ஊர் முடக்கம் தொடங்கிய நாளிலிருந்து குடியிருப்பு வளாகத்தில் நடைப் பயிற்சி செய்பவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டது. முதலிரு மாதங்கள் பலரும் வெளியில் வரவே யோசித்தார்கள். அப்போது கை கொடுத்தது அவரவர் வீட்டு மொட்டை மாடிகள். இப்போது நட்புகளோடு சேர்ந்து முகக் கவசத்துடன் முன் போலவே நடைப் பயிற்சி செய்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ முகக் கவசத்துடன் நடைப் பயிற்சி செய்வது சீரான சுவாசத்திற்கு இடையூறாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஆகையால் மொட்டை மாடியிலேயே தொடருகிறேன். அப்படிச் செல்லும் வேளையில் பின்பக்கமிருக்கும் வயல் வெளியில் கடந்த 4,5 மாதங்களாக நடக்கும் உழவு வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடிந்தது. அதன் மேல் சுவாரஸ்யமும் ஏற்பட்டது. பரந்து விரிந்த வானம், பஞ்சுப் பஞ்சாக மேகக் கூட்டம், பச்சை வயல், செம்மண் பூமி, அதில் உழவு, நடவு என அவ்வப்போது படமாக்கிய சிலபல காட்சிகளின் தொகுப்பு இங்கே.
#1
#2
#3
#1
“உங்கள் மனநிலை எப்படி இருப்பினும்,
இயற்கைக்கு அருகே எப்போதும்
அமைதியாக உணர்வீர்கள்!”
#2
பரம்படித்த நிலம்
(மண் பரப்பில் உள்ள கட்டிகளை உடைத்து சீராக மண்ணைப் பரவச் செய்தல்) |
#3
“உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?”
என்றொரு பழமொழி உண்டு.
அதை அறிந்தவராய் இருக்கிறார்
இந்தப் பெரியவர்..
#4
“சோம்பேறிகள் உறங்குகையில்
நீ
ஆழ உழுதிடு.”
_Benjamin Franklin
#5
“பயனளிக்கும் எந்த செயலும்
அத்தனை எளிதானதல்ல”
_Nicholas Sparks
முதன் முறை உழுத நாளில் கிளறப்பட்ட மண்ணில் கிடைக்கக் கூடிய சிறு உயிரினங்களை உண்ண ஏராளமான பருந்துகள் வானில் வட்டமிட்டன.
#6
#7
பசுமையை வீழ்த்தி வளரும்
கட்டிடக்காடு..
#8
மேகக் கூட்டமும்
சீராக்கப் பட்ட செம்மண் பூமியும்
மீண்டும் ஓரிரு மாத இடைவெளிக்குப் பின்...
#9
உழுவார் உலகத்தார்க்கு ஆணி
Chisel Plouging.
ABOVE TURN..
வட்டமடித்துத் திரும்பி
ஒரு பயிருக்காக வயலின் ஒரு பகுதியை
சீர் செய்யும் வேலையில்..
இந்த முறை உழும்போது பருந்துகளைக் காணவில்லை. ஆனால் புறாக்கள் பயமின்றி வண்டியின் பின்னாலேயே சென்று மண் கிளறப்பட்டதும் வெளிவரும் புழுக்களை உண்ணப் போட்டி போட்டன.
#10
#11
விதைப் படுகை
('பரம்படித்தலின் முதன்மையான நோக்கமே மண்கட்டிகளை உடைத்து விதைப்படுகையாகப் பயன்படுவதற்கு ஏற்றபடி
மண்ணை நுண்சீராக்குவதே!'
Source: Wikipedia)
|
விதைகளைப் பறவைகள் கொத்தி விடக் கூடாதென்பதற்காக இப்படியொரு ஏற்பாடு. காலி கண்ணாடிப் புட்டிகளையும், தட்டையான கற்களையும் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அது காற்றில் Wind Chime போல இடைவிடாமல் ஒலி எழுப்பியபடி இருக்கிறது. (zoom செய்து எடுத்த படம்.)
#12
#13
ஆடிப் பட்டம் தேடி விதை
படங்கள் அனைத்துமே அழகு.
பதிலளிநீக்குபசுமையை அழித்து கட்டப்படும் கட்டிடங்கள் - எங்கேயும் இதே! வேதனை தான்.
நன்றி வெங்கட்.
நீக்குஇவைகள் எல்லாம் இனி படங்களில் மட்டும் பார்க்க நேரிடுமோ எனும் கவலை வருகிறது...
பதிலளிநீக்குபசுமையைப் பாதுகாப்போமா என்பது கேள்விக் குறியே. நன்றி தனபாலன்.
நீக்குBeautiful pictures with suitable captions.
பதிலளிநீக்குநன்றி பானும்மா.
நீக்குஅருமையான படங்கள்.
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் அழகு, துல்லியம்.
இங்கு மொட்டைமாடியில் நடக்க முடியாது, மொட்டை மாடி கிடையாது யாருக்கும் பூட்டி வைத்து இருக்கிறார்கள்.
பழைய வீட்டு மொட்டை மாடிகளில் எடுத்த படங்களை நினைத்துக் கொள்வேன்.
பாட்டில் கீழ் கல் கட்டி வைத்து இருப்பது அருமை, காற்றில் கல் பாட்டிலில் மோதி ஒலி எழுப்பும் சத்தம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பாதுகாப்புக் காரணங்களுக்காக மொட்டைமாடியை பூட்டிதான் வைக்கிறார்கள்.
நீக்குஆம், பாட்டிலில் கல் மோதும் சத்தம் இனிமையாக ஒலிக்கிறது.
நன்றி கோமதிம்மா.