#1.
'சமூகம் என்பது திறந்த மனதோடும்
பகிரப்பட்ட நம்பிக்கையோடும்
வாழும் ஒரு கலை.'
#2.
வானுக்கும் நதிக்கும் நடுவே,
தனித்த பறவை
தன் சுதந்திரத்தைக் கொண்டாடிப் பறக்கிறது.
#3.
'உலகத்தின் இரைச்சல்களுக்கு அப்பால்தான்
#4.
சில பந்தங்கள் ஒரே வானில் பறப்பதாலும்,
ஒரே மரத்தில் தங்குவதாலும்
உருவாகின்றன.
#5.
பாதையைத் தொலைக்க நேர்ந்தால் பரவாயில்லை;
அதை மீண்டும் கண்டடையும் தன்னம்பிக்கையை மட்டும்
இழந்துவிடக் கூடாது.
#6.
'கனவுகளுக்கு உலகம் போதுமான அளவு பரந்தது; அதை மாற்றும் துணிவுக்கு மிக மிகச் சிறியது.'
#7.
தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருந்தால், நமக்கான பாதை நம்மைத் தேடி வரும்.
#8.
இருக்கும் இடம் அல்ல,
பார்க்கும் கோணமே
எல்லாவற்றையும் மாற்றுகிறது.
*
பறவை பார்ப்போம் - பாகம்: 145
**








தனித்த பறவையின் சுதந்திரம் கவர்கிறது. ஆறாவது எனக்கு சரியாய் விளங்கவில்லை.
பதிலளிநீக்குபடங்களையும் வரிகளையும் ரசித்தேன்.
துணிவுடன் இருந்தால் உலகத்தை மாற்றுவது எளிது எனும் பொருளில் சொல்லப்பட்டது. உண்மையில் எளிதல்லதான்:). ஆனாலும் இதுபோன்ற வாசகங்கள் நமக்குத் தூண்டுதலாக இருக்கின்றன.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
கஷ்டம் தான். நன்றி.
நீக்குபறவைகள் அத்தனையும் அழகு.
பதிலளிநீக்குஅவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் மனிதனும். ஓடி கொண்டே இருக்கவேண்டும் ஆறும்.
அழகாகச் சொல்லியுள்ளீர்கள். கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்கு