ஞாயிறு, 31 மே, 2020

பெரிய நிழல்கள்

#1
“பயம், நாம் ஆற்றும் எதிர்வினை.
தைரியம், நாம் எடுக்கும் முடிவு!”

#2
“இந்த உலகில் தன்னை விடவும் உங்களை அதிகமாக நேசிப்பது நாய் மட்டுமே..”
_ Josh Billings

#3
“எதற்கெல்லாம் அஞ்சக் கூடாதென்பதை 
அறிந்திருப்பதே தைரியம்.” 
Plato


#4
"உலகம் அருமையானதாகி விடும் 
ஒவ்வொருவரும் நாயினைப் போல் 
நிபந்தனையற்ற அன்பினைச் செலுத்தும் 
திறனைக் கொண்டிருந்தால்.."


#5
“நீங்கள் சந்தோஷத்தை வாங்கவே முடியாது 
என சொன்னவர்கள் 
நாய்க்குட்டிகளை மறந்து விட்டவர்கள்..”
_ Gene Hill

#6
“கவலைப் படாதிருங்கள். 
பெரும்பாலும் சிறிய விஷயங்களுக்குப் 
பெரிய நிழல்களைக் கொடுப்பது 
கவலை.”


*
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
**

12 கருத்துகள்:

  1. வரிகள் மிகவும் அருமை.  படங்கள் எப்போதும்போல் அருமை.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் தான் எத்தனை துல்லியம்...!

    வாசகங்களும் அருமை...

    பதிலளிநீக்கு
  3. படங்களும் தேர்ந்தெடுத்துப் பகிர்ந்த வாசகங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் எல்லாம் அருமை.
    வளர்ப்பு செல்லங்களைப் பார்த்தால் இதை வளர்ப்பவர்கள் மிகவும் சந்தோஷபடுவார்கள்.
    வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. படத்தில் இருக்கும் நாய்க்குட்டி (ஆறு மாதங்களாக இருந்தபோது எடுத்த படங்கள்) என் தங்கை வீட்டு வளப்புச் செல்லம். பெயர் ‘மைலோ’ :).

      நீக்கு
  5. படங்கள் மிக மிக அருமை.
    அன்பு ராமலக்ஷ்மி வாசகங்களும் அருமை.
    செல்லங்கள் எப்பொழுதுமே அன்பைத்தான் சொரிகின்றன.
    அவைகளின் கண்ணில் தெரியும் அன்புக்கு முன்னால்
    நாமெல்லாம் ஒன்றும் இல்லை.
    மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  6. பல பக்கங்களில் விளக்க வேண்டிய கருணை, அன்பு, நன்றி, அச்சம் தவிர்த்தல் போன்ற கருத்துக்களை இந்தக் கண்கள் கற்றுத் தருகின்றன. உயிர்ப்பான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர்கள் உங்களது இது போன்ற கருத்துகளே இப்படத் தொகுப்புகளைப் பொன்மொழிகளோடு தொடரச் செய்து கொண்டிருக்கிறது. மிக்க நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin