ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

கனிகள்.. இயற்கையின் கற்கண்டுகள்..

ர் முடக்கமாகியுள்ள இந்த வேளையில் புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே அவ்வப்போது மேற்கொள்ளும் சிறு பயணங்கள் (ஃபோட்டோ வாக்) இப்போது சாத்தியப்படவில்லை. இயற்கையும், தோட்டமும், தேடி வரும் பறவைகளும் தொய்வின்றிப் புகைப்படத் தொகுப்புக்கு உதவி வருகின்றன என்றாலும் ஒரே விதமாகச் செல்ல வேண்டாமென நினைத்த போது கோடை சீசனில் கிடைத்த பழங்கள் கை கொடுத்தன. ‘டேபிள் டாப்’ புகைப்படங்களாக ஃப்ளிக்கரில் பகிர்ந்தவை உங்கள் பார்வைக்கு.. 


ரம்புட்டான்
#1

#2
நாவல் பழம்


#3
மங்குஸ்தான்




#4
ரம்புட்டான்

#5
மங்குஸ்தான்




#6
நாவல் கனி


#7
என் வீட்டுத் தோட்டத்து.. 
முதல் பப்பாளி..


#8
லிச்சி


#9
அத்திப் பழம் (Fresh Figs)


#10
சீதாப் பழம்

#11
சாறு மினுங்கும் 
விட்டமின் ‘சி’ ததும்பும்
ஆரஞ்சு

இப்படங்களில் சில சில 24-120mm, சில 50mm லென்ஸ் உபயோகித்து எடுத்தவையாகும். இவற்றை எடுக்க ஆரம்பித்த பின் ஆர்வம் அதிகமாக டேபிள் டாப் படங்களுக்கென்றே சிறிய லைட் பாக்ஸ் ஒன்றும் வாங்கியுள்ளேன். ஒரு சில அதனுள் வைத்து எடுத்தவை. வரும் நாட்களில் மேலும் பல வகைப் பொருட்களுடன், டேபிள் டாப் படங்களைத் தொகுப்பாக ‘ஞாயிறு’ பதிவுகளில் எதிர்பார்க்கலாம் :).


***

12 கருத்துகள்:

  1. புகைப்படங்கள் அனைத்தும் அழகு! மங்குஸ்தான் பழம் புகைப்படத்துக்காக செட் பண்ணிய விதத்தில் மிக அழகாகத் தெரிகிறது!!

    பதிலளிநீக்கு
  2. படங்கள் எல்லாம் அழகு.மங்குஸ்தான் படம் அழகு.

    பதிலளிநீக்கு
  3. எல்லாப் படங்களும் அழகு.   ஆரஞ்சு மினுமினுவென்கிறது.

    பதிலளிநீக்கு
  4. நாவில் நீர் ஊற வைக்கும் புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
  5. சுவையான படங்கள் ....ருசிக்கிறது ...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin