புதன், 1 ஜனவரி, 2025

ஃப்ளிக்கர் 5000 - 2024 குறிப்பேடு - தூறல்: 45

இந்த வருடம் சராசரியாக வாரம் ஒரு பதிவு.. 

வாழ்வியல் சிந்தனைகளுடனான ஞாயிறு படத் தொகுப்புகள் 30; மொழிபெயர்ப்பு கவிதைகள் 5; நூல் மதிப்புரை 1; பயணங்கள் குறித்த பதிவுகள்.. என.

2008_ல் ஆரம்பித்த ஃப்ளிக்கர் தளத்தின் பட ஓடை (photostream) 5000 படங்களைக் கடந்தது இவ்வருடம் நவம்பர் மாதத்தில்.. 

5000 படங்களைக் கடந்து விட்டதை சில தினங்கள் கழித்தே கவனித்தேன். பலரின் பாராட்டுகளைப் பெற்றுத் தந்த திருமலை நாயக்கர் மகாலின் இந்தப் படமே அந்த இடத்தைப் பிடித்திருந்தது.

டிசம்பர் முதல் வாரத்தில் “எனது ஃப்ளிக்கர் வருடம் 2024” என ஃப்ளிக்கர் தளம் அனுப்பி வைத்தத் தகவல் குறிப்பு:

EXPLORE பக்கத்தில் தேர்வாகி, அதிக பக்கப் பார்வைகளைப் பெற்ற படமாக தேசியக் கொடி அமைந்ததில் மகிழ்ச்சி. 

டிசம்பர் 31 வரையிலுமாக 353 படங்கள் பதிந்திருக்கிறேன். கடந்த சில வருடங்களாக அந்தந்த வருடப் படங்களை தனி ஆல்பமாக தொகுத்து வருகிறேன். 2024 ஆல்பத்தின் இணைப்பு: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/albums/72177720313761689/

ஆக, ஆண்டு இறுதியில் 5072 படங்களுடன் 69 இலட்சம் பக்கப் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.. எனது பட ஓடை. 

சென்ற வருட புள்ளி விவரம் இங்கே.


ஒவ்வொரு மாதமும் ஃப்ளிக்கர் தளம் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும் stats புள்ளி விவரங்களும் ஊக்கத்திற்கு ஒரு காரணி. அவற்றை இங்கும் தொகுத்து வைக்கிறேன் எனது சேமிப்பிற்காக:

#ஜனவரி 2024

#பிப்ரவரி
#மார்ச்
#மே
#ஜூன்
#ஜூலை
#ஆகஸ்ட்
#செப்டம்பர்

#அதிகம் பயணப்படங்களைப் பகிர்ந்த அக்டோபர்

#நவம்பர்

*

முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம் ஒன்று, இவ்வருடத்தில்.., பதிவு இங்கே.

*

இப்பயணத்தின் ஒரு பாகமாக உடன் வரும் நட்புகள் அனைவருக்கும் என் நன்றி.

நேரமின்மை மற்றும் பல காரணங்களால் எழுத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கவனம் செலுத்த இயலவில்லை ஆயினும் ஒரு துறையிலேனும் தொடர்ந்து செயல்பட்டு வருவதில் சின்ன திருப்தி. 

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


***



4 கருத்துகள்:

  1. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.  என்னதான் மற்ற துறைகளில் கவனம் செலுத்தினாலும் மனதுக்குப் பிடித்த துறையில் சிறந்து விளங்குவது வழக்கம்தானே...  உங்கள் புகைபபட பயணம் தொடரட்டும்.  

    அந்த திருமலை நாயக்கர் மஹால் படத்தை ரொம்ப ரசித்தேன்.  நான் எடுக்க நினைத்திருந்தால் அதன் மேற்புற விளிம்புகளும் வரவேண்டுமோ என்று குழம்பி இருப்பேன்.  உள்ளே மஹால், நடுவே உயரே வானம்...   அருமை.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  3. உங்கள் புகைப்பட ஆர்வம் நல்ல விஷயம். என்னதான் நாம் அஷ்டாவதானியாக இருந்தாலும் நமக்கு மிகவும் பிடித்த ஒன்றில் அதிக நாட்டம் செலுத்துவது இயல்புதானே. அதுவும் பெண்களில் இப்படிப் புகைய்படக் கலையில் வல்லுநராக இருப்பது கொஞ்சம் அரிதுதான். அது உங்களுக்கு வசப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம் தொடருங்கள் உங்கள் பயணத்தை.

    உங்கள் படங்களின் கோணங்களை நான் ரசிப்பதுண்டு. அப்படி இந்த மஹால்களின் படங்களும் அதிலும் வானத்துடன் இருப்பதும், பறவை சிறகுகளை விரித்துப் பறக்க யத்தனிக்கும்? படமும் செம ஷாட்ஸ்.

    புத்தாண்டிலும் உங்கள் புகைப்பட பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. உங்கள் புகைப்பட பயணம் இனிதாக தொடரட்டும்.
    புத்தாண்டு வாழ்த்துகள்.
    5000 படத்தை கடந்து மேலும் மேலும் வெற்றி நடை போடுங்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin