உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்து எல்லோருக்கும் நிறைய பாடங்களைச் சொல்லித் தந்து செல்கிறது 2020. நம் வாழ்நாளிலே இப்படியொரு ஆண்டை நாம் சந்தித்ததேயில்லை. அறிந்தவர், அறியாதவர், உறவுகள், நட்புகள் எனப் பலரும் பொருளாதாரம், உடல் நலம், நெருங்கியவர்களின் உயிரிழப்பு எனப் பல்வேறு பிரச்சனைகளிலும் துயரங்களிலும் மாட்டிக் கொண்ட காலக் கட்டம். இனி வரும் நாட்களிலேனும் இக்கட்டான இச்சூழல் மாறுமெனும் நம்பிக்கையோடு 2021_ல் அடி எடுத்து வைப்போமாக.
கவலைப் படவும் கவனமாக இருக்கவும் அன்றாட வாழ்வில் நம் நேரத்தையும் முக்கியத்துவத்தையும் பிற விஷயங்கள் ஆக்ரமித்துக் கொண்டு விட்ட சூழலில் அதிகமாக வலைப்பதிவுகளில் (blog posts), ஈடுபாடு காட்ட முடியா விட்டாலும் பத்திரிகை - மின்னிதழ்களில் சில கவிதைகள், நூல் மதிப்புரைகள், ஃப்ளிக்கரில் தொடர்ச்சியாக ஒளிப்படப் பதிவுகள் என எதைச் செய்ய முடிந்ததோ அதைச் செய்த வரையில் திருப்தியே.
வேகமாகப் பின்னோக்கி ஒரு பார்வை:
* 2008_ல் தொடங்கிய முத்துச்சரம் வருட ஆரம்பத்தில் ஆயிரமாவது பதிவைக் கடந்தது..
* சராசரியாக மாதம் 5 பதிவுகளேனும் தர முடிந்தது..
* ஒளிப்படப் பயணம் உற்சாகம் குறையாது தொடர கல்கி அளித்த அங்கீகாரம்..
பத்திரிகைப் படைப்புகளாக,
* தி இந்து, காமதேனு இதழின் நிழற்சாலையில்.. 2 கவிதைகள்:
மற்றும் 27 ஜனவரி இதழில்..
*நவீன விருட்சம் 113_வது இதழில்.. ‘இருவாச்சி விருந்து’ கவிதை
* கீற்று மின்னிதழில்.. ‘இது எங்கள் தேசம்!?’ கவிதை..
* சொல்வனம் மின்னிதழில்.. ‘முற்றுப் பெறா புதினம்’ கவிதை
நூல் மதிப்புரைகள்:
திரு. க.அம்சப்ரியாவின் மூன்று நூல்களுக்கு..
*கல்கியில்.. ‘கல்வி நூறு சிந்தனைகள்’
*முனைவர் இரா பிரேமா தொகுத்து இந்த ஆண்டு வெளியான ‘உடைபடும் மெளனங்கள்’ நூலில் நான் எழுதிய ‘அவளும் நோக்கினாள்’ கதையும் இடம் பெற்றது.. [கடந்த அரைநூற்றாண்டில் எழுதப்பட்ட பெண்களின் வலியைப் பேசும் 30 கதைகளைக் கொண்டுள்ளது இந்நூல். ]
பயணக் கட்டுரைகளுக்கு, சென்ற ஆண்டின் இறுதியில் சென்ற பயணங்களே உதவின.
*வீரபத்திரர் ஆலயம், லெபக்ஷி, ஆந்திரா (4 பதிவுகளாக..)
*கோட்டை ஸ்ரீ பிரஸன்ன வெங்கடரமணா கோயில்
மற்றும் லாக் டவுன் ஆரம்பமாகும் முன் சென்ற
ஒளிப்படங்கள் எடுப்பதற்கென்று பயணங்களை மேற்கொள்ள இயலாத சூழலில், இயற்கை மிகப் பெரிய ஆறுதலைத் தந்தது. அழகழகான மலர்களை அள்ளி வழங்கிய பூமிக்கும், விதம் விதமான பறவைகளை அனுப்பித் தந்த வானத்திற்கும் கோடானு கோடி நன்றி.
‘வாழ்நாளில் ஒரு முறையாவது கண்டு விட மாட்டோமா? படம் எடுத்து விட மாட்டோமா?’ எனக் கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் கானகத்தில் தேடித் திரியும் ‘இருவாச்சி’யில் இருந்து, சிறு வயதில் அன்றாடம் பார்த்த, அதன் பின் கண்ணிலே சிக்கவே சிக்காத ‘சிட்டுக் குருவி’ வரை இந்த வருடத்தில் எங்கள் தோட்டத்தில் புதிதாகப் படமாக்கிய பறவை வகைகள் 4,5 இருக்கும். குறிப்பாக மாங்குயில், தையல்சிட்டு, இந்தியக் கருஞ்சிட்டு, வெண் தொண்டைச் சில்லை, மீன் கொத்திப் பறவை ஆகியன.
மற்றபடி வழக்கமாக வரும் இரட்டைவால் குருவிகள், செம்போத்துகள், மைனாக்கள், மணிப்புறாக்கள், செந்தூர்ப் பைங்கிளிகள், செங்குதச் சின்னான்கள், செம்மீசைச் சின்னான்கள், தேன் சிட்டுக்கள், புள்ளிச் சில்லைகள், காட்டுச் சிலம்பன்கள், பூச்சி பிடிப்பான்கள், வெண் கன்னக் குக்குறுவான்கள், குறிப்பிட்ட மாதங்களில் தலை காட்டும் தூங்கணாங்குருவிகள், ஆசியக் குயில்கள் இவற்றோடு கிளைக்குக் கிளைத் தாவித் திரியும் அணில்கள், படபடக்கும் பட்டாம்பூச்சிகள் என நித்தம் நித்தம் வருகை புரிந்து என்னை மகிழ்வித்த விருந்தாளிகளின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. இதனால் என் ஒளிப்படக் கருவிக்கும் ஓய்வில்லாத வேலை கொடுக்க முடிந்தது. ஃப்ளிக்கரிலும் தடங்கல் இல்லாது படங்களை வழங்க முடிந்தது.
அப்படங்களைத் தொகுத்து அவ்வப்போது இங்கே ‘வாழ்வியல் சிந்தனைகள்’ பகுப்பின் கீழ் 16 பதிவுகளாகத் தந்திருக்கிறேன். அவை ‘பறவை பார்ப்போம்’ மற்றும் ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ பகுப்புகளின் கீழும் அடங்கும்.
*என் வீட்டுத் தோட்டத்தை ஓர் மழைநாளில் காணொளியாக்கிப் பகிர்ந்த பதிவொன்றும் இங்கே.
*வல்லமை மின்னிதழில் படக்கவிதைப் போட்டிகளுக்குத் தேர்வான 16 படங்களின் தொகுப்பு, சென்ற பதிவில்.. இங்கே.
எது நடந்தாலும் நிற்காத இயற்கையின் சுழற்சி, அடுத்தடுத்து வாழ்வில் நகர நமக்குக் கற்றுத் தருகிறது. நகருவோம் இந்த ஆண்டை விட்டு. வருகிற ஆண்டு எல்லோருக்கும் எல்லா வளங்களையும் நிம்மதியையும் ஆரோக்கியமான சூழலையும் வழங்கட்டுமாக!
நண்பர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
**
தூறல்: 39
***
உங்களுக்கும் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குபாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநன்றி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நன்றி ஸ்ரீராம்.
நீக்குவரும் ஆண்டில் இன்னும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நன்றி வெங்கட்.
நீக்குஇனிய ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஉங்களுடைய நிழற்பட ஆர்வம் தொடர்ந்து கொண்டு இருப்பது மிக மகிழ்ச்சி. நமக்குப் பிடித்த, திருப்தியளிக்கும் செயல் என்றுமே அலுக்காது.
உண்மைதான். அலுப்பு ஏற்படுவதில்லை என்பதோடு நம்மை உற்சாகமாக வைத்திருப்பதிலும் அவற்றிற்கு பங்குண்டு:). நன்றி கிரி.
நீக்கு
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
மிக்க நன்றி.
நீக்குஅத்தனை படங்களும் அழகு அன்பு ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குதாங்களும் குடும்பத்தாரும் என்றும் நலமாக இருக்க வேண்டும்
இத்தனை இதழ்களிலும் பாராட்டுகள் சேர்ந்திருப்பது மிக மிக அருமை மா. உங்கள் உழைப்பு மேலும் மேலும் ஓங்க வேண்டும்.
மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்கு