்!
ஆரம்பத்தில் வெளியான கவிதைகளைத் தேர்வு செய்த அப்போதைய தலைமை உதவி ஆசிரியர் கதிர்பாரதிக்கும், மேலும் இரு கவிதைகளை வெளியிட்ட மங்கையர் மலர் மற்றும் 5 ஆலய தரிசனக் கட்டுரைகளை வெளியிட்ட கல்கி தீபம் இதழ்களுக்கும் நன்றி.
காலத்தோடு நாம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இணையத்தில் தொடர்ந்து கல்கி வெளியாகும் என்பது ஆறுதல். விரைவில் மீண்டும் அச்சிலும் பார்க்கும் நாள் வருமென நம்புவோம்.

***
தமிழகத்தில் இருந்தவரை கல்கி படிப்பது எனது பழக்கம் மிக தரமான பத்திரிக்கை கல்கி என்றாலே என் நினைவிற்கு வருவது அதில் ராஜாஜி எழுதிய மகாபாரதம்தான் அதை தொகுத்து பைண்ட் செய்து வைத்திருந்தேன் அதை ஒரு நண்பணுக்கு இரவலாக தந்த போது அதை தொலைத்துவிட்டான்... நான் அடைந்த வருத்ததிற்கு அளவே இல்லை காரணம் அதில் வந்தபடங்களுடன் அதை படிப்பது என்பது இளம் வயதில் எனக்கு மிகவும் பிடித்தது.. அதன் பின் ராஜாஜி எழுதிய மகாபாரதத்தை புத்தகத்தை வாங்கி படித்தாலும் கல்கியில் வந்த தொடரை படித்து போல மன திருப்தி இல்லை...
பதிலளிநீக்குஅப்படிபட்ட இதழ் இப்போது அச்சுவடிவில் வருவது நிற்க போகிறது என்பதை பா.ராகவன் பதில்வில் படித்து அறிந்தேன் இப்போது இங்கேயேயும் மீண்ட்டும் படித்து வருத்தம் அடைகிறேன்
தங்கள் கருத்துக்கு நன்றி.
நீக்குகல்கி இதழ் நிறுத்தப்படுவது வருத்தமான செய்தி...
பதிலளிநீக்குஇருந்தாலும் அவரவர் சூழ்நிலை அவரவர்க்கு..
உண்மைதான். தங்கள் கருத்துக்கு நன்றி.
நீக்குகல்கி அச்சு வடிவில் இனிமேல் வராது எனும் செய்தி வருத்தத்தை தருகிறது. சூழல் சரியாகி மீண்டும் அச்சு வடிவில் கழுகி வந்தால் நல்லது.
பதிலளிநீக்குவரும் என நம்புவோம். நன்றி வெங்கட்.
நீக்குஅச்சு ஊடகங்களுக்கு(ம்) சிரமமான நேரம்...
பதிலளிநீக்குஎல்லாத் துறைகளுமே சிரமத்தில் இருக்கும் நேரம் இது. கருத்துக்கு நன்றி தனபாலன்.
நீக்குகல்கி பத்திரிக்கை இனி வராது என்றது வருத்தம், இனி இணையத்தில் தொடரும் என்றது ஆறுதல்.
பதிலளிநீக்குமீண்டும் கைகளில் தவழும் நாள் வர வேண்டும்.
உங்கள் படங்கள் , கவிதைகள் இடப்பெற்ற நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை.
ஆம். அதுவரையிலும் இணையத்தில் தொடரலாம்.
நீக்குநன்றி கோமதிம்மா.
கல்கி தனது அச்சுப்பதிப்பை நிறுத்திக் கொண்டிருப்பது அதிர்ச்சிதான். ஆனால் காலத்தின் கட்டாயம். 41 இதழ்களில் உங்கள் படைப்பு வந்திருக்கிறது என்பது ஒரு சாதனைதான்.
பதிலளிநீக்குதொடர்ந்து கல்கி வாங்கி கொண்டிருந்த நான் கடந்த ஒன்றரை வருடங்களாக நிறுத்தி இருந்தேன்.
நீங்கள் பல வருடங்களாக வாங்கி வந்ததை அறிவேன். காலத்தின் கட்டாயமே. நன்றி ஸ்ரீராம்.
நீக்குகல்கி பதிப்பு நிறுத்தப்பட்டாலும் இதுவரை கல்கி இதழில் சாதனைகள் செய்த நீங்கள் தொடர்ந்து இணையத்தில் அதே சாதனைகள் செய்து புகழ்பெற என் இனிய வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குஊடகத்துறை பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியநிலையில் உள்ளது வேதனையே. பொன்னியின் செல்வன் மூலமாக அறிமுகமான வகையில் எங்கள் தாத்தா காலம் முதல் கல்கியின் ரசிகர்கள் ஆனோம். எங்கள் தாத்தா படித்த, அப்போது கல்கியில் வெளியான பொன்னியின் செல்வன் அனைத்தும் நூற்கட்டாக்கம் செய்யப்பட்டு, இன்னும் எங்கள் இல்ல நூலகத்தில் உள்ளது.
பதிலளிநீக்குஉங்களின் எழுத்துச்சாதனை தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
நீக்குகல்கி அச்சு இதழ் நிறுத்தப்படுவதை உங்கள் தளத்தின் மூலமே அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குவருத்தமளிக்கிறது என்றாலும், தவிர்க்க முடியாததும் உண்மை. கல்கிக்கு மட்டும் ஏற்பட்ட நிலையல்ல, அச்சு இதழ்களாக உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இதே நிலை தான்.
நிறுத்தப்படும் கால அளவில் மட்டுமே வித்யாசம்.
நான் அவ்வப்போது கல்கி படித்ததுண்டு அவ்வளவே! உங்களின் வருத்தம் உணர முடிகிறது.
உண்மைதான், பல அச்சு இதழ்கள் தற்போது இணையத்தில் மட்டுமே வெளியாகின்றன. ஆயினும் முக்கால் நூற்றாண்டுக்கும் மேல் வெளிவந்த பத்திரிகையின் முடிவு வருத்தம் அளித்துள்ளது. கருத்துக்கு நன்றி கிரி.
நீக்குகல்கி நின்றது எனக்கு புது செய்தி. உங்கள் 41 படைப்புகள் வந்தது அபார சாதனை !!!
பதிலளிநீக்குநன்றி தேனம்மை.
நீக்குகல்கி அச்சு இதழ் நிறுத்தப்படுவது என்பது வருத்தமளிக்கும் செய்தி. உங்களுக்கும்,கல்கிக்குமான தொடர்பு சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி பானும்மா.
நீக்கு