வியாழன், 6 பிப்ரவரி, 2014

தேனம்மை லெக்ஷ்மணன் பார்வையில்.. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு

அடைமழை சிறுகதைத் தொகுப்பு குறித்து தேனம்மை லெஷ்மணன் தனது தளத்தில் பதிந்த விமர்சனத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

ரு சிறுகதைத் தொகுப்பு செக்ஸ், கிரைம், திரில்லர், வல்கர் இல்லாமல் சிறப்பாக இருக்க முடியுமா. அட்லீஸ்ட் ஒரு கெட்ட வார்த்தை.. இல்லன்னா காமம் பற்றிய கசா முசா கருத்துக்கள்.. இதெல்லாம் இல்லாம  சிறப்பான மனிதநேயமிக்க சிறுகதைகள் வாசிக்கணும்னா நீங்க அடைமழையை தேர்ந்தெடுக்கலாம்.

நீங்க மட்டுமில்ல உங்க குடும்பம்,  ( குழந்தைகள், அப்பா, அம்மா ) படிக்க நண்பர்களுக்குப் பரிசளிக்க, பெருமையா புத்தக அலமாரியில் அடுக்கி வைத்துக் கொள்ளன்னு இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன்.

மொத்தம் 13 சிறுகதைகள். நிறைய கதைகளை நான் வலைத்தளத்திலேயே படித்திருக்கிறேன்.

வசந்தா குழந்தைத் தொழிலாளி பற்றிய கதை .. பொட்டலம் பள்ளியில் குழந்தைகளுக்கு நிகழும் ஒரு எதிர்பாராத அவலம் பற்றியது.

வயலை நேசிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என உணர்த்திய கதை வயலோடு உறவாடி,

ஈரம் கண்ணைக் கசிய வைத்த கதை. அதே போல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலியும் நிம்மதி இன்மையை உண்டு செய்த கதை. பாசமும், அடைக்கோழியும்  கூட அந்த வகைதான்.

எல்லாவற்றிலும் குழந்தைகள் இருக்கிறார்கள். மையக் கருவாக.. அல்லது இயலாமையின் பங்குதாரிகளாக., கதை கேட்பவர்களாக..

பயணம் திரில்லாகத் தொடங்கி முடிவில் சிரிப்பை வரவழைத்த கதை. 

இந்த உலகம் அழகானது எதிர்கால உலகத்தின் மேல் மனித நேயத்தின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்த கதை.இதுவும் கடந்து போகுமும் அந்த ரகம்.

எல்லாக் கதைகளும் கிராமம் பற்றியும் வயலும் வாழ்வும் பற்றியும் பேசுகின்றன. நகரத்தில் குடி இருக்க நேர்ந்த போதும் சொந்த ஊர் மண்ணில் நம் ஓவ்வொருவரின் வேரும் புதைந்திருப்பதை உணர வைத்த கதைகள்.

அடை மழையும், அடையாளமும், சிரிப்பும் இதில் அற்புதமான கதைகள். 

அடைமழையில் தன்னைத் தொலைக்காத போலீஸ்காரரும், அடையாளத்தில் தொலைந்த தன் பெயரை உச்சரித்துப் பார்க்கும் மூர்த்தியும், யாரும் தன்னைப் பார்த்தே சிரிக்கின்றார்களோ என்று கருதும் சிங்காரம் தன் சிரிப்பை மீட்டெடுப்பதுமான அற்புதங்கள் நிகழ்கின்றன.

அதிலும் சிரிப்பு மிக நுண்ணிய உணர்வுகளை வரி வரியாகப் படம் பிடித்த கதை. மிகச் சிறப்பான கதையும் கூட. முதல் தடவையில் பெரிதாகத் தோன்றாவிடினும் நம் ஒவ்வொருவரிலும் அந்தச் சிங்காரம் உறைந்திருப்பதைக் காண இயலும். 

பண்ணை வீடு, ஜல் ஜல் எனும் சலங்கை ஒலியோடு மாட்டு வண்டி, நெல் வயல், தோட்டம் எல்லாம் மாயக்காரன் தூரிகை போல எளிதில் படம் பிடித்துக் காட்டுகிறார் ராமலெக்ஷ்மி.

எளிய மனிதர்களைப் பற்றி அவர்களின் வாழ்வியல் நெருக்கடிகளை, துயரங்களைப் பற்றி, எதிர் கொள்ள நேர்ந்த  தீர்வுகளைப் பற்றி விவரிப்போடு வந்துள்ளது இந்தத் தொகுப்பு. பேருக்கேனும் ஓரிரு காதல் கதைகள் இருக்கலாம் என்று தேடிப்பார்த்தேன்.. இல்லவே இல்லை.. :)

ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும்போது , தன்னைச் சூழ்ந்து வாழ்ந்திருந்த மனிதர்களின் அன்றாட நிலைமையைப் பகர்வதும் அதற்கான தீர்வை நோக்கி நகர்வதுமான சிந்தனைகளே தன்னை ஆக்கிரமித்திருந்ததால் இது பற்றி எழுதுவதே தன்னுடைய பெருவிருப்பமாக இருந்ததாகக் குறிப்பிட்டார் ராமலெக்ஷ்மி..

அருமையான தொகுப்பு படித்துப் பாருங்கள்.

அகநாழிகையின் வெளியீடு.

விலை ரூ. 100.

*
http://honeylaksh.blogspot.in/2014/02/blog-post_4.html
அடைமழை நூலுக்கான முதல் விமர்சனத்துக்கும், ஒவ்வொரு கதையையும் குறித்த கருத்துகளுக்கும் நன்றி தேனம்மை:)!
**

இணையத்தில் வாங்கிட.. இங்கே செல்லவும்.

மற்றும் கிடைக்குமிடம்:
அகநாழிகை புத்தக உலகம், 390,
அண்ணா சாலை, KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15.

தபாலில் வாங்கிட: aganazhigai@gmail.com
**

14 கருத்துகள்:

 1. தேனம்மை அவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தேனம்மை விமர்சனம் அருமை.
  தேனம்மைக்கு வாழ்த்துக்கள்.
  வயலோடு உறவாடி கதையை மறக்க முடியாது.

  உங்களுக்கு வாழ்த்துக்கள் ராமல்க்ஷமி..

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான விமர்சனம்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. @கோமதி அரசு,

  நன்றி கோமதிம்மா, நினைவில் நிற்கும் கதையைப் குறிப்பிட்டிருப்பதற்கும்:).

  பதிலளிநீக்கு
 5. நல்ல விமர்சன்ம் மேலும்,மேலுமாய் சிறப்பான படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. இன்னும் மூணு கதைதானே பாக்கி, படிச்சுட்டு விமர்சனம் எழுதலாம்னு இருந்தேன். ஒருவாரமா திருப்பூர், புதுக்கோட்டை, அரியலூர்னு பயணமா போனதுல தேனக்கா முந்திட்டாங்க. அவ்வ்வ்வ்! இதைத்தாண்டி எப்படி அழகா பிரசண்ட் பண்றதுன்னுல்லா இப்ப யோசிக்க வேண்டியிருக்குது! (திங்கள் என் தளத்துல போட்றுவேன்!) வெகு அருமையா அலசி, ரசிச்சு விமர்சனம் எழுதியிருக்கற தேனக்காவுக்கு பாராட்டுகளும், அப்படி எழுதத் தோதா அருமையான படைப்புகளை வழங்கிய உங்களுக்கு நல்வாழ்த்துகளும்!

  பதிலளிநீக்கு
 7. மிக அருமையான விமர்சனம்
  உங்களுக்கும் தேனக்காவுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin